ஒரு ஆலோசகருடன் பேசுங்கள்


உங்கள் வணிக வங்கிச்சேவைத் தேவைகளுக்கு TD உதவ முடியும்​​​​​​​

ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது முதல் எதிர்காலத்தில் அதை நன்கு வளர்த்து நிர்வகிப்பது வரை, உங்கள் வணிகத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வங்கிச்சேவை ஆலோசனைகளையும், உங்கள் சிறு வணிகத்திற்குப் பொருத்தமான வங்கித் தீர்வுகளையும் TD வழங்குகிறது.

உங்களைப் போன்ற தொழில்முனைவோருக்கு TD உதவ முடியும்

  • நிபுணத்துவ ஆதரவு

    நீங்கள் எங்கு வணிகம் செய்கிறீர்களோ அங்கெல்லாம் உங்கள் வணிக வங்கிச்சேவைப் பயணத்தைத் தொடங்க உங்களுக்கு உதவுவதற்காகவே TD வணிக வங்கிச்சேவை நிபுணர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர்.

  • வசதியான வங்கிச்சேவை

    TD-இல் நீங்கள் பின்வரும் வழிகளில் வங்கிச்சேவையைப் பெறலாம்: இணையம் வழியாக, தொலைபேசி மூலமாக, TD செயலி மூலமாக அல்லது ஒரு வங்கிக் கிளைக்கு நேரில் செல்வதன் மூலமாக.

  • தொழிற்துறை நிபுணத்துவம்

    ஒவ்வொரு தொழிற்துறைக்கும் தனிப்பட்ட வங்கிச்சேவைத் தேவைகள் உள்ளன, மேலும் எங்கள் சிறு வணிகத்திற்கான கணக்கு மேலாளர் (Account Manager Small Business, AMSB) அவற்றுக்கு உதவ முடியும்.

  • பல்வேறு மொழிகளில் ஆலோசனை வழங்கப்படுகிறது

    உங்களின் வணிக வங்கிச்சேவைத் தேவைகளில் உங்களுக்கு உதவிட, பல்வேறு மொழிகளில் ஆதரவைப் பெறுங்கள்.

நீங்கள் தொடங்குவதற்கு உதவும் வசதியான வங்கிச்சேவைத் தீர்வுகள்

சரியான வங்கிச்சேவைத் தீர்வைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் வணிகத்தை நன்றாகத் தொடங்க உங்களுக்கு உதவுவதற்கான ஒரு வழிகளில் ஒன்றாகும்.


TD வணிகக் கணக்குகள்

எங்களின் மிகவும் பிரபலமான மூன்று சிறு வணிக வங்கிச்சேவைக் கணக்குகள் பற்றி இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

  • TD வரம்பற்ற வணிகத் திட்டம்

    உங்கள் வணிகத்திற்கான எங்கள் மிகவும் நெகிழ்வான வங்கித் திட்டம்; இதில் அதிக அம்சங்கள் உள்ளன

    • $125 மாதாந்திரக் கட்டணம் (நீங்கள் குறைந்தபட்சம் $65,000 தினசரி இருப்புத்தொகையைப் பராமரிக்கும்போது கட்டணத் தள்ளுபடியுடன் $0​​​​​​)
    • வரம்பற்ற வைப்புகள்
    • TD® Aeroplan® Visa* வணிக அட்டை அல்லது TD வணிகப் பயண விசா அட்டைக்கு ஆண்டுக் கட்டணத் தள்ளுபடி
    • வரம்பற்ற பரிவர்த்தனைகள்
    • இலவச Interac e-Transfer® பரிவர்த்தனைகள்
  • TD தினசரி வணிகத் திட்டம் A

    தினசரி வணிக வங்கிச்சேவைக்கான பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டம்

    • $19.00 மாதாந்திரக் கட்டணம் (நீங்கள் குறைந்தபட்சம் $20,000 தினசரி இருப்புத்தொகையைப் பராமரிக்கும்போது கட்டணத் தள்ளுபடியுடன் $0​​​​​​)
    • 50 வைப்புகள்​​​​​​​
    • 20 பரிவர்த்தனைகள்
  • TD அடிப்படை வணிகத் திட்டம்

    ஒரு சில மாதாந்திரப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

    • $5.00 மாதாந்திரக் கட்டணம்
    • 5 வைப்புகள்​​​​​​​
    • 5 பரிவர்த்தனைகள்

பிற TD தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

  • வணிகக் கடன் அட்டைகள்

    உங்கள் வணிகச் செலவுகளை நிர்வகித்து, எங்களின் கேஷ்பேக், பயண வெகுமதிகள் அல்லது குறைந்த வட்டி விகித கடன் அட்டைகள் மூலம் உங்கள் வணிகக் கிரெடிட்டை உருவாக்க உதவுகின்றன.

  • வணிக மிகை எடுப்புப் பாதுகாப்பு

    TD வணிக மிகை எடுப்புப் பாதுகாப்பானது, உங்கள் வணிகக் காசோலைக் கணக்கில் உள்ள பற்றாக்குறைகளை உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வரம்பு வரை ஈடுசெய்ய உதவுகிறது.

  • பேமெண்ட்டுகளைப் பெறுதலும் செய்தலும்​​​​​​​

    பணத்தை விரைவாக அனுப்ப மற்றும் பெறுவதற்கான விருப்பத்தேர்வுகளுடன் உங்கள் பணப்புழக்கத்தை நிர்வகியுங்கள், மேலும் பில்கள் மற்றும் இன்வாய்ஸ்களுக்குத் திறம்பட பணம் செலுத்துங்கள்.

  • TD வர்த்தகத் தீர்வுகள்

    உங்கள் வணிகம் வளர்கையில் அதன் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக் கூடிய எங்களின் நெகிழ்வான, இணையவழி அல்லது நேரடிப் பணம் செலுத்தும் தீர்வுகளை ஆராயுங்கள்.

உங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கான சாத்தியமான யோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

ஒரு வணிகத்தைத் தொடங்குவது வெகுமதியளிப்பதாகவும், அதோடு சவாலானதாகவும் இருக்கலாம். கனடாவில் புதிதாக ஒரு வணிகத்தைத் தொடங்க விரும்பும் நீங்கள், மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் வணிக யோசனையை செயல்படுத்துவதற்கு முன், உங்கள் யோசனை எவ்வளவு வலுவாக இருக்க முடியுமோ அவ்வளவு வலுவானதாக இருக்க சிறிது நேரம் ஆராய்ச்சி செய்ய செலவிடுங்கள். உங்கள் பதில்களில் நேர்மையாக இருங்கள், மேலும் முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்:

  • உங்கள் யோசனைக்கான சந்தை இருக்கிறதா?
  • உங்கள் போட்டியாளர்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள்?
  • உங்களிடம் ஒரு வணிகத் திட்டம் உள்ளதா?
  • உங்கள் யோசனையின் பலம், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்ன?
  • அனைவராலும் எளிதில் வாங்கக்கூடிய தன்மையைக் கருத்தில் கொண்டீர்களா, மேலும் பணப்புழக்கத்தை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?

ஒரு புதியவராக நீங்கள் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமாகும், அவற்றில் ஒரு வணிகத்தை சட்டப்பூர்வமாகச் சொந்தமாக வைத்து நடத்தும் உங்கள் திறனைப் புரிந்துகொள்வதும் அடங்கும்.

கனடாவிற்கு புதியவராக உங்கள் வணிகத்தைத் தொடங்க உதவ, கனடா அரசாங்கம் நிறைய பயனுள்ள கூடுதல் தகவல்களை வழங்குகிறது.


எழுதப்பட்ட வணிகத் திட்டத்தை உங்களிடம் வைத்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் யோசனையை கோடிட்டுக் காட்டும் ஆவணத்தை வைத்திருப்பது, உங்கள் இலக்குகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை விளக்குகிறது, இது உங்கள் வணிகத்தை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல், நீங்கள் பணத்தைத் தேடும்போது பயனுள்ளதாக இருக்கும்.

எங்கள் வணிகத் திட்ட டெம்ப்ளேட்டைப் பதிவிறக்குவதைக் கருத்தில் கொள்ளுங்கள், இது தயாரிப்பு மற்றும் சேவைத் தகவல், போட்டிப் பகுப்பாய்வு, தொடங்குவதற்கான நிதிச் சாத்தியம் மற்றும் பலவற்றை விளக்குகிறது.


எந்தவொரு வணிகத்தையும் தொடங்கும்போது பணத்தைக் கண்டறிதல் மற்றும் பணப்புழக்கத்தை நிர்வகித்தல் ஆகியவை கருத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.

தொடங்குவதற்கு உங்களுக்கு உதவ, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில பொதுவான கேள்விகள்:

உங்கள் நிதித் தேவைகள் தொடர்பான கூடுதல் உதவிக்கு, எங்களின் கடன் பெறுவதற்கான விருப்பத்தேர்வுகளைப் பாருங்கள்.


TD சிறு வணிகத்திற்கான கணக்கு மேலாளர் (AMSB), தொழில்முனைவோருக்கான வங்கிச்சேவைத் தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். AMSB உடன் சேர்ந்து செயல்படுவது என்பது, வங்கிச்சேவை ஆலோசனைகளை வழங்குவதற்கும் தகவலறிந்த பரிந்துரைகளை வழங்குவதற்கும், உங்களைப் புரிந்துகொள்வதற்கும், உங்கள் வணிகச் சவால்கள் மற்றும் உங்களின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் நேரம் செலவிடும் ஒருவரைக் கொண்டிருப்பது போல் ஆகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒரு வணிகத்தை நடத்தும்போது, ​​ஒரு வணிக வங்கிச்சேவைக் கணக்கைத் தொடங்குவது பல நன்மைகளை வழங்குகிறது. உங்களின் தனிப்பட்ட மற்றும் வணிக வங்கிச்சேவையைப் வெவ்வேறாகப் பிரித்து வைப்பதன் மூலம், உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் பணப்புழக்கத்தைக் கண்காணித்து உங்கள் நிதிகளை நீங்கள் எளிதாக நிர்வகிக்கலாம். உங்கள் வணிக வரிகளைத் தாக்கல் செய்யத் தேவையான நிதித் தகவல்களையும் பரிவர்த்தனைகளையும் இது விரைவாகச் சேகரிப்பதால், வரி தாக்கல் செய்வதற்கான நேரத்தையும் நீங்கள் சேமிக்கலாம்.


உங்கள் வணிகத்தின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் பல TD சிறு வணிக வங்கிச்சேவைக் கணக்குகளை வழங்குகிறோம். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​உங்கள் பரிவர்த்தனைகளின் நிகழ்வெண்ணிக்கை மற்றும் நீங்கள் பராமரிக்க எதிர்பார்க்கும் இருப்புத்தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கணக்குப் பரிந்துரைகளுக்கு, நீங்கள் எங்கள் கணக்குகளைப் பார்வையிடலாம் அல்லது எங்கள் கணக்குத் தேர்ந்தெடுப்ப்புக் கருவியைப் பயன்படுத்தலாம்.


TD சிறு வணிக வங்கிச்சேவைக் கணக்கைத் தொடங்க, ஆரம்ப குறைந்தபட்ச வைப்புத்தொகை எதுவும் தேவையில்லை.


உங்கள் வணிகத்தை நீங்கள் கட்டமைத்த விதத்தைப் பொறுத்து, உங்களுக்குத் தேவைப்படும் ஆவணங்கள் மாறுபடும். விவரங்களுக்கு, எங்களின் கணக்கைத் தொடங்குவதற்கான சரிபார்ப்புப் பட்டியலைப் பார்க்கவும்.


ஒரு வணிகக் கடன் அட்டை உங்கள் வணிகச் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்குப் பல நன்மைகளை வழங்குகிறது. இது வணிகம் மற்றும் தனிப்பட்ட செலவுகளை வெவ்வேறாகப் பிரிக்க உதவுகிறது, எங்கள் TD அட்டை மேலாண்மைக் கருவியைப் பயன்படுத்தி அன்றாடச் செலவுகளை எளிதாகக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் வணிகத்தின் பணப்புழக்கத்திற்கு உதவுகிறது. கூடுதலாக, நீங்கள் புள்ளிகளை ஈட்டலாம், கேஷ்பேக் பெறலாம் அல்லது குறைந்த வட்டி விகிதப் பயனைப் பெறலாம்.

உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்

  • ஒரு கணக்கைத் தொடங்கவும்

    ஒரு வணிக வங்கிச்சேவை நிபுணரிடம் தொலைபேசி மூலம் ஒரு கணக்கைத் தொடங்குங்கள்

  • கணக்கு மேலாளரைத் தொடர்புகொள்ளுங்கள்

    உங்கள் வணிக வங்கிச்சேவைத் தேவைகளைப் பற்றி கலந்துரையாட, ஒரு TD கணக்கு மேலாளரிடம் (AMSB) பேசுங்கள்.

  • ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

    TD சிறு வணிக ஆலோசனை மையத்தை அழையுங்கள்

    1-800-450-7318 1-800-450-7318