கனடாவிற்குப் புதியவர்களுக்கு உள்ள வங்கிச்சேவைத் தெரிவுகளைக் கண்டறியுங்கள்.

புதிதாக வருபவர்களுக்கு, ஆரம்ப கட்டத்தில் உதவக்கூடிய தயாரிப்புகளில் TD வங்கி சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. கனடாவில் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறிச் செல்ல உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்! உங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஒரு வங்கிச்சேவை வல்லுநரைச் சந்தியுங்கள்.


ஆரம்பத்தில் உங்களுக்குத் தேவையான சரியான வங்கிச்சேவை TD வங்கியே

TD காசோலைக் கணக்குகள்

கனடாவிற்குப் புதியவர்களுக்கு மட்டுமேயான, 12 மாதங்களுக்கு1 மாதாந்திரக் கட்டணம் இல்லை எனும் சிறப்புச் சலுகையைப் பெற்று மகிழுங்கள்.


TD வரம்பிலா காசோலைக் கணக்கு

தினசரி வங்கிச் சேவையை எளிதாகப் பயன்படுத்த, TD வரம்பிலாக் காசோலைக் கணக்கு மிக ஏற்றதாகும். ஒரு ஆண்டுக்கு மாதாந்திரக் கணக்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை ($203 வரை). அதோடு, நீங்கள் ஒரு புதிய கணக்கைத் தொடங்கும் போது $350 தொகையை2​​​​​​​ பெறலாம்:

 • வரம்பற்ற பரிவர்த்தனைகள்3
 • கனடாவில் ATM-களைப் பயன்படுத்துவதற்கு TD கட்டணங்கள் எதுவுமில்லை4
 • Interac e-Transfer® -இல் இலவச பண இடமாற்றங்கள்

விவரங்களைக் காட்டு


TD வரம்பிலா காசோலைக் கணக்கிற்கு சிறப்பு $350 ரொக்கச்2 சலுகை.

TD வரம்பிலா காசோலைக் கணக்கிற்கு $350 ரொக்கச் சலுகையைப் பெற நீங்கள் இவற்றைச் செய்ய வேண்டும்:

 1. ஜூன் 3, 2024-க்குள் ஒரு TD வரம்பிலா காசோலைக் கணக்கை ("புதிய காசோலைக் கணக்கு") தொடங்க வேண்டும்

 2. ஜூலை 31, 2024-க்குள் உங்கள் புதிய TD கணக்கிற்குப் பின்வரும் சேவைகளில் ஏதேனும் 2-ஐ அமைத்து நிறைவுசெய்ய வேண்டும்

 • உங்கள் நிறுவனத்திடமிருந்து, ஓய்வூதிய வழங்குநரிடமிருந்து அல்லது அரசாங்கத்திடமிருந்து தொடர் நேரடி டெபாசிட்2

 • குறைந்தபட்சம் $50-க்கு தொடர் முன்னங்கீகாரம் பெற்ற டெபிட்2

 • குறைந்தபட்சம் $50-க்கு2 EasyWeb அல்லது TD செயலியில் ஆன்லைன் பில் பேமெண்ட்5

வங்கிச் சேவைகளை எளிதாக்க உதவுகிறோம்

வந்து சேரும் முன்பே கணக்கைத் தொடங்கலாம்

சீனாவில் அல்லது இந்தியாவில் வசிக்கிறீர்களா? கனடாவிற்கு வந்து வசிக்கத் திட்டமிடுகிறீர்களா? நீங்கள் வருவதற்கு 75 (வரை) நாட்கள் முன்பே உங்கள் TD வங்கிக் கணக்கைத் தொடங்க எங்களை அழைக்கவும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் கனடாவிற்கு வந்து சேரும் முன்னரே உங்கள் புதிய TD வங்கிக் கணக்கிற்கு $25,000 வரை பணம் அனுப்பவும் முடியும்.

எங்களை அழைக்கும்போது கனடிய இம்மிக்ரேஷன் விசா இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

 • சீனா: இலவசமாக அழையுங்கள் 1-855-537-5355
 • இந்தியா: இலவசமாக அழையுங்கள் 416-351-0613
 • வட அமெரிக்கா: அழையுங்கள் 416-983-5393

நீங்கள் கனடா வந்து சேர்ந்ததும், உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்த ஒரு TD வங்கிக் கிளைக்குச் செல்லவும்.


TD வங்கிச் சேவைத் தொகுப்பு

கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச் சேவைத் தொகுப்பின் ஒரு பகுதியாக, நீங்கள் உங்களின் கணக்கைத் தொடங்கும்போது 5.55%6 வரையிலான சேமிப்பு வட்டி விகிதத்தையும், அதோடு முதல் 3 மாதங்களுக்கு உங்கள் சேமிப்புகளுக்கு 1.00% போனஸ் வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள்1.


TD தினசரி சேமிப்புக் கணக்கு

TD தினசரி சேமிப்புக் கணக்கானது, நீங்கள் தொடக்கக் கட்டத்தில் இருக்கையில், உங்கள் தினசரி வங்கிச்சேவைத் தேவைகளுக்கு ஏற்ற பட்ஜெட்டிற்கு உகந்த தெரிவாகும்.

நீங்கள் ஒரு TD தினசரி சேமிப்புக் கணக்கைத் தொடங்கும்போது, 3 மாதங்களுக்கு 1.00% போனஸ் வட்டி விகிதத்தைப் பெறலாம்1.


TD அதிக வட்டி சேமிப்புக் கணக்கு

கனடாவில் நிலைகொள்ளுதல் என்பது, உங்கள் பல்வேறு குறுகிய கால மற்றும் நெடுங்கால இலக்குகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

TD அதிக வட்டி சேமிப்புக் கணக்கு வழங்கும் அதிக வட்டி விகிதம், உங்கள் இலக்குகளை நீங்கள் விரைவில் அடைய உதவும். மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகையாக $25,000 அல்லது அதற்கும் மேல் வைத்திருப்பதன் மூலம், பரிவர்த்தனைக் கட்டணத் தள்ளுபடிகள் மூலமும் நீங்கள் கூடுதலாக சேமிக்கலாம்2,3.


TD இ-பிரீமியம் சேமிப்புக் கணக்கு

உங்களின் பெரும்பாலான வங்கிச் சேவைகளை ஆன்லைனில் செய்தால், ePremium சேமிப்புக் கணக்கு4 வழங்கும் அம்சங்களை நீங்கள் விரும்புவீர்கள்.

ஜூன் 3, 2024-க்குள் ஒரு புதிய TD இ-பிரீமியம் சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதன் மூலம் 5.55%6 வரையிலான சேமிப்பு வட்டி விகிதத்தைப் பெறுங்கள்:

 • $1,000,000 வரையிலான ஏதேனும் இருப்புத்தொகைகளுக்கு 90 நாட்களுக்கு 3.70%6 போனஸ் சேமிப்பு வட்டி விகிதத்தைப் பெறுங்கள்.00
 • $10,000 அல்லது அதற்கு மேற்பட்ட இருப்புத்தொகைகளுக்கு 1.85%6 குறிப்பிடப்பட்ட வட்டி விகிதத்தைப் பெறுங்கள்

உங்கள் சேமிப்புகளைப் பெருகச் செய்ய உதவும் கருவிகள்

வந்து சேரும் முன்பே கணக்கைத் தொடங்கலாம்

சீனாவில் அல்லது இந்தியாவில் வசிக்கிறீர்களா? கனடாவிற்கு வந்து வசிக்கத் திட்டமிடுகிறீர்களா? நீங்கள் வருவதற்கு 75 (வரை) நாட்கள் முன்பே உங்கள் TD வங்கிக் கணக்கைத் தொடங்க எங்களை அழைக்கவும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் கனடாவிற்கு வந்து சேரும் முன்னரே உங்கள் புதிய TD வங்கிக் கணக்கிற்கு $25,000 வரை பணம் அனுப்பவும் முடியும்.

எங்களை அழைக்கும்போது கனடிய இம்மிக்ரேஷன் விசா இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

 • சீனா: இலவசமாக அழையுங்கள் 1-855-537-5355
 • இந்தியா: இலவசமாக அழையுங்கள் 416-351-0613
 • வட அமெரிக்கா: அழையுங்கள் 416-983-5393

நீங்கள் கனடா வந்து சேர்ந்ததும், உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்த ஒரு TD வங்கிக் கிளைக்குச் செல்லவும்.


TD கடன் அட்டைகள்

கனடாவிற்குப் புதியவர்களுக்கு, ஆண்டுக் கட்டணமற்ற TD கேஷ் பேக் கார்டு அல்லது TD ரிவார்ட்ஸ் விசா கார்டில் கிடைக்கும் சிறப்பு வரவேற்புச் சலுகையைப் பெற்று மகிழுங்கள்.


 • TD கேஷ் பேக் விசா* கார்டு

  கேஷ் பேக் டாலர்களைப் பெறுங்கள். உங்கள் கணக்கு பேலன்ஸைச் செலுத்துவதற்கு உதவ அவற்றை மீட்டெடுங்கள். அங்கீகரிக்கப்பட வேண்டும். நிபந்தனைகள் பொருந்தும்.1

 • TD ரிவார்ட்ஸ் விசா* கார்டு

  TD ரிவார்ட்ஸ் விசா கார்டில் வரவேற்பு போனஸ் சலுகையைப் பெறுங்கள். ஒப்புதல் அவசியம். நிபந்தனைகள் பொருந்தும்2 ,3

 • TD® Aeroplan® Visa Platinum* கடன் அட்டை

  அங்கீகரிக்கப்பட்டதும், 20,000 வரையிலான Aeroplan புள்ளிகளையும்4, அதோடு, முதலாண்டு இலவச ஆண்டுக் கட்டணத்தையும் பெறுங்கள். நிபந்தனைகள் பொருந்தும். கணக்கானது செப்டம்பர் 3, 2024-க்குள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.


உத்தரவாதமற்ற கடன் அட்டைகள்

கனடாவிற்குப் புதிதாக வருபவர்கள், கூடிய விரைவில் நல்ல நாணயநிலை வரலாற்றை உருவாக்கிக்கொள்வது முக்கியமாகும், அது பணி வாய்ப்பு, அடமானக் கடன், கடன்கள் மற்றும் காப்பீடுகள் ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும்.

உத்தரவாதமற்ற உங்கள் கனடிய நாணயநிலையை உருவாக்கிக்கொள்ள TD கடன் அட்டை உங்களுக்கு உதவலாம். நீங்கள் கனடாவின் நிரந்தரக் குடியிருப்பாளர் என்றால், உங்களுக்கு எந்தக் கடன் வரலாறும் இல்லை என்றாலும் கூட, நீங்கள் $15,000 வரையிலான கடன் வரம்பிற்குத் தகுதி பெறலாம்.

நீங்கள் ஒரு சர்வேதச மாணவர் அல்லது தற்காலிகப் பணியாளர் எனில், உத்தரவாதமற்ற கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் நீங்கள் தகுதி பெறுவீர்கள்.நீங்கள் சர்வதேச மாணவராகவோ அல்லது தற்காலிகப் பணியாளராகவோ இருந்தால், உத்தரவாதமற்ற கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் நீங்கள் தகுதிபெறுகிறீர்கள்.

விண்ணப்பதாரர் TD கடன் அட்டையைப் பெறத் தகுதி பெறுவதற்கு, கடன் வழங்குவதற்கான TD வங்கியின் எல்லா தகுதிவிதிகளையும், பிற நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். முழு விவரங்களுக்கு, உங்களின் உள்ளூர் TD வங்கிக் கிளையைப் பார்வையிடவும்.

உத்தரவாதமற்ற கடன் அட்டைகளைக் காண்க.


உத்தரவாதத்தின் பேரிலான கடன் அட்டைகள்

நீங்கள் புதிய நாட்டிற்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலைகொண்டு, நல்ல கனடிய நாணயநிலை வரலாற்றை உருவாக்கிக்கொள்ளத் தொடங்கும்போது, உங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகைக்கும் மேலாக கடன் வரம்பு வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யலாம்.

இந்தச் சூழ்நிலையில், ஒரு உத்தரவாதத்தின் பேரிலான​​​​​​​ TD கடன் அட்டையானது, நீங்கள் எதிர்பார்க்கும் அதிக கடன் வரம்பை வழங்கலாம், மேலும் நல்ல கனடிய நாணயநிலை வரலாற்றையும் கடன் மதிப்பீட்டையும் உருவாக்கிக்கொள்ள உதவலாம்.

உத்தரவாதத்தின் பேரிலான கடன் அட்டைகளைக் காண்க
TD எமரால்டு ஃப்ளெக்ஸ் விசா விகிதம்
TD ரிவார்ட்ஸ் விசா
TD பிளாட்டினம் விசா டிராவல்
TD ஃபர்ஸ்ட் கிளாஸ் டிராவல் விசா இன்ஃபினிட்
TD கேஷ் பேக் விசா இன்ஃபினிட்
TD கேஷ் பேக் விசா


TD உலகளாவிய பண இடமாற்றத்தின் மூலம் எந்த நாட்டிற்கும் பணம் அனுப்புங்கள்

TD உலகளாவிய பண இடமாற்றம் என்பது 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் பணம் அனுப்ப உங்களுக்கு உதவுகின்ற ஒரு புதுமையான தளமாகும்4. இப்போது உங்கள் அன்பானவர்களுக்கு எப்படிப் பணம் செலுத்த வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம் - பல வழிகளில் அனுப்பலாம், பல இடங்களுக்கும் அனுப்பலாம்.

அதோடு, உங்களின் TD வரம்பிலா காசோலைக் கணக்கைக் கொண்டு நீங்கள் TD Global TransferTM-ஐப் பயன்படுத்தி பணம் அனுப்பும்போது $360 வரையிலான தொகையைப்3 பெறலாம்.


கனடாவில் பணம் அனுப்ப பத்திரமான வழி

TD செயலியில்1 அல்லது EasyWeb ஆன்லைன் வங்கிச் சேவை வழியாக மின்னஞ்சல் முகவரி மற்றும் கனடிய வங்கிக் கணக்கைக் கொண்டு Interac e-Transfer® 24/7-ஐ அனுப்ப வேண்டும்2. வாடகை செலுத்துதல், குடும்பத்திற்கு பணம் அனுப்புதல் அல்லது நண்பருக்கு பணம் திருப்பியளித்தல் போன்றவற்றுக்கு இது மிகச் சிறந்தது.

அன்னிய செலாவணி மற்றும் பயணக் காப்பீடு

கனடாவில் உங்கள் முதல் வீட்டை வாங்குதல்1

புதிய நாட்டில் நீங்கள் நிலைகொள்ளும் பயணத்தில் நீங்கள் எடுக்கும் மிகப்பெரிய நிதி சார்ந்த முடிவுகளில், உங்கள் முதல் வீட்டை வாங்குவது ஒன்றாகும்.

உங்களுக் கனடிய நாணயநிலை வரலாறு இல்லாவிட்டாலும் கூட, கனடாவில் நீங்கள் வீடு வாங்குவதற்கு நிதி திரட்ட TD வங்கி உதவக்கூடும்.

TD அடமானக் கடன் பெற நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்களா என்பதைத் தீர்மானிக்க TD அடமானக் நிபுணர் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவார், அத்துடன் அடமானக் கடன் பெறும் செயல்முறையிலும் உங்களுக்கு வழிகாட்டி உதவுவார், கட்டணம் செலுத்தும் இடைவேளை மற்றும் மொத்தமாகக் கட்டணம் செலுத்துதல் போன்ற நெகிழ்தன்மை கொண்ட அடமானக் கடன் அம்சங்கள், உங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி பணம் செலுத்தும் முறைகளைத் தேர்வு செய்துகொள்ள அனுமதிக்கின்றன.


TD அடமானக் கடனுக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்களா எனக் கண்டறிக

உங்களுக்கு நாணயநிலை வரலாறு இல்லை என்றாலும், பின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் TD அடமானக் கடன் அல்லது TD வீட்டு சமப்பங்கு FlexLineக்கு தகுதி பெறலாம்:

 • நிரந்தரக் குடியிருப்பு பெற்றவராக இருக்க வேண்டும், அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு பெற விண்ணப்பித்திருக்க வேண்டும்
 • நீங்கள் கனடாவில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருந்திருக்க வேண்டும்

1 உங்களுக்குக் கனடா கிரெடிட் வரலாறு இல்லையென்றாலும், TD கனடா ட்ரஸ்ட்டின் மற்ற தகுதி மற்றும் கிரெடிட் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், TD அடமானக் கடன் பெறத் தகுதி பெறுவீர்கள். கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று 5 ஆண்டுகளுக்கும் குறைவாக வாழும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கனடா கிரெடிட் வரலாறு இல்லாத தேர்வு கிடைக்கும்.

உங்கள் இலக்குகளை அடைவதற்கு TD வங்கி உதவக்கூடும்.

 • கார் வாங்குதல்

  உங்கள் நிதிநிலைக்கு ஏற்ப, வணிகர் அல்லது தனியார் விற்பனை வாகனக் கடனைக் கொண்டு புதிய அல்லது பயன்படுத்திய வாகனத்தை வாங்கிடுங்கள்.

 • வணிகம் தொடங்குதல்

  உங்கள் சிறு வணிக வங்கிச் சேவைத் தேவைகள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய நெகிழ்தன்மையுள்ள வங்கிச்சேவைத் தீர்வுகளை TD வங்கி கொண்டுள்ளது.

 • பணி ஓய்விற்குச் சேமித்தல்

  பணி ஓய்வு சேமிப்புத் திட்டம் (RSP) வரிச்சலுகைகளை வழங்கி உங்கள் பணி ஓய்வுக் காலத்தை சௌகரியமாக்குகிறது.

 • உங்கள் சேமிப்புகளை முதலீடு செய்தல்

  துரிதமாக உங்கள் முதலீடுகளைப் பெருகச் செய்ய, சேமிக்கும் பழக்கத்தை உங்கள் தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொள்ளுங்கள்.

 • முதலீடு மற்றும் வர்த்தகங்கள் செய்தல்

  TD நேரடி முதலீடு சேவையானது, வர்த்தக அணுகல் தளங்கள், ஆன்லைன் கருவிகள் மற்றும் ஆதரவை அளிக்கிறது.

 • கடனுதவி பெறுதல்

  கடன் அல்லது ஒதுக்குத்தொகைக் கடன் என்பது பெரிய பர்ச்சேஸ்களுக்கு மிக உதவியாக இருக்கும்.


தகுதித் தேவைகள்

பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்தால், உங்களுக்கு கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைத் தொகுப்பு கிடைக்கும்:

 • 5 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
 • நிரந்தரக் குடியுரிமை அட்டை அல்லது தற்காலிக அனுமதி அட்டை வழியாக, உங்கள் நிலை குறித்த சான்றை வழங்கவும்
 • இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
 • உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்

வங்கிக் கிளைக்கு வரும்போது என்னென்ன கொண்டு வர வேண்டும்

TD வங்கிக் கிளைக்கு வரும்போது, வசிபிடத்திற்கான பின்வரும் அடையாள ஆவணங்களில் 1 கொண்டுவரவும்:

 1. நிரந்தரக் குடியிருப்பு அட்டை

 2. புலம்பெயர்ந்தோர் விசா மற்றும் வந்திறங்கியதற்கான பதிவு (IMM படிவம் #1000)

 3. நிரந்தரக் குடியிருப்பு (IMM படிவம் #5292/5688) அல்லது தற்காலிகப் பணி அனுமதி (IMM படிவம் #1442/1102) அல்லது மாணவர் அனுமதி (IMM படிவம் #1208) ஆகியவற்றின் உறுதிப்படுத்தல்

அத்துடன் பின்வரும் உங்கள் தனிப்பட்ட அடையாள ஆவணங்களில் 1 கொண்டுவரவும்:

 1. செல்லுபடியாகும் பாஸ்போர்ட்

 2. கனடிய ஓட்டுனர் உரிமம்

 3. கனடிய அரசாங்க அடையாள அட்டை

சர்வதேச மாணவர்கள் ஒரு உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய படிப்பில் சேர்ந்ததற்கான சான்றையும் வழங்க வேண்டும். வழங்கப்பட்ட ஆவணம் பள்ளியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் பின்வரும் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்: மாணவர் பெயர், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் பெயர், படிப்பின் பெயர் மற்றும் படிப்பில் தற்போதைய ஆண்டு

குறிப்பு: பிற அடையாள ஆவணங்களும் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். விவரங்களுக்கு ஒரு TD கிளைக்குச் செல்லவும்.

நாங்கள் உங்கள் மொழியைப் பேசுகிறோம்

கேள்வி உள்ளதா? பதில்கள் இங்கே!