நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
முகப்பு / கனடாவிற்குப் புதியவர்களுக்கான / வங்கிக் கணக்குகள்
புதியவர்களுக்கு ஏற்ற சௌகரியமான வங்கிச்சேவைத் தீர்வுகள்
நீங்கள் கனடாவில் குடியேறத் தொடங்கும் போது, உங்கள் பணத்தை நிர்வகிக்க உதவ காசோலை மற்றும் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க விரும்பலாம். TD-இல், நீங்கள் தேர்வுசெய்ய பல காசோலை மற்றும் சேமிப்புக் கணக்கு விருப்பத்தேர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். கனடாவிற்குப் புதியவர்களாக, நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் பிரத்தியேக சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு ஏற்ற ஒரு கணக்கைத் தேர்வுசெய்யுங்கள்
-
காசோலைக் கணக்குகள்
-
சேமிப்புக் கணக்குகள்
காசோலைக் கணக்கா சேமிப்புக் கணக்கா? எது எனக்கு மிகவும் ஏற்றது?
காசோலைக் கணக்கிற்கும் சேமிப்புக் கணக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் மற்றும் உங்கள் நிதி இலக்குகளைப் பொறுத்து, நீங்கள் ஏன் இவை இரண்டையும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கலாம் என்பது குறித்து சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TD தனிப்பட்ட கணக்குகளுக்கான அம்சங்கள்
நீங்கள் கனடாவிற்கு வந்து சேரும் முன்பே ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி வைத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் தற்போது சீனா அல்லது இந்தியாவில் வசிப்பவராக இருந்து, கனடாவுக்குக் குடியேறத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் வருவதற்கு 75 நாட்களுக்கு முன்பு ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
கனடா வந்ததும் உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்துவதற்கு ஒரு வங்கிக் கிளைக்குச் செல்லவும்.
வசிப்பிடத்திற்கான பின்வரும் அடையாள ஆவணங்களில் 1-ஐக் கொண்டுவரவும்:
- நிரந்தரக் குடியிருப்பு அட்டை
- புலம்பெயர்ந்தோர் விசா மற்றும் வந்திறங்கியதற்கான பதிவு (IMM படிவம் #1000)
- நிரந்தரக் குடியிருப்பு (IMM படிவம் #5292/5688) அல்லது தற்காலிகப் பணி அனுமதி (IMM படிவம் #1442/1102) அல்லது மாணவர் அனுமதி (IMM படிவம் #1208) ஆகியவற்றின் உறுதிப்படுத்தல்
*சர்வதேச மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய படிப்பில் சேர்ந்ததற்கான சான்று தேவைப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கு முன், கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
- கணக்குடன் தொடர்புடைய ஏதேனும் கட்டணங்கள் உள்ளதா?
- கணக்கை நீங்கள் பணத்தைச் சேமிக்கப் பயன்படுத்துகிறீர்களா அல்லது அன்றாட பர்ச்சேஸ்களுக்கா?
- நீங்கள் பயன்படுத்த முடியும் போனஸ் சலுகைகள் உள்ளதா?
TD-இல், நீங்கள் தேர்வு செய்ய பல கணக்கு வகைகளை வழங்குகிறோம், எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஒரு வங்கிக் கணக்கை நீங்கள் கண்டறியலாம்.
ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குவது உங்கள் கடன் வரலாற்றைச் சார்ந்து இல்லை என்றாலும், கனடாவில் உங்கள் கடன் வரலாற்றை உருவாக்கத் தொடங்குவது இன்னும் முக்கியமானதாகும்.
TD-இல், கனடாவிற்குப் புதியவராக, நீங்கள் கனடாவுக்கு வந்தவுடன் உங்களுக்கு வீட்டு முகவரி இருக்காது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கும்போது, எங்களுக்கு 1 வசிப்பிட அடையாளச் சான்றும் 1 தனிப்பட்ட அடையாளச் சான்றும் தேவைப்படுகிறது. பின்வருவனவற்றை நீங்கள் எங்களுக்கு வழங்கலாம்:
1 வசிப்பிட அடையாளச் சான்று:
- புலம்பெயர்ந்தோர் விசா மற்றும் வந்திறங்கியதற்கான பதிவு (IMM படிவம் #1000), அல்லது
- நிரந்தரக் குடியிருப்பு (IMM படிவம் #5292/5688) அல்லது தற்காலிகப் பணி அனுமதி (IMM படிவம் #1442/1102) அல்லது மாணவர் அனுமதி (IMM படிவம் #1208) ஆகியவற்றின் உறுதிப்படுத்தல்.
மற்றும் 1 தனிப்பட்ட அடையாளச் சான்று:
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
- கனடிய ஓட்டுனர் உரிமம்
- கனடிய அரசாங்க அடையாள அட்டை