நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
TD சர்வதேச மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பு1
நீங்கள் கனடாவில் படிக்கும் சர்வதேச மாணவரா?1 உங்களின் வங்கிச்சேவைத் தேவைகளுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம், எனவே உங்கள் நிதிகள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம், மேலும் உங்கள் கல்வியில் கவனம் செலுத்தலாம். புதிய TD சர்வதேச மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பைப் பற்றி இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.
TD சர்வதேச மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பில் என்ன அடங்கியுள்ளது?
நீங்கள் ஒரு தகுதிபெற்ற மாணவராக இருந்தால்1, நீங்கள் TD மாணவர் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும்போது, TD Rewards Visa* அட்டைக்கு அங்கீகரிக்கப்படும்போது, மேலும் உங்கள் விருப்பப்படி சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கும்போது $600 வரை 2 பெறலாம். நீங்கள் மூன்று தயாரிப்புகளையும் ஒன்றாக இணைக்கும்போது, 1-வருட Amazon Prime Student மெம்பர்ஷிப் மற்றும் போனஸ் Starbucks® வெகுமதிகளைப் பெறுவீர்கள்.
வங்கிச் சேவைக்கு TD-ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
இன்றே சேமிக்கத் தொடங்குங்கள்
ஒரு சர்வதேச மாணவராக, உங்கள் இலக்குகள் எதுவாக இருந்தாலும் இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். நீங்கள் நிலைகொள்ள உதவுவதற்கு எந்தச் சேமிப்புக் கணக்கு உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகிறது என்பதைக் கண்டறியுங்கள். அதோடு, 6 மாதங்களுக்கு 0.25% போனஸ் வட்டி விகிதத்தைப் பெறுங்கள்.4
இந்த வங்கிச்சேவைத் தொகுப்பிற்கு நான் தகுதி பெறுகிறேனா?1
TD சர்வதேச மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பிற்குத் தகுதி பெற, நீங்கள் கட்டாயம்:
-
நீங்கள் வசிக்கின்ற மாகாணத்தில் அல்லது பிராந்தியத்தில் கணக்கைத் தொடங்கும் சமயத்தில் குறைந்தபட்ச வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்
-
கனடா அரசாங்கத்திடம் இருந்து பெற்ற உங்கள் படிப்பு அனுமதியை வழங்க வேண்டும் (எ.கா., IMM படிவம் 1442, 1208, 1102)
-
கனடாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மேல் உயர்நிலைக் கல்வியில் சேர்ந்துள்ள மாணவராக இருக்க வேண்டும், சேர்க்கைச் சான்றைக் கொண்டிருக்க வேண்டும்
-
கியூபெக்கில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், கியூபெக் ஏற்புச் சான்றிதழை (Quebec Acceptance Certificate, CAQ) வழங்க வேண்டும். உங்களிடம் வரி செலுத்துவோர் அடையாள எண் (Taxpayer Identification Number, TIN) இருந்தால், அதை இதற்கு முன் வழங்கியிருக்கவில்லை என்றால், உங்கள் வருகையின் போது அதை வழங்க வேண்டும்.
-
பின்வரும் தனிப்பட்ட அடையாள ஆவணங்களில் 1-ஐ வழங்க வேண்டும்:
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
- கனடிய ஓட்டுநர் உரிமம்
- கனடிய அரசாங்கத்தின் அடையாள அட்டை
குறிப்பு: பிற அடையாள ஆவணங்களும் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். விவரங்களுக்கு ஒரு TD கிளைக்குச் செல்லவும்.
உங்கள் TD சர்வதேச
மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பைப் பெறத் தயாராக இருக்கிறீர்களா?
கூடுதல் தகவல்கள்
பயனுள்ள கட்டுரைகள்
விண்ணப்பிப்பதற்கான வழிகள்
ஒரு வங்கிச்சேவை நிபுணரைச் சந்தியுங்கள்