கனடாவில் வங்கிச்சேவைகளைப் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையை உங்களுக்கு வழங்க TD வங்கி தயாராக உள்ளது.

கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைestatePlanningSettlement

TD இல் நம்பிக்கை வையுங்கள்

தனிப்பட்ட தீர்வுகள், நிபுணர் ஆலோசனை மற்றும் TD மைஸ்பென்ட் பயன்பாடு போன்ற கருவிகள் மூலம் உங்கள் நிதியியல் இலக்குகளை அடைவதற்கு நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.

வசதியான வங்கிச்சேவை

கனடா முழுவதிலும் வசதியான இடங்களில் நீங்கள் விரும்பும் போது வங்கிச்சேவையைப் பயன்படுத்துங்கள், நீடிக்கப்பட்ட கிளை வேலை நேரங்கள் மற்றும் 24/7 டிஜிட்டல் வங்கிச்சேவை.

கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைப் பொதி

வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகள் மற்றும் பண இடமாற்றங்கள் உள்ளிட்ட 1 தயாரிப்புக்களுக்கான சிறப்புச் சலுகைகள் ஐப் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவராக இருக்க முடியும்.

கனடாவிற்கு புதியவர்களுக்கான வங்கி சேவை தொகுப்பை பெறுக

நாங்கள் தகுதியான1 புதியவர்களுக்கு, தொடங்குவதற்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு வங்கிச்சேவை பொதியை வழங்குகிறோம்.

TD வரம்பிலா காசோலைக் கணக்கு

6 மாதங்களுக்கு மாதாந்த கட்டணமற்ற வரம்பற்ற வங்கி நடவடிக்கைகளைப் பெறுங்கள். அத்துடன், Interac e-Transfer® ஐப் பயன்படுத்தி இலவசமாகப் பணம் அனுப்புங்கள்.

பண இடமாற்றங்கள்

Visa Direct2 மூலம் சர்வதேச மட்டத்தில் பண இடமாற்றங்கள் செய்யுங்கள்.

கடன் அட்டைகள்

நீங்கள் கனேடிய நிரந்தர வதியுநராக இருப்பின், உங்களுக்கு கிரெடிட் வரலாறு இல்லாத போதிலும், $5,000 வரையான கிரெடிட் வரம்புக்கு நீங்கள் தகுதி பெற்றவராக இருக்க முடியும்.

சேமிப்புக் கணக்கு

நீங்கள் உங்கள் கணக்கைத் தொடங்கும் போது முதல் 6 மாதங்களுக்கு உங்கள் சேமிப்புக்காக போனஸ் விகிதத்தைப் பெறுங்கள்.


கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைப் பொதிக்கான தகுதி

நீங்கள் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருந்தால் நீங்கள் கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைப் பொதிக்கு தகுதிபெற முடியும் 1:

  • 2 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
  • நிரந்தரக் குடியுரிமை அட்டை அல்லது தற்காலிக அனுமதி அட்டை வழியாக, உங்கள் நிலை குறித்த சான்றை வழங்கவும்
  • இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
  • உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்

சர்வதேச மாணவர் தொகுப்பு

கிரெடிட் வரலாறு இல்லாமல் TD மாணவர் காசோலைக் கணக்கு, போனஸ் விகிதம் கொண்ட சேமிப்புக் கணக்கு, கடன் அட்டை மற்றும் மாணவர் கிரெடிட் லைன் ஒன்றைப் பெறுவதற்கு எங்களால் உதவ முடியும்.


மேலே