நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
முகப்பு / கனடாவிற்குப் புதியவர்கள் / புதியவர்களுக்கான சலுகை
கனடாவில் வங்கிச்சேவைக்கு உங்களை வரவேற்கிறோம்
கணக்கைத் தொடங்க
ஒரு கிளைக்குச் செல்லவும்
கனடாவிற்குப் புதியவர்களுக்கான TD வங்கிச் சேவைத் தொகுப்பைப் பற்றி ஆராய்ந்து அறிக
உங்களைப் போன்று கனடாவிற்குப் புதியவர்களுக்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன வங்கிச்சேவைத் தீர்வுகள் மற்றும் உதவி போன்றவை . உங்களின் அன்றாட செலவுகளை நிர்வகியுங்கள், பணத்தைச் சேமியுங்கள், மேலும் வெகுமதிகளைப் பெறுங்கள். தொடங்குவதற்கு அப்பாயின்ட்மென்ட் முன்பதிவு செய்யுங்கள். ஒரு TD வங்கிச்சேவை நிபுணரால் உங்களுக்குக் காசோலை, சேமிப்புக் கணக்கைத் திறக்கவும், கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் உதவ முடியும்.
உங்கள் பயணம் இங்கே தொடங்குகிறது - சாத்தியக்கூறுகளைக் கண்டறியுங்கள்
உங்கள் அப்பாயின்ட்மென்ட்டுக்குத் தயாராக, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய காசோலை மற்றும் சேமிப்புக் கணக்குகளைப் பாருங்கள். உறுதியாகத் தெரியவில்லையா? உங்கள் அப்பாயின்ட்மென்ட்டின் போது அதைத் தேர்வு செய்ய நாங்கள் உங்களுக்கு உதவலாம்.
கனடாவிற்குப் புதியவர்களுக்கான TD கடன் அட்டைகள்
TD கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் எங்களிடம் உங்கள் கிரெடிட்டை உருவாக்கத் தொடங்குங்கள், மேலும் நீங்கள் $15,000 கடன் அட்டை வரம்பிற்கு ஒப்புதல் பெறலாம் - இதற்கு கிரெடிட் வரலாறு தேவையில்லை.
நீங்கள் தவறவிட விரும்பாத குறுகிய காலச் சலுகைகள்
TD வங்கிச்சேவையைப் பயன்படுத்தி, எங்களின் அற்புதமான வெகுமதிகள் மூலம் ஆதாயம் பெறுங்கள். இப்போதே செயல்பட்டு, குறுகிய காலம் மட்டுமே கிடைக்கும் பிரத்யேகப் பலன்களைப் பெற்று மகிழுங்கள். இச்சலுகை நவம்பர் 5, 2025 அன்றுடன் முடிவடைகிறது நிபந்தனைகள் பொருந்தும்.
கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைத் தொகுப்பை விரும்புவதற்கான கூடுதல் காரணங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நீங்கள் பின்வருபவராக இருந்தால், கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைத் தொகுப்பிற்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்கள்:
- 5 ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவான நிரந்தரக் குடியிருப்பாளர், சர்வதேச மாணவர் அல்லது தற்காலிகக் குடியிருப்பாளர் (குடியிருப்பு நிலைமையின் சான்றுடன்)
- இதுவரை TD காசோலைக் கணக்கு வைத்திருந்ததில்லை
- நீங்கள் வசிக்கும் மாகாணத்தில் அல்லது பிரதேசத்தில் முதிர்ச்சிக்கான வயது
- பின்வரும் குடியிருப்பு அடையாள ஆவணங்களில் ஒன்றைக் கொண்டு வாருங்கள்:
- நிரந்தரக் குடியிருப்பு அட்டை
- புலம்பெயர்ந்தோர் விசா மற்றும் வந்திறங்கியதற்கான பதிவு (IMM படிவம் #1000)
- நிரந்தரக் குடியிருப்பு (IMM படிவம் #5292/5688) அல்லது தற்காலிகப் பணி அனுமதி (IMM படிவம் #1442/1102) அல்லது மாணவர் அனுமதி (IMM படிவம் #1208) ஆகியவற்றின் உறுதிப்படுத்தல்
- பின்வரும் ஆவணங்களில் ஒன்று:
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
- கனடிய ஓட்டுநர் உரிமம்
- கனடிய அரசாங்க அடையாள அட்டை
சர்வதேச மாணவர்கள் ஒரு உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய படிப்பில் சேர்ந்ததற்கான சான்றையும் வழங்க வேண்டும். வழங்கப்பட்ட ஆவணம் பள்ளியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும், அது பின்வரும் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்: மாணவர் பெயர், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் பெயர், படிப்பின் பெயர் மற்றும் படிப்பில் தற்போதைய ஆண்டு.
குறிப்பு: பிற அடையாள ஆவணங்கள் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைத் தொகுப்புக்கு விண்ணப்பிக்க, உங்கள் உள்ளூர் TD கிளையில் கணக்கைத் தொடங்க ஒரு அப்பாயின்ட்மென்ட்டிற்கு முன்பதிவு செய்யுங்கள்.
நீங்கள் தற்போது சீனா அல்லது இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால்:
நீங்கள் ஒரு கணக்கை அமைக்க உதவிபெற எங்களை அழைக்கலாம். எனினும், உங்கள் TD வங்கிக் கணக்கைச் செயல்படுத்துவதற்கு ஒரு TD கிளைக்குச் செல்ல, உங்கள் ஆரம்ப அமைவில் இருந்து உங்களுக்கு 75 நாட்கள் அவகாசம் இருக்கும்.
எங்களை அழைக்கும்போது கனடிய இம்மிக்ரேஷன் விசா இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
சீனா: இலவசமாக அழையுங்கள் 1-855-537-5355
இந்தியா: இலவசமாக அழையுங்கள் 416-351-0613
நீங்கள் கனடா வந்து சேர்ந்ததும், உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்த ஒரு TD வங்கிக் கிளைக்குச் செல்லவும்.
நீங்கள் வேறு ஏதேனும் நாட்டில் வசிப்பவர் என்றால்:
நீங்கள் முதலில் கனடாவிற்கு வந்து, உங்கள் உள்ளூர் TD கிளையில் கணக்கைத் தொடங்க ஒரு அப்பாயின்ட்மென்ட்டிற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.