நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
வெளிநாட்டுப் பணியாளர்கள்
ஒரு வெளிநாட்டுப் பணியாளராக, நீங்கள் வேலைக்காக உங்கள் சொந்த நாட்டிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்வீர்கள், அது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். ஆனால் உங்கள் நிதி சார்ந்த விஷயங்கள் முழுவதிலும் எங்களால் உங்களுக்கு உதவ முடியும். கனடாவில் உங்கள் நிதிகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதலை அல்லது தயாரிப்புகளை நீங்கள் தேடுகிறீர்கள் எனில், வங்கிச்சேவையை எளிதாக்க உதவும் தீர்வுகளை TD வழங்குகிறது.
வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு TD எவ்வாறு உதவுகிறது
TD-இல், உங்கள் குடிபெயர்வை முடிந்தவரை எளிதாக்க உதவ நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் வந்து சேர்ந்தவுடன் உங்கள் பணத்தை நீங்கள் அணுக வேண்டியிருக்கும் என்பதால், புதிய TD கணக்கைத் தொடங்கி அதில் உங்கள் பணத்தை வரவு வைப்பதற்கு நாங்கள் உங்களுக்கு உதவுவோம். நீங்கள் தற்போது சீனா அல்லது இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் தொடங்குவதற்கு எங்களால் எப்படி உதவ முடியும் என்பதை இங்கே காண்க:
கனடிய காசோலைக் கணக்கைத் தொடங்கவும்
ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க நாங்கள் உங்களுக்கு உதவுவோம், அதன்மூலம் உங்கள் பணம் பாதுகாக்கப்பட்டு அணுகக்கூடியதாக இருக்கும். நீங்கள் சீனா அல்லது இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் தொலைபேசி வழியாக TD வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். பின்னர் 75 நாட்களுக்குள், உங்கள் கணக்கைச் செயல்படுத்த கனடாவில் உள்ள ஒரு TD கிளைக்குச் செல்லுங்கள்.
நீங்கள் வந்து சேர்வதற்கு முன்னர் உங்கள் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்
உங்கள் புதிய TD வங்கிக் கணக்கைத் தொடங்கிய பிறகு, நீங்கள் வந்து சேர்வதற்கு முன்னர் உங்கள் கணக்கில் $25,000 வரை செலுத்தலாம். நீங்கள் கனடாவிற்கு வந்ததும், உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்த கனடாவில் உள்ள ஒரு TD கிளைக்குச் செல்லுங்கள்.
உங்கள் பயணத்திற்கு உதவுதல்
நீங்கள் வேலைக்காக கனடாவிற்கு குடிபெயரத் திட்டமிட்டுள்ளதால், உங்கள் குடிபெயர்வை முடிந்தவரை தடையின்றி மேற்கொள்ள உதவும் இரண்டு காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன:
-
உங்கள் அடையாளச் சான்றுகளை மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்.
உங்களிடம் உள்ள உங்கள் சொந்த நாட்டின் அடையாளச் சான்றுகள் கனடாவில் முழுமையாக அங்கீகரிக்கப்படாமல் போகலாம். உங்கள் தகுதிகளை ஒப்பிட்டு, உங்கள் வேலைக்குத் தேவையான சான்றிதழ்/உரிமத்தைப் பெறுவதற்கு என்ன தேவை என்பதைச் சரிபார்க்கவும். -
பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கவும்.
கனடாவில் வேலை செய்ய, உங்களுக்கு ஒரு பணி அனுமதி தேவைப்படும். நீங்கள் ஒரு நிறுவனம் சார்ந்த பணி அனுமதிக்கு அல்லது வரையறையில்லா பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். கனடா அரசாங்கத்தின் இணையதளம், நீங்கள் எதைப் பெற வேண்டும் என்பதைக் கண்டறிய உங்களுக்கு உதவலாம். -
உங்கள் நிதியைத் திட்டமிட்டுத் தயார் செய்யுங்கள்.
கனடாவில் வாழ்க்கைச் செலவினம் உங்கள் சொந்த நாட்டை விட வேறுபட்டதாக இருக்கலாம். கனடாவில் நீங்கள் எங்கு குடிபெயரத் திட்டமிட்டாலும், உங்கள் வீடு, உணவு, போக்குவரத்து போன்ற செலவுகளுக்குத் தயாராக இருப்பது முக்கியமாகும்.
-
நீங்கள் வருவதற்கு முன்னர் வசிப்பதற்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருங்கள்.
நீங்கள் குடும்பத்துடன் வசிக்கப்போகிரீர்களா அல்லது வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கப் போகிறீர்களா என்றதேர்வு உங்களுடையது. இருந்தாலும், நீங்கள் ஒரு வீட்டை வாங்க விரும்பினால், கனடியர் அல்லாதவர்கள் குடியிருப்பு சொத்துகளை வாங்குவதற்கான தடைச் சட்டத்தில் உள்ள, கனடியர் அல்லாதவர்களுக்கான விதிகளைப் படித்துப் பாருங்கள். -
உங்கள் வருகைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்திடுங்கள்.
கனடாவிற்கு வரும்போது, உங்கள் கடவுச்சீட்டு, பார்வையாளர் விசா (தேவைப்பட்டால்), பயண ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பணி அனுமதி மற்றும் சில சமயங்களில், பணி அனுபவத்தின் சான்று மற்றும் உங்களின் பணி நியமனக் கடிதத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.* -
உங்கள் ஆங்கிலம் மற்றும்/அல்லது பிரஞ்சு மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொள்ளுங்கள்.
ஆங்கிலமும் பிரெஞ்சும் கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் தாய்மொழியாக இல்லாவிட்டால், உங்கள் மொழித் திறனை மேம்படுத்துவது உங்கள் தினசரி தகவல்தொடர்புகளிலும் உங்கள் புதிய வேலையிலும் உதவலாம்.
கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைத் தொகுப்பு
TD-இல், உங்கள் பணத்தை நம்பிக்கையுடன் நிர்வகிக்க உங்களுக்கு உதவ விரும்புகிறோம். எங்கள் கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைத் தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஆம், வெளிநாட்டுப் பணியாளர்கள் தகுதித் தேவைப்பாடுகளின் அடிப்படையில் TD வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், வைத்திருக்கவும் முடியும்.
ஆம், கணக்குக்கு வட்டி கிடைக்காத வரை, நீங்கள் SIN எண் இல்லாமல் ஒரு காசோலைக் கணக்கைத் தொடங்க முடியும். ஒரு TD கிளையில் கணக்கைத் தொடங்கும்போது, நீங்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வர வேண்டியிருக்கும்:
- தற்காலிகப் பணி அனுமதி (IMM படிவம் #1442/1102)
மற்றும் ஒரு தனிநபர் அடையாளச் சான்று:
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
- கனடிய ஓட்டுநர் உரிமம்
- கனடிய அரசாங்க அடையாள அட்டை
நீங்கள் தற்போது சீனா அல்லது இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு கணக்கை அமைக்க உதவிபெற எங்களை அழைக்கலாம். எனினும், உங்கள் TD வங்கிக் கணக்கைச் செயல்படுத்துவதற்கு ஒரு TD கிளைக்குச் செல்ல, உங்கள் ஆரம்ப அமைவில் இருந்து உங்களுக்கு 75 நாட்கள் அவகாசம் இருக்கும்.
எங்களை அழைக்கும்போது கனடிய இம்மிக்ரேஷன் விசா இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
- சீனா: இலவசமாக அழையுங்கள் 1-855-537-5355
- இந்தியா: இலவசமாக அழையுங்கள் 416-351-0613
- சீனா: இலவசமாக அழையுங்கள் 1-855-537-5355
- இந்தியா: இலவசமாக அழையுங்கள் 416-351-0613
நீங்கள் கனடா வந்து சேர்ந்ததும், உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்த ஒரு TD வங்கிக் கிளைக்குச் செல்லவும்.
TD Global Transfer™ மூலம் சர்வதேச அளவில் பணம் அனுப்புவதற்கு நாங்கள் பல வழிகளை வழங்குகிறோம்.
- Western Union® பணப் பரிமாற்றம்SM
- Visa Direct பண இடமாற்றம்
- சர்வதேச வங்கிப் பரிமாற்றம்
EasyWeb ஆன்லைன் வங்கிச் சேவைக்குப் பதிவு செய்துகொள்வது எளிதாகும். இப்போதே பதிவு செய்துகொள்ள, இங்கு கிளிக் செய்யவும்.