ஒரு
ஆலோசகருடன் பேசுங்கள்


புதியவர்களுக்கான கடன் அட்டைகள் 101

அடமானம் மற்றும் கடன் விண்ணப்பங்களுக்கு உதவுவதற்காக கனடாவிற்குப் புதியவர்கள் கடன் வரலாற்றை உருவாக்கிக் கொள்வது முக்கியமாகும். TD கடன் அட்டைகள்​​​​​​​ உங்கள் செலவினங்களை நிர்வகிக்கவும் உங்கள் கடன் வரலாற்றை உருவாக்கவும் ஒரு வசதியான வழியை வழங்குகின்றன.


கடன் அட்டைக்கான அடிப்படைகள்

கடன் அட்டை என்பது ஒரு நிதிசார் கருவியாகும், இது பர்ச்சேஸ்களைச் செய்வதற்காக பண நிதி பெறுவதற்கு உதவுகிறது. நீங்கள் கடன் வாங்கக்கூடிய அதிகபட்சத் தொகையான உங்களின் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு வரை மட்டுமே நீங்கள் செலவிட முடியும். நீங்கள் செலவழித்ததைத் திருப்பித் தர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடன் வரலாற்றை உருவாக்குதல்

கடன் அட்டை​​​​​​​யை சரியாகப் பயன்படுத்துவது நல்ல கடன் வரலாற்றை உருவாக்க உதவுகிறது, ஏனெனில் உங்களால் பணத்தை நிர்வகிக்க முடியும் என்பதை இது கடன் வழங்குபவர்களுக்குத் தெரிவிக்கிறது. ஒரு சிறந்த கடன் வரலாறு ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோருக்கு வழிவகுக்கும், இது அடமானக் கடன்கள் மற்றும் கடன்களுக்கு விண்ணப்பிக்க உதவலாம்.


கனடாவிற்குப் புதியவர்களுக்கான TD கடன் அட்டைகள்​​​​​​​

TD-இல், நீங்கள் தேர்வுசெய்ய பல்வேறு கடன் அட்டை விருப்பத்தேர்வுகளை வழங்குகிறோம், ஒவ்வொன்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு சலுகைகள், நன்மைகள் மற்றும் வெகுமதிகளைக் கொண்டிருக்கின்றது. கனடாவிற்குப் புதியவர்களுக்கு கீழே உள்ள கடன் அட்டைகள்​​​​​​​ சிறந்த விருப்பத்தேர்வுகளாகும்.

  • TD கேஷ் பேக் விசா* கார்டு

    சிறப்புச் சலுகை

    நீங்கள் ஒரு புதிய TD Cash Back Visa* அட்டையைத் தொடங்கும்போது, $135 1 வரை பெறலாம். கணக்கை பிப்ரவரி 25, 2025-க்குள் தொடங்க வேண்டும்.

    • தகுதியான மளிகைப் பொருட்களின் பர்ச்சேஸ்கள் மற்றும் ஃபியூவல் பர்ச்சேஸ்களுக்கும் வழக்கமான தொடர் பில் பேமண்டுகளுக்கும் 1% கேஷ்பேக் டாலர்களைப் பெறுங்கள்23.
    • உங்கள் அட்டையைக் கொண்டு செய்யப்படும் மற்ற எல்லா பர்ச்சேஸ்களுக்கும் 0.5% கேஷ்பேக் டாலர்களைப் பெறுங்கள்4.
    • கேஷ்பேக் டாலர்களைப் பெற்று, உங்கள் கணக்கு பேலன்ஸிற்குப் பணம் செலுத்தும்போது ரிடீம் செய்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • TD ரிவார்ட்ஸ் விசா* கார்டு

    சிறப்புச் சலுகை

    தகுதியான Amazon.ca பர்ச்சேஸ்களில் பயன்படுத்த $505,6​​​​​​​ மதிப்பில் TD வெகுமதிப் புள்ளிகளைப் பெறுங்கள், மேலும் ஆண்டுக் கட்டணமும் இல்லை. நிபந்தனைகள் பொருந்தும். ஏப்ரல் 29, 2025-க்குள் கணக்கு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

    • TD, Starbucks® மற்றும் பலவற்றுக்காக Expedia®-இல் உள்ள பலவிதமான வெகுமதிகளில் உங்கள் TD வெகுமதிப் புள்ளிகளை ரிடீம் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மை.
    • உங்கள் ஃபோன் தொலைந்துவிட்டாலோ சேதமடைந்தாலோ $1000 வரையிலான மொபைல் சாதனக் காப்பீடு.
    • Amazon Shop மூலம் Amazon.ca தளத்தில் புள்ளிகளைக் கொண்டு பர்ச்சேஸ் செய்வதற்கு உங்கள் TD வெகுமதிப் புள்ளிகளை ரிடீம் செய்யுங்கள். நிபந்தனைகள் பொருந்தும். 
  • TD® Aeroplan® Visa Platinum* அட்டை

    சிறப்புச் சலுகை

    அங்கீகரிக்கப்பட்டதும், 20,000 வரையிலான Aeroplan புள்ளிகளைப் பெறுங்கள்7, அதோடு, முதலாண்டுக்கு ஆண்டுக் கட்டணம் ($89 மதிப்பு) இல்லை7. நிபந்தனைகள் பொருந்தும். ஏப்ரல் 29, 2025-க்குள் கணக்கு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

    • தினசரி பர்ச்சேஸ்களில் பெற்ற உங்கள் Aeroplan புள்ளிகளைப் பயன்படுத்தும்போது, விரைவில் பறக்கத் தொடங்குங்கள்.
    • Air Canada Vacations®8 உட்பட தகுதியான ஃபியூவல், மளிகைப் பொருட்கள் மற்றும் Air Canada® பர்ச்சேஸ்களுக்கு நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு $1-க்கும் $1 Aeroplan புள்ளியைப் பெறுங்கள்.
    • பயணக் காப்பீட்டின் விரிவான தொகுப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    • உங்கள் கூடுதல் அட்டைதாரர்களை நீங்கள் ஏப்ரல் 29, 20257-க்குள் உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும்.

TD கடன் அட்டை​​​​​​​யின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்

TD கடன் அட்டை​​​​​​​யை வைத்திருந்தால் என்ன சலுகைகள் கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பாருங்கள்:

  1. $15,000 வரையிலான கடன் வரம்புகள்
    நீங்கள் கனடிய நிரந்தர வசிப்பாளராக இருந்தால், உங்களுக்கு கடன் வரலாறு இல்லாத போதிலும், $15,000 வரையான கடன் வரம்புக்கு நீங்கள் தகுதி பெற்றவராக இருக்க முடியும்.

  2. எளிய பில் பேமெண்ட்டுகள்
    உங்கள் TD கடன் அட்டை​​​​​​​யில் முன்னங்கீகாரம் பெற்ற பேமெண்ட்டுகளை அமைக்கும் போது, ​​உங்கள் ஃபோன், பயன்பாடுகள் அல்லது இணையம் போன்ற உங்களின் தொடர்ச்சியான பில்களுக்கு பாதுகாப்பாகவும் குறித்த நேரத்திலும் பணம் செலுத்த முடியும் என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.

  3. கடன் அட்டை பேமெண்ட் திட்டங்கள் 
    உங்கள் பெரிய கடன் அட்டை பர்ச்சேஸ்களை நிர்வகிக்கக்கூடிய மாதாந்திர பேமெண்ட்டுகளாக மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையைப் பெறுங்கள். நிபந்தனைகள் பொருந்தும்.3

  4. கூடுதல் அட்டைதாரர்கள் 
    கூடுதல் அட்டைதாரராக உங்கள் கடன் அட்டைக் கணக்கில் ஒரு குடும்ப உறுப்பினரைச் சேர்க்கலாம். தகுதியான பல அட்டை பலன்களை அவர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடிவது மட்டுமல்லாமல், வெகுமதிகளையும் விரைவாகப் பெறலாம்.

  1. TD செயலி மூலம் உங்கள் கடன் அட்டையை நிர்வகியுங்கள் 
    TD செயலியிலிருந்தே நேரடியாக பரிவர்த்தனை வரம்புகளை அமைக்கலாம், சர்வதேச பர்ச்சேஸ்களைத் தடுக்கலாம், உங்கள் கடன் அட்டையைப் பூட்டலாம்.

  2. கூடுதல் பாதுகாப்பிற்காக TD மோசடி விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்
    உங்களின் தனிப்பட்ட அல்லது வணிக TD கடன் அட்டை அல்லது உங்கள் கணக்கில் உள்ள கூடுதல் அட்டைதாரர் அட்டைகளில் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டை நாங்கள் கண்டறிந்தால் உடனடி விழிப்பூட்டல்கள் மூலம் உங்களுக்குத் தெரிவிப்போம்.

  3. சலுகைகளையும் வெகுமதிகளையும் பெறுங்கள்
    உங்களிடம் உள்ள கடன் அட்டையைப் பொறுத்து, உங்கள் கடன் அட்டையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பர்ச்சேஸிற்கும் TD புள்ளிகள், Aeroplan புள்ளிகள் அல்லது கேஷ்பேக் டாலர்களை ஈட்டலாம், ரிடீம் செய்யலாம்.

  4. Visa* Zero Liability
    அனைத்து TD கடன் அட்டைகளும் உங்கள் அட்டையில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்படும் நிகழ்வில் உங்களைப் பாதுகாக்கின்ற Visa* Zero Liability-ஐ வழங்குகின்றன. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மற்றும் உங்கள் PIN-ஐப் பாதுகாப்பதற்கான உங்கள் பொறுப்பு உள்ளிட்ட உங்கள் பொறுப்புகள் பற்றிய முழுமையான தகவலுக்கு உங்கள் அட்டைதாரர் ஒப்பந்தத்தைப் பார்க்கவும்.

ஒரு புதியவராக கடன் அட்டைக்கு விண்ணப்பித்தல்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடன் அட்டையின் வகையைப் பொறுத்து உங்கள் கடன் அட்டைக்கான தகுதித் தேவைகள் மாறுபடும். எடுத்துக்காட்டாக, நீங்கள் கருத்தில் கொள்ளப்படுவதற்கு சில கடன் அட்டைகள்​​​​​​​ ஒரு குறிப்பிட்ட வருடாந்திரத் தனிநபர் வருமானம் அல்லது வருடாந்திரக் குடும்ப வருமானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவையைக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தேர்வுசெய்ய எங்கள் வங்கி நிபுணர்களிடம் பேசுங்கள்.

நீங்கள் எந்த அட்டைக்குத் தகுதியானவர் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லையா?
உங்கள் தேவைகளுக்கு எந்த அட்டை மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறிய எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.


வங்கிக் கிளையில் ஒரு கடன் அட்டைக்காக நீங்கள் விண்ணப்பித்தால், நீங்கள் பின்வருவனவற்றைக் கொண்டுவர வேண்டும்: ஒரு நிரந்தர வசிப்பிட அட்டை, நிரந்தர வசிப்பிட உறுதிப்படுத்தல் (IMM படிவம்# 5292) அல்லது தற்காலிகக் குடியேற்ற அனுமதி (IMM படிவம்# 1442, 1208, 1102).

மேலும், செல்லுபடியாகும் பாஸ்போர்ட், கனடிய ஓட்டுநர் உரிமம் அல்லது கனடிய அரசாங்க அடையாள அட்டை ஆகியவற்றை நீங்கள் கொண்டு வர வேண்டும்.


TD கடன் அட்டைக்கு ஆன்லைனில் அல்லது வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம், எனவே உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வங்கிச்சேவை நிபுணரிடம் நீங்கள் பேசலாம்.

வங்கிக் கிளையில் விண்ணப்பிக்க:


உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு உருவாக்குவது மற்றும் நிர்வகிப்பது

உங்கள் கடன் அட்டை​​​​​​​யைப் பொறுப்புடன் பயன்படுத்துவதே நல்ல கிரெடிட்டை உருவாக்குவதற்கான திறவுகோலாகும். அதாவது, உங்கள் அட்டையைக் கொண்டு பர்ச்சேஸ் செய்து, நிலுவைத் தொகையை முழுமையாகவும், உங்கள் அறிக்கையின் கெடு தேதிக்குள்ளும் தொடர்ந்து செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்துவது நல்ல கிரெடிட்டை உருவாக்கவும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கவும் உதவும். உங்கள் கடன் வரம்புக்குக் கீழே செலவு செய்வது உங்களால் கடனைப் பொறுப்புடன் நிர்வகிக்க முடியும் என்பதை கடனாளிகளுக்குக் காட்டவும் உதவும்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கடன் வரலாற்றை உருவாக்குவதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதை நாங்கள், அதாவது TD புரிந்துகொள்கிறது. நீங்கள் கனடாவில் உங்கள் கடன் வரலாற்றை உருவாக்கத் தொடங்க உதவ, நீங்கள் தேர்வுசெய்ய பல்வேறு கடன் அட்டை விருப்பத்தேர்வுகளை வழங்குகிறோம். புதியவர்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் அட்டைகளில் சிறப்பு வரவேற்புச் சலுகைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


கடன் அட்டை​​​​​​​யைப் பயன்படுத்துவது உங்கள் பர்ச்சேஸ்களுக்குப் பயன்படுத்த பண நிதி பெற உதவுகிறது. அந்தப் பணத்தை சரியான நேரத்தில், முழுமையாகத் திருப்பிச் செலுத்துவதன் மூலம், உங்களால் கடனை நிர்வகிக்க முடியும் என்பதையும், பணத்திற்கு ப் பொறுப்பானவர் என்பதையும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்குக் காட்டுகிறீர்கள். தொடர்ந்து கடன் வாங்கி அதைத் திருப்பி செலுத்துவது காலப்போக்கில் நல்ல கடன் வரலாற்றை உருவாக்க உதவலாம்.


உங்கள் கடன் அட்டை​​​​​​​க் கணக்கை ஆன்லைனில் அணுக, நீங்கள் EasyWeb ஆன்லைன் வங்கிச் சேவையில் உள்நுழைய வேண்டும். அங்கிருந்து, உங்கள் செலவினங்களை நீங்கள் கண்காணிக்கலாம், அறிக்கைகளைப் பார்க்கலாம் மற்றும் பலவற்றை செய்யலாம். TD செயலி மூலமாகவும் உங்கள் அட்டையை நீங்கள் அணுகலாம்.


உத்தரவாதத்தின் பேரிலான மற்றும் உத்தரவாதமற்ற​​​​​​​ கடன் அட்டைகள் இரண்டும் கனடாவில் கடன் வரலாற்றை உருவாக்க உங்களுக்கு உதவலாம். இவை இரண்டுக்குமுள்ள முதன்மையான வேறுபாடு என்னவென்றால், உத்தரவாதத்தின் பேரிலான​​​​​​​ கடன் அட்டையைப் பொறுத்த வரையில் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் அதன் கடன் வரம்பு பாதுகாக்கப்படும். அதாவது உங்கள் கடன் வரம்பானது நீங்கள் டெபாசிட் செய்த பணத்திற்குச் சமமானது. அதே சமயம் உத்தரவாதமற்ற ​​​​​​​கடன் அட்டைக்கு டெபாசிட் தேவையில்லை, ஆனால் அது குறைந்த கடன் வரம்புக்கு வழிவகுக்கலாம்.


நீங்கள் ஒரு பட்ஜெட்டை உருவாக்கி, உங்கள் திறனுக்குள் செலவு செய்து, உங்கள் நிலுவைத் தொகையை ஒவ்வொரு மாதமும் முழுமையாகச் செலுத்த வேண்டும். நீங்கள் EasyWeb-இல் உள்நுழைவதன் மூலமோ TD செயலி மூலமாகவோ உங்கள் கடன் அட்டைக் கணக்கு பேலன்ஸைக் கண்காணிக்கலாம்.

உங்கள் கடன் அட்டைப் பேமெண்ட்டுகளுக்கான நிலுவைத் தேதியைக் கண்காணிக்கவும், உங்கள் அறிக்கையின் நிலுவைத் தேதிக்கு முன்பாக அவற்றைச் செலுத்துவதை உறுதிசெய்யவும் நீங்கள் விரும்பலாம், இல்லையெனில் உங்களுக்கு வட்டி விதிக்கப்படும்.


TD-இல், கிரெடிட்டை நிர்வகிப்பதற்கும் உருவாக்குவதற்கும் பின்வருனவற்றின் மூலம் எங்களால் உங்களுக்கு உதவ முடியும்:

  • கடன் அட்டை​​​​​​​ போன்ற கிரெடிட் உருவாக்கத் தயாரிப்புகளை வழங்குதல்,
  • EasyWeb அல்லது TD செயலி மூலம் உங்கள் கடன் அட்டை​​​​​​​க் கணக்கிற்கு எளிதான அணுகலை வழங்குதல்,
  • தொலைபேசி அல்லது வங்கிக் கிளை மூலம் TD வங்கிச்சேவை நிபுணரிடமிருந்து தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனை, மற்றும்
  • எங்கள் ஆலோசனை மையம் மூலம் நிதிசார் அறிவை வழங்குதல்.

தொடர்பில் இருங்கள்

  • சந்திப்பைத் திட்டமிடவும்

    உங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று ஒரு வங்கிச்சேவை நிபுணரிடம் நேரடியாகப் பேசுங்கள் அல்லது தொலைபேசியில் பேசுங்கள்.

  • ஒரு வங்கிக் கிளையின் இடமறிக

    கனடாவில் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு அருகில் உள்ள TD வங்கிக் கிளைகளைக் கண்டறியலாம்.

  • எங்களை அழையுங்கள்

    எப்போதும், எங்கிருந்தும் வங்கிச் சேவை நிபுணருடன் பேசலாம்.

    1-866-222-3456 1-866-222-3456