நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
முகப்பு / கனடாவிற்குப் புதியவர்கள்
கனடாவிற்குப் புதிதாக வருபவர்கள் ஏன் வங்கிச் சேவைக்கு TD-ஐ தேர்வு செய்கிறார்கள்
உங்கள் பயணத்தில் உங்களை வழிநடத்துகிறது
உங்களின் புதிய வாழ்க்கையைத் தொடர நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, கனடாவில் வங்கிச்சேவையைப் பற்றிய நம்பிக்கையைப் பெற உங்களுக்கு உதவ விரும்புகிறோம். அதனால்தான் TD-இல் பணியாற்றும் நாங்கள் பின்வருவனவற்றில் உங்களுக்கு உதவுகிறோம்:
நீங்கள் கனடாவிற்குக் குடிபெயரத் திட்டமிடுதல்
சர்வதேச மாணவர் GIC திட்டம்
Applying and participating in the TD International Student GIC program can help you meet your proof of financial support requirements for your Canadian study permit application.
நீங்கள் தொடங்க உதவுவதற்கான தகவல்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கனடாவிற்குப் புதியவர்கள் பின்வருபவர்களாகக் கருதப்படலாம்:
- நிரந்தக் குடியிருப்பாளர்கள்,
- அகதிகள், மற்றும்
- தற்காலிகக் குடியிருப்பாளர்கள் (மாணவர்கள், பணியாளர்கள் அல்லது தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்கள்). 2
புதியவர் என்றால் 5 ஆண்டுகளுக்குள் கனடாவில் குடியேறியவர்.
காசோலைக் கணக்கு தான் நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்துகின்ற வங்கிக் கணக்காகும், அதில் தான் உங்கள் அன்றாட வங்கிச் சேவை செயல்களை நீங்கள் செய்ய முடியும். காசோலைக் கணக்குடன் கூடுதலாக, நீங்கள் சிறிது பணத்தை ஒதுக்கி வைப்பதற்கு ஒரு சேமிப்புக் கணக்கையும் பயன்படுத்தலாம்.
நீங்கள் கனடாவில் குடியமரத் தொடங்கியவுடன், உங்கள் தேவைகள் மாறலாம் மற்றும் பிற கணக்குகள் உங்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்கலாம்.
ஆம், நீங்கள் ஆன்லைனில் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும். எனினும், நீங்கள் TD கனடாவிற்குப் புதியவர்கள் வங்கிச் சேவைத் தொகுப்பின் ஆதாயத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க உங்கள் உள்ளூர் TD கிளைக்கு நேரில் செல்ல ஒரு நியமன சந்திப்புக்கு நீங்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டியிருக்கும்.
நீங்கள் தற்போது சீனா அல்லது இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு கணக்கை அமைக்க உதவிபெற எங்களை அழைக்கலாம். எனினும், உங்கள் TD வங்கிக் கணக்கைச் செயல்படுத்துவதற்கு ஒரு TD கிளைக்குச் செல்ல, உங்கள் ஆரம்ப அமைவில் இருந்து உங்களுக்கு 75 நாட்கள் அவகாசம் இருக்கும்.
எங்களை அழைக்கும்போது கனடிய இம்மிக்ரேஷன் விசா இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
- சீனா: இலவசமாக அழையுங்கள் 1-855-537-5355
- இந்தியா: இலவசமாக அழையுங்கள் 416-351-0613
நீங்கள் கனடா வந்து சேர்ந்ததும், உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்த ஒரு TD வங்கிக் கிளைக்குச் செல்லவும்.
கனடாவில் வங்கிக் கணக்கைத் தொடங்க, நீங்கள் ஒரு TD தனிப்பட்ட வங்கியாளரைச் சந்திக்க இங்கே ஒரு அப்பாயின்ட்மென்ட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம், அதே சமயம் மோசடி மற்றும் அடையாளத் திருட்டுக்கு ஆட்படுவதைத் தவிர்க்க நீங்களும் பல விஷயங்களைச் செய்ய முடியும். விழிப்புணர்வு மற்றும் நல்ல ஆன்லைன் பழக்கவழக்கங்கள் மூலம், நீங்கள் மோசடி முயற்சிகளைக் கண்டறிந்து, அவை நிகழும் முன்பே உங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உங்களால் கணிசமாகக் குறைக்க முடியும்.
புதியவர்களுக்கான மேலும் சில தகவல்கள்
தொடர்பில் இருங்கள்
ஒரு ஆலோசகருடன் பேசுங்கள்