நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
கனடாவில் வீடு வாங்க விரும்புகிறீர்களா?
கனடாவில் வீடு வாங்குதல்
கனடாவில் வீடு வாங்குவது என்பது நீங்கள் எடுக்கும் மிகப்பெரிய நிதிசார் முடிவுகளில் ஒன்றாகும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களின் வீட்டுக் கடன் தொடர்பான முடிவுகளை எடுப்பதை எளிதாக்க TD விரும்புகிறது. இந்தச் செயல்முறையின் மூலம் நீங்கள் மேற்கொண்டு தொடர உங்களுக்கு உதவுவதற்கு, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை நாங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.
TD அடமானக் கடன் நிபுணர்கள் உங்களுக்கு உதவிடவே இங்கு உள்ளனர்
உங்களுக்குக் கனடியக் கடன் வரலாறு எதுவும் இல்லாவிட்டாலும், கனடாவில் உங்களின் முதல் வீட்டை வாங்குவதற்கு TD அடமானக் கடன் நிபுணரால் ஆலோசனை வழங்க முடியும்.1 ஒரு TD அடமானக் கடன் நிபுணரால் உங்களுக்கு வழிகாட்ட முடியும் சில வழிகள் குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன:
-
முன்பணம் செலுத்துவதற்காகச் சேமித்தல்
உங்கள் நிலைமைக்கு எவ்வளவு பெரிய முன்பணம் தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அதை எளிதாக்குவதற்கும் உதவும் சேமிப்பு உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள். -
அடமானக் கடன்கள் மற்றும் கட்டணங்கள்
அடமானக் கடன்கள் எவ்வாறு செயல்படுகின்றன, பல்வேறு நிதியளிப்பு விருப்பத்தேர்வுகள் மற்றும் அவை உங்கள் வட்டி விகிதத்தை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். -
அடமானக் கடன் விண்ணப்பச் செயல்முறை
வீடு வாங்கும் செயல்முறையில் அடமானக் கடன்கள் எவ்வாறு பொருந்துகின்றன மற்றும் உங்கள் அடமானக் கடன் விண்ணப்பத்திற்கு நீங்கள் என்ன ஆவணங்களை வழங்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
-
அடமானக் கடன் முன்-அங்கீகாரம்
உங்களுக்கு அங்கீகரிக்கப்படக்கூடிய அடமானக் கடன் தொகை பற்றிய தெளிவான யோசனையை உங்களுக்கு வழங்குதல் மற்றும் நீங்கள் வீடு வாங்குவதற்குத் தீவிரமாக முயன்று கொண்டிருப்பவர் என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வீடு விற்பனையாளர்களிடம் உங்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்துதல் போன்ற அடமானக் கடன் முன்-அங்கீகாரத்தின் நன்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள். -
உங்கள் அடமானக் கடனை விரைவாகச் செலுத்தி முடித்தல்
உங்கள் அடமானக் கடனை விரைவில் செலுத்தி முடிப்பதற்கான பல்வேறு அடமானக் கடன் அம்சங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். -
பல்வேறு மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனை
அழைப்பைக் கோருங்கள், நாங்கள் உங்களை ஒரு TD அடமானக் கடன் நிபுணருடன் இணைப்போம். நாங்கள் வழங்கும் பல்வேறு மொழிகள் மூலமாகத் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளைப் பெற நீங்கள் ஒரு TD அடமானக் கடன் நிபுணரைத் தேர்வு செய்யலாம்.
கனடாவிற்குப் புதியவராக உங்களின் முதல் வீட்டை வாங்குவது குறித்து உங்களுக்கு மேற்கொண்டு கேள்விகள் இருக்கிறதா?
உங்களுக்கான சரியான கனடாவிற்குப் புதியவருக்கான அடமானக் கடன் தீர்வைக் கண்டறியுங்கள்
TD இல், கனடாவிற்குப் புதியவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அடமானக் கடன் தீர்வுகள் எங்களிடம் உள்ளன. உங்களுக்குக் கனடாவில் குறைவான கனடியக் கடன் வரலாறு இருந்தால் அல்லது கடன் வரலாறே இல்லை என்றால், மேலும் வரையறுக்கப்பட்ட வேலைவாய்ப்பு மட்டுமே இருந்தாலும் கூட அடமானக் கடன் பெற நீங்கள் தகுதி பெறலாம்.1 உங்களின் 'புதியவர்' நிலைமை மற்றும் நீங்கள் செலுத்தும் முன்பணத்தின் அளவைப் பொறுத்து எங்களிடம் வெவ்வேறு தீர்வுகள் உள்ளன.
முன்பணம் குறைவு என்றால் என்பது நீங்கள் முதலில் செலுத்தும் தொகை குறைவாக இருக்கும், இருப்பினும் அதிக முன்பணம் செலுத்துவதுடன் ஒப்பிடும் போது நீங்கள் அடமானக் காலம் முழுவதும் அதிக வட்டி செலுத்துவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
TD அடமானக் கடனை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
கனடாவிற்குப் புதியவர்களுக்கான அடமானக் கடன் செயல்முறை
நீங்கள் ஒரு புதியவராகக் கனடாவில் உங்கள் முதல் வீட்டை வாங்கத் தயாராக இருக்கிறீர்கள், ஏற்கனவே கனடாவுக்கு வந்துவிட்டீர்கள் என்றால், அடமானக் கடன் செயல்முறை எப்படிச் செயல்படும் என்பதைப் பற்றி உங்களுக்கு விரிவாகச் சொல்ல விரும்புகிறோம்.
உங்கள் வருமானம், சேமிப்புகள், மாதாந்திரச் செலவுகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் உங்கள் வீட்டிற்காக நீங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதைத் தீர்மானிக்க ஒரு TD அடமானக் கடன் நிபுணரால் உங்களுக்கு உதவ முடியும்.
நீங்கள் வாங்குவதற்கு ஒரு வீட்டைத் தேடத் தொடங்கும் முன், TD அடமானக் கடன் முன்-அங்கீகாரத்தைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகை வரை அடமானக் கடனுக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள் என்பதைக் காட்ட இது உதவும், இதன்மூலம் நீங்கள் அதிக நம்பிக்கையுடன் வாங்கலாம்.2
அடமானக் கடன் முன்-அங்கீகாரத்தைப் பெற, TD அடமானக் கடன் நிபுணரைத் தொடர்புகொள்வதன் மூலம் தொடங்கவும்.
நீங்கள் முன்-அங்கீகாரம் பெற்றவுடன், உங்களுக்குப் பரவசமான காலம் தொடங்கும். உங்களுக்கான சரியான வீட்டைக் கண்டுபிடிப்பதற்கான பயணத்தை நீங்கள் அப்போது தான் தொடங்குவீர்கள். இந்த கட்டத்தில் நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் முகவரைத் தேட ஆரம்பிக்கலாம். ஒரு ரியல் எஸ்டேட் முகவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவர்களின் ஆளுமை மற்றும் சேவையின் நிலை உங்களுக்கு மிகவும் பொருத்தமானதா என்பதைப் புரிந்துகொள்ள அவர்களைச் சந்தித்து, சிறந்த அறிமுகச் சான்றுகள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட ஒரு முகவரைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கவும். முகவருக்கு வழக்கமாக விற்பனையாளர் தான் பணம் தருகிறார், அதனால் முகவரைப் பயன்படுத்த உங்களுக்கு எதுவும் செலவாகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்பும் ஒரு வீட்டைக் கண்டறிந்தால், நீங்கள் வாங்க விரும்பும் விலையைத் தெரிவிப்பதற்கு முன், அது உங்கள் விலை வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்துகொண்டு, ரியல் எஸ்டேட் லாயரிடம் பேசுங்கள்.
நீங்கள் வாங்க விரும்பும் விலை ஏற்றுக்கொள்ளப்பட்டதும், உங்கள் அடமானக் கடன் விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்கி, ஒப்புதல் பெற்று, ஒப்பந்தத்தை நிறைவுசெய்ய வேண்டும். நீங்கள் TD புதிய அடமானக் கடன் தீர்வுகளில் ஒன்றிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், பின்வரும் ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும்:
- உங்களின் நிரந்தரக் குடியுரிமை அட்டை அல்லது செல்லுபடியாகும் பணி அனுமதி (IMM படிவம் #1442)
- கனடாவில் சரிபார்க்கக்கூடிய வருமானம் மற்றும் முழுநேர வேலைவாய்ப்புக்கான ஆதாரங்கள், அதாவது ஊதிய ரசீதுகள், வேலைவாய்ப்புக் கடிதம் மற்றும் நேரடி வைப்புத்தொகையை உறுதிப்படுத்தும் வங்கி அறிக்கைகள் போன்றவை
- உங்கள் முன்பணத்தை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்பதைக் காண்பிக்கும் ஆவணங்கள். இதில் உங்கள் சொந்த நாட்டில் உள்ள உங்கள் வங்கியிடமிருந்து நிதிநிலை அறிக்கைகள் அடங்கலாம்
- உங்கள் சேமிப்புகள், முதலீடுகள், கடன்கள், கடன் அட்டைகள் மற்றும் ஒதுக்குத் தொகைக் கடன் ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கைகள்
- குடியிருப்புச் செலவுகள் (எ.கா. சொத்து வரி, காண்டோ கட்டணங்கள், வெப்பமூட்டல் செலவுகள்)
- வீடு வாங்குவதற்கான கையொப்பமிட்ட முன்மொழிவு
உங்கள் சூழ்நிலைக்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படலாம் என்பதை TD அடமானக் கடன் நிபுணர் உங்களுக்குத் தெரிவிப்பார்.
ஜனவரி 1, 2023 நிலவரப்படி, கனடியர் அல்லாதவர்கள் குடியிருப்புச் சொத்துக்களை வாங்குவதற்கான தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அதாவது, கனடாவில் உள்ள குடியிருப்புச் சொத்துக்களை கனடியர் அல்லாதவர்கள் வாங்குவதற்கு கனடா அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கனடாவில் ஒரு வீட்டை வாங்குவதற்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்த, வழிகாட்டுதலுக்காக வழக்கறிஞர்/நோட்டரியை அணுகுமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நீங்கள் எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும் என்பது உங்கள் வீட்டின் வாங்கும் விலையையும், நீங்கள் வழக்கமான அடமானக் கடனைப் பெறுகிறீர்களா அல்லது இயல்புநிலைக் காப்பீடு அடமானக் கடனைப் பெறுகிறீர்களா என்பதையும் பொறுத்தது.
கனடாவில் அடமானக் கடன் பெறுவதற்குப் பொதுவாக ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் தேவைப்படுகிறது, ஏனெனில் இது உங்களுக்கு அடமானக் கடனை வழங்குபவருக்கு உங்கள் செலவினங்களிலும், கடனை நிர்வகிப்பதிலும் நீங்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது.
TD-இல், கனடாவிற்குப் புதியவராக, நீங்கள் இன்னும் உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கட்டியெழுப்பலாம் என்பதையும், கனடாவில் உங்களின் முழுநேர வேலைவாய்ப்பை நிறுவுவதற்கான ஆரம்பக் கட்டத்தில் இருக்கலாம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் கனடாவிற்குப் புதியவர்களுக்கான எங்கள் அடமானக் கடன் தீர்வுகள் மூலம், கனடியக் கடன் வரலாறு இல்லாவிட்டாலும், நீங்கள் இன்னும் TD அடமானக் கடனுக்குத் தகுதி பெறலாம். நீங்கள் TD அடமானக் கடனுக்குத்த் தகுதியுடையவரா என்பதை அறிய, TD அடமான நிபுணர் ஒருவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் கனடாவிற்கு வந்துசேர்ந்த பிறகு, வாங்க விரும்பும் வீட்டைத் தேடிக் கண்டறியத் தயாராக இருக்கும்போது அடமானக் கடன் முன்-அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உங்களின் முன்-அங்கீகாரம் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லத்தக்கதாக இருக்கலாம், எனவே உங்கள் வீடு தேடலைத் தொடங்குவதற்குச் சற்று முன்னர் மற்றும் வீடு வாங்க உங்களுக்குத் தேவைப்படும் மற்ற அனைத்தும் உங்களிடம் இருந்தால் மட்டுமே அதற்கு விண்ணப்பிப்பது முக்கியமாகும். TD-இல், உங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட அடமானக் கடன் விகிதத்தை நாங்கள் 120 நாட்களுக்கு2 நிலையாக வைத்திருப்போம், இதன்மூலம் நீங்கள் அதிக நம்பிக்கையுடன் வீடு தேடலாம்.
வீட்டுக் காப்பீடு (அல்லது ஒரு கூட்டுரிமை வீட்டை வாங்கினால், காண்டோ காப்பீடு) ஆனது திருட்டு, தீ விபத்து போன்ற எதிர்பாராத இழப்புகளுக்கு எதிராக உங்கள் வீடு மற்றும் தனிப்பட்ட உடமைகளைப் பழுதுபார்த்தல் அல்லது மாற்றுவதை (பாலிசி வரம்புகள் வரை) உள்ளடக்குகிறது. உங்கள் அடமானக் கடனைப் பெறுவதற்கு நீங்கள் வீடு/காண்டோ காப்பீடு எடுப்பது பெரும்பாலான அடமானக் கடன் வழங்குநர்களுக்குத் தேவைப்படும்.
அடமானக் கடன் இயல்புநிலைக் காப்பீடு என்பது நீங்கள் அடமானக் கடனைச் செலுத்தத் தவறினால், அடமானக் கடன் வழங்குநரை இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் காப்பீடு ஆகும். அதிக விகித அடமானக் கடன்களுக்கு அடமானக் கடன் இயல்புநிலைக் காப்பீடு கட்டாயமாகும், மேலும் நீங்கள் 20% -க்கும் குறைவாக முன்பணம் செலுத்தினால் இது தேவைப்படும் தரநிலையான வழக்கமான அடமானக் கடன் திட்டங்களுக்கு குறைந்தபட்சம் 20% முன்பணமாகச் செலுத்த வேண்டும். நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கான TD கனடாவிற்குப் புதியவர்களுக்கான அடமானக் கடன் தீர்வுக்கு, நீங்கள் 35% -க்கும் குறைவாக முன்பணம் செலுத்தினால், அடமானக் கடன் இயல்புநிலைக் காப்பீடு தேவைப்படுகிறது.
அடமானக் கடன் பாதுகாப்புக் காப்பீடு, அடமானக் கடன் வழங்குநர் காப்பீடு என்றும் அறியப்படுகிறது, இது ஒரு விருப்பத்தேர்வான காப்பீட்டுத் தயாரிப்பாகும், இது அடமானக் கடன் கடுமையான நோய் மற்றும் ஆயுள் காப்பீட்டு விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் இறக்க நேரிட்டால் அல்லது கடுமையான நோய்வாய்ப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், இந்தக் காப்பீடு அதிகபட்ச காப்புறுதித் தொகை வரம்பு வரை குறைத்துக் கொடுக்கலாம் அல்லது உங்கள் மீதமுள்ள அடமானக் கடன் நிலுவைத் தொகையை முழுவதுமாகச் செலுத்தலாம்.