நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
நிரந்தரக் குடியிருப்பாளர்கள்
கனடாவிற்குப் புதியவர்களாக, உங்கள் வாழ்க்கையை இங்கு அமைத்துக் கொள்வதே உங்களின் முதன்மையான பணி என்பதையும், அதன் ஒரு பகுதி உங்கள் நிதியை நிர்வகிப்பது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். வங்கிக் கணக்கு தொடங்குவது முதல், வீடு வாங்குவது வரை, உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு உதவிடும் வகையில் தயாரிப்புகளும் சேவைகளும் எங்களிடம் உள்ளன.
இடம்பெயர்வதற்குத் தயாராகுங்கள்
கனடா அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குடிபெயர்வுக்குத் தயாராகுங்கள்:
-
கனடாவில் உங்கள் அறிமுகச்சான்றுகள் அங்கீகரிக்கப்படுவது, ஒரு வேலையைக் கண்டறிவது மற்றும் நீங்கள் இங்கு வந்த பிறகு கூடுதல் இலவச சேவைகளைப் பெறுவது உட்பட உங்கள் குடிபெயர்வுக்குத் தயாராக உதவ வருகைக்கு முந்தைய சேவைகளை அறிந்துகொள்ளுங்கள்.
-
நீங்கள் கனடாவிற்கு வரும்போது எங்கு வசிக்கப் போகிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட காலக் குடியிருப்பைத் தேடுவதற்கு முன்னர் முதலில் ஒரு தங்கும் விடுதியில் தற்காலிகமாகத் தங்கவோ அல்லது உறவினர் ஒருவரின் வீட்டில் குடியேறவோ விரும்பலாம்.
-
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), குடிவரவு விசா மற்றும் நீங்கள் கொண்டு வரும் அனைத்து உடமைகளின் பட்டியல் மற்றும் அவற்றின் டாலர் மதிப்பு போன்ற அனைத்து முக்கிய ஆவணங்களையும் கனடாவிற்குக் கொண்டு வாருங்கள்.
-
நீங்கள் ஃபெடரல் ஸ்கில்டு ஒர்க்கர் புரோகிராம் அல்லது ஃபெடரல் ஸ்கில்டு டிரேட்ஸ் புரோகிராம் மூலம் வருகிறீர்கள் என்றால், குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் நிதி ஆதாரத்தைத் தயார் செய்யவும்.
-
உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ பள்ளிக்கூடம் ஒன்றைக் கண்டறியுங்கள். அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளியைத் தேர்வுசெய்யுங்கள்.
-
உங்கள் நிதிகளை ஒழுங்கமைத்து, நீங்கள் கனடாவிற்கு வந்ததும் உங்கள் பணம் எளிதாக அணுகும் வகையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். நீங்கள் $10,000 CDN-க்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரொக்கத்திற்கு ஈடாகப் பொருட்களாகவோ கொண்டு வந்தால், அது எல்லையில் அறிவிக்கப்பட வேண்டும்.
-
தனியார் உடல்நலக் காப்பீட்டு விருப்பத்தேர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு கனடா அரசாங்கம் பொதுச் சுகாதாரக் காப்பீட்டை வழங்குகிறது, ஆனால் அது தொடங்குவதற்கு நீங்கள் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
-
வேலை தேடல் இணையதளங்களில் வேலை தேடத் தொடங்குங்கள். உங்களிடம் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய அறிமுகச்சான்றுகள் ஏதேனும் இருந்தால், கனடாவில் உங்கள் அறிமுகச்சான்றுகளை எவ்வாறு அங்கீகரித்துக் கொள்வது என்பது குறித்து கனடிய அரசாங்கம் உங்களுக்கு வழிகாட்டும்.
-
கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம் மற்றும்/அல்லது பிரெஞ்சு மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
-
கனடாவில் நிலவும் நான்கு பருவகாலங்களுக்கும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கத் தேர்ந்தெடுக்கும் மாகாணம் மற்றும் ஆண்டின் நேரத்தைப் பொறுத்து, அது மிகவும் குளிராகவோ அல்லது மிகவும் வெப்பமாகவோ இருக்கலாம், எனவே சரியான ஆடைகளை எடுத்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
கனடாவில் நிரந்தரக் குடியிருப்பாளராக வாழ்வது பற்றி
கனடாவிற்குப் புதியவராக, நீங்கள் எங்காவது தற்காலிகமாக வசிக்க ஏற்கனவே திட்டமிட்டிருக்கலாம். ஆனால் இறுதியில் நீங்கள் நிதி ரீதியாகத் தயாரானதும், சுயமாக ஒரு இடத்தைக் கண்டறிய விரும்பலாம். நீங்கள் அதே பெருநகரம் அல்லது நகரத்தில் தங்குவது அல்லது வேறு இடத்திற்குச் செல்வது உங்கள் விருப்பமாகும். எனினும், நீங்கள் கருத்தில் கொள்வதற்குச் சில காரணிகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன:
- வாழ்க்கைச் செலவுகள் மற்றும் தேவைப்படும் இடத்தின் அளவு
- வேலை வாய்ப்புகள்
- நண்பர்கள் இருக்கும் இடத்தில் இருந்து உள்ள தொலைவு
- பயணத்திற்காக செலவழிக்கும் நேரம் மற்றும் பணம்
- உங்களை ஒத்த/வேறுபட்ட கலாச்சாரங்களுக்கு வெளிப்படுதல்
கனடாவில் வாழ்வதற்கான செலவு
கனடாவில் உங்கள் புதிய வாழ்க்கைக்கான வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்க முயற்சிக்கும்போது சாத்தியமான செலவுகளின் பட்டியலைக் கருத்தில் கொள்ளுங்கள்.
-
குடியிருப்புக்கான செலவுகள்:
உங்கள் வீட்டின் அளவைப் பொறுத்தும், நீங்கள் அதில் வாடகைக்கு இருக்கிறீர்களா அல்லது அது உங்களுக்குச் சொந்தமானதா என்பதைப் பொறுத்தும் செலவுகள் மாறுபடும். பயன்பாடுகள், காப்பீடு போன்ற உங்கள் வீட்டோடு தொடர்புடைய செலவுகளையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
அடிப்படைச் செலவுகள்:
உணவு, உடைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகள். உணவகங்களில் சாப்பிடுவது அல்லது டிசைனர் ஆடைகளை வாங்குவது இங்கு விலை உயர்ந்ததாக இருக்கும். செலவைக் குறைக்க, வீட்டில் உணவு சமைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள் அல்லது குறைந்த விலையுள்ள ஆடைகளை வாங்குங்கள். -
உடல்நலக் காப்பீடு:
கனடாவில் அரசு உடல்நலக் காப்பீடு உள்ளது, ஆனால் பார்வை, பல் மருத்துவம், மருந்துச்சீட்டு மருந்துகள், சக்கர நாற்காலிகள் ஆகியவை இந்தக் காப்பீடுகளுக்குள் அடங்காது. பல பிரச்சனைகளுக்கும் சேர்த்து காப்பீடு வேண்டுமானால் நீங்கள் தனியார் காப்பீடு பெறலாம். -
போக்குவரத்து:
நீங்கள் பொதுப் போக்குவரத்துதில் செல்ல விரும்பவில்லை என்றால், ஒரு காரை வாங்கலாம் அல்லது குத்தகைக்கு எடுக்கலாம் (வாடகையின் ஒரு வகை). கார் கட்டணங்கள், எரிவாயு செலவு, பராமரிப்பு, காப்பீடு போன்றவற்றுக்குத் தயாராக இருங்கள்.
-
ஊதியத்தில் பிடித்தம்:
கனடாவில், நிறுவனங்கள் உங்கள் ஊதியத்திலிருந்து வருமான வரி, பணியாளர் காப்பீடு, யூனியன் தவணைகள் (நீங்கள் யூனியனில் இருந்தால்) அல்லது ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றுக்காக பிடித்தம் செய்துகொள்ளும். -
குழந்தைப் பராமரிப்புச் செலவுகள்:
குழந்தைப் பராமரிப்புச் செலவுகள் மற்றும் மானியங்கள் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபடும். உங்கள் குழந்தையின் வயது மற்றும் உங்கள் புதிய நேர அட்டவணையைப் பொறுத்து, பகல்நேரப் பராமரிப்பு அல்லது பள்ளி நேரத்திற்குப் பிந்தைய திட்டங்களைக் கருத்தில் கொள்ளலாம். -
சேவைக்குச் சிறு அன்பளிப்பு வழங்குதல்:
நீங்கள் ஒரு உணவகத்தில் உணவுக்குப் பணம் செலுத்தினாலும் அல்லது முடி வெட்டுவதற்குப் பணம் செலுத்தினாலும், சேவைக்காகச் சிறு அன்பளிப்பு வழங்குவது கனடாவில் பொதுவான நடைமுறையாகும். -
தகவல்தொடர்புக்கான செலவுகள்:
அலைபேசித் திட்டமும் இணையத்திற்குப் பணம் செலுத்துவதும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கூடுதல் செலவுகளாகும். உங்கள் தாய்நாட்டைவிட இங்கு விலைகள் அதிகமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும். -
கூடுதல் விற்பனை வரி:
மற்ற பல நாடுகளைப் போலவே, கனடாவும் நீங்கள் வாங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு விற்பனை வரியைச் சேர்க்கிறது.