TD அனைத்துலக மாணவர் GIC திட்டம்

உங்கள் சொந்த நாட்டை விட்டு கனடாவுக்குக் குடிபெயர்வது ஆகப்பெரிய காரியமாகும். TD-இல், கனடாவுக்குக் குடிபெயர்வதற்கான உங்கள் பயணத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.

நீங்கள் TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போதும், அதில் பங்கேற்கும் போதும், அது உங்கள் மாணவர் அனுமதி விண்ணப்பத்தை விரைவுபடுத்த உதவும்.


TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்தின் பலன்கள்

  • முழுவதுமாக டிஜிட்டல்

    இது அனைத்துல மாணவர்கள் TD மாணவர் காசோலைக் கணக்கையும் TD அனைத்துல மாணவர் GIC திட்டத்தையும் தொடங்குவதற்கான ஒரு எளிய ஆன்லைன் விண்ணப்பமாகும்.

  • விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை

    நீங்கள் TD அனைத்துல மாணவர் GIC திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை.

  • வசதியானது

    கனடா முழுவதும் உள்ள 1,100கிளைகளில் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் நாங்கள் 13.5 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறோம்.


நீங்கள் என்ன பெறுவீர்கள்?

TD மாணவர் காசோலைக் கணக்கு: இது மாணவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு காசோலைக் கணக்காகும், இதற்கு மாதாந்திரக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை1 (23 வயது வரை அல்லது உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய முழுநேரப் படிப்பில் சேர்ந்ததற்கான சான்று இருந்தால்), மேலும் ஒவ்வொரு மாதமும் சேர்க்கப்படும் வரம்பற்ற பரிவர்த்தனைகளை அனுபவியுங்கள், இதன்மூலம் நீங்கள் பள்ளியில் கவனம் செலுத்த முடியும்.

TD சர்வதேச மாணவர் GIC: முழு காலத்திற்கும் கட்டணமில்லாத முதலீடு மற்றும் நிலையான வட்டி விகிதத்தின் பாதுகாப்பைப் பெற்று மகிழுங்கள். TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்தில் பங்கேற்பதற்கான அனைத்து நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தவுடன், அசல் தொகையானது சமமான மாதாந்திரப் பணமளிப்புகளைக் கொண்ட கட்டண அட்டவணையின்படி மீட்டெடுக்கப்படும்.

இது எப்படி வேலை செய்கிறது

TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்தில் பங்கேற்க 4 செயற்படிகளை மட்டுமே முடிக்க வேண்டும்:

செயற்படி 1. உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்
TD மாணவர் காசோலைக் கணக்கைத் தொடங்குவதற்கு விண்ணப்பப் படிவத்தையும் தொடர்புடைய ஆவணங்களையும் பெறுவதற்கு கோரிக்கை விடுக்கவும். பின்னர், தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்து மின்னணு முறையில் கையொப்பமிட்டு, கனடாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய நியமிக்கப்பட்ட கற்றல் நிறுவனத்திடமிருந்து நீங்கள் பெற்ற ஏற்புக் கடிதத்தின் சான்றைப் பதிவேற்றவும்.

செயற்படி 2. ஒரு அனைத்துலக வயர் டிரான்ஸ்பர் மூலம் பணத்தை அனுப்பவும்
உங்களின் TD மாணவர் காசோலைக் கணக்கில் தொகை சேர்க்க, உங்கள் விருப்பப்படி குறைந்தது CAD $10,000 முதல் அதிகபட்சமாக CAD $25,000 வரையிலான தொகைக்கு, உள்வரும் வயர் டிரான்ஸ்ஃபர் கட்டணமாக 3 உடன் ஒரு சர்வதேச வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் பணம்2 அனுப்புங்கள்.

செயற்படி 3. உங்களின் TD அனைத்துல மாணவர் GIC -இல் தொகை சேர்த்திடுங்கள்
உங்களின் வயர் டிரான்ஸ்ஃபர் பணத்தை TD பெற்றவுடன், ஒரு TD அனைத்துலக மாணவர் GIC-இல் CAD $10,000 முதலீடு செய்யப்படும்.
கனடா அரசாங்கத்தின் Student Direct Stream (SDS) மாணவர் அனுமதி விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யுங்கள்.

செயற்படி 4. சரிபார்த்தல் மற்றும் GIC-இன் முதல் வழங்குத்தொகைக்காக ஒரு கிளையில் நியமன சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள்
நீங்கள் கனடாவிற்கு வந்ததும், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும், தேவையான ஆவணங்களில் கையொப்பமிடவும், உங்கள் கணக்குகளைச் செயல்படுத்தவும் எங்கள் 1,085 கிளைகளில் ஒன்றில் நியமன சந்திப்புக்கு முன்பதிவு செய்யவும். நாங்கள் CAD $2,000 தொகையையும் உங்கள் GIC-இல் சேர்ந்திருக்கும் ஏதேனும் வட்டியையும் மீட்டு, அதை உங்கள் TD மாணவர் காசோலைக் கணக்கில் வரவு வைப்போம்.

கூடுதலாகக் கேள்விகள் உள்ளனவா? திட்ட வழிகாட்டி PDF-ஐப் பார்க்கவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்தில் பங்கேற்கத் தகுதிபெற, நீங்கள் கட்டாயம்:

  • கனடா அரசாங்கத்தின் Student Direct Stream (SDS) திட்டத்தின் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்
  • கனடாவில் உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய நியமிக்கப்பட்ட கற்றல் நிறுவனத்தில் படிக்கத் திட்டமிடும் ஒரு தனிநபராக இருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்கும் சமயத்தில் குறைந்தது 18 வயதுடையவராக இருக்க வேண்டும்
  • ஒரு மூன்றாம் தரப்பு சார்பாகக் கணக்கைத் தொடங்குபவராக இருக்கக் கூடாது

கனடா அரசாங்கத்தின் Student Direct Stream (SDS) திட்டத்தின் மூலம் உங்கள் மாணவர் அனுமதியை விரைவாகச் செயலாக்குவதற்குத் தகுதிபெற, நீங்கள் பின்வரும் நாடுகளில் ஒன்றில் வசிக்கும் சட்டப்பூர்வக் குடியிருப்பாளராக இருக்க வேண்டும்: சீனா, இந்தியா, மொராக்கோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், செனகல், வியட்நாம், ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பிரேசில், கொலம்பியா, கோஸ்டாரிகா, பெரு, செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ. விரிவான தகுதித் தேவைகளுக்கு, கனடா அரசாங்கத்தின் Student Direct Stream (SDS) திட்டத்திற்கான வலைத்தளத்தைப் பார்க்கவும்.


ஆம், TD மாணவர் காசோலைக் கணக்கைத் தொடங்கிய தேதியிலிருந்து 365 நாட்காட்டி தினங்களுக்குள் TD கனடா ட்ரஸ்ட் கிளையில் எங்களின் திட்டத் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடிந்தால், நீங்கள் அதே TD அனைத்துலக மாணவர் GIC-ஐப் பயன்படுத்தி பின்னர் சேர்வதற்கான ஒரு மாணவர் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். காசோலைக் கணக்கு தொடங்கப்பட்ட தேதியிலிருந்து 365 நாட்காட்டி தினங்களுக்குள் எங்கள் திட்டத்திற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், TD மாணவர் காசோலைக் கணக்கு மற்றும் GIC கணக்கு ஆகிய இரண்டும் மூடப்பட்டு, எந்தக் கணக்கில் இருந்து வந்ததோ அந்தக் கணக்கிற்குத் தொகை திருப்பி அனுப்பப்படும்.

உங்கள் TD மாணவர் காசோலைக் கணக்கு திறந்த நிலையில் வைக்கப்படுவதற்கு, கணக்கைத் தொடங்கிய 90 நாட்காட்டி தினங்களுக்குள் அனைத்துலக வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் அதில் தொகை சேர்க்கப்பட வேண்டும். 90 நாட்காட்டி தினங்களுக்குள் தொகை சேர்க்கப்படாத கணக்குகள் தானாக மூடப்படும்.


ஆம். மாணவர் தனது சொந்த நாட்டில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்து அல்லது சொந்த நாட்டில் உள்ள அவரது குடும்பத்தினர்/நண்பர்களின் கணக்கிலிருந்து வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் பணம் அனுப்பலாம்.



கனடாவில் குடியேற உங்களுக்கு உதவுவதற்கான ஆலோசனை

  • தினசரி வங்கிச்சேவை முதல் பண இடமாற்றங்கள், கடன் அட்டைகள் மற்றும் நெகிழ்வான நிதியளிப்பு வரை, நீங்கள் குடியேறுகையில் நாங்கள் உங்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளித்துள்ளோம் என்பதை அறிந்து கொள்ளவும்.

  • காசோலைக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், கடன் அட்டைகள் மற்றும் சர்வதேச பண இடமாற்றங்கள் போன்ற, புதியவர்களுக்கான வங்கிச்சேவை விருப்பத்தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

  • ஆன்லைன் வங்கிச் சேவையைப் பயன்படுத்தலாம், தொலைபேசி மூலமும் பயன்படுத்தலாம். மேலும் எங்கிருந்தும் எளிதில் வங்கிச் சேவைகளை அணுக TD பயன்பாட்டைப் பயன்படுத்துங்கள்.


TD சர்வதேச மாணவர் வங்கிச்சேவை சலுகை

நீங்கள் தகுதிபெறும் மாணவராக இருந்தால், ஒரு புதிய TD மாணவர் காசோலைக் கணக்கைத் தொடங்கும்போது, TD Rewards Visa* கார்டுக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறும்போது மற்றும் நீங்கள் விரும்பும் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கும்போது $610 வரை பெறலாம். நீங்கள் மூன்று தயாரிப்புகளையும் ஒரு தொகுப்பாகப் பெறும்போது, $50 Amazon.ca பரிசு அட்டையையும் பெறுவீர்கள்.



உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தை இப்போதே தொடங்குங்கள்

  • ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

    செயல்முறையை எளிமையாகவும் திறம்படவும் செய்ய, நீங்கள் இப்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • சீனாவில் இருந்து அழையுங்கள்

    திங்கள் - வெள்ளி, EST காலை 9 மணி முதல் காலை 12 மணி வரை

    1-855-537-5355 1-855-537-5355
  • எங்கிருந்து வேண்டுமானாலும் அழையுங்கள்

    இந்தியா/பிலிப்பைன்ஸ்/செனகல்/
    பாகிஸ்தான்/ மொராக்கோ/வியட்நாம்/
    ஆன்டிகுவா மற்றும் பார்புடா/பிரேசில்/
    கொலம்பியா/கோஸ்டாரிகா/பெரு/செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ்/டிரினிடாட் மற்றும் டொபாகோ

    திங்கள் - வெள்ளி EST காலை 9 மணி முதல் காலை 12 மணி வரை (கட்டணமில்லா அழைப்பு)

    1-416-351-0613 1-416-351-0613