வெளிநாட்டுப் பணியாளர்கள்

ஒரு வெளிநாட்டுப் பணியாளராக, நீங்கள் வேலைக்காக உங்கள் சொந்த நாட்டிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்வீர்கள், அது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். ஆனால் உங்கள் நிதி சார்ந்த விஷயங்கள் முழுவதிலும் எங்களால் உங்களுக்கு உதவ முடியும். கனடாவில் உங்கள் நிதிகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதலை அல்லது தயாரிப்புகளை நீங்கள் தேடுகிறீர்கள் எனில், வங்கிச்சேவையை எளிதாக்க உதவும் தீர்வுகளை TD வழங்குகிறது.


அடிப்படைகளுடன் தொடங்குங்கள்

TD காசோலைக் கணக்குகள்

உங்களின் முதல் காசோலைக் கணக்கை அமைப்பது முக்கியமாகும், ஏனெனில் அது உங்களின் அன்றாட வங்கிச் சேவைக்கான திறவுகோலாகவும், பொதுவாக உங்கள் நிறுவனம் உங்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்துவதற்கான ஒரு வழியாகவும் இருக்கும். எங்களின் TD வரம்பிலா காசோலைக் கணக்கு, நீங்கள் தொடங்குவதற்கான ஒரு சிறந்த முறையாக இருக்கலாம்.

TD சேமிப்புக் கணக்குகள்

ஒரு சேமிப்புக் கணக்கானது, நீங்கள் முடிவாகச் செய்ய விரும்பும் பர்ச்சேஸிற்காக அல்லது அவசரநிலையின் போது பணத்தை ஒதுக்கி வைக்க உங்களுக்கு உதவலாம். TD தினசரி சேமிப்புக் கணக்கு அல்லது TD இ-பிரீமியம் சேமிப்புக் கணக்கு ஆகிய இரண்டும் கருத்தில் கொள்வதற்கான சிறந்த விருப்பத்தேர்வுகளாகும்.


TD உடனான வங்கிச்சேவையின் பலன்கள்

 • கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைத் தொகுப்பு

  உங்களுக்குத் தேவையான வங்கியியல் தயாரிப்புகளுடன் தொடங்கி, சேமிப்புகள் மற்றும் மதிப்பில் $1,985 வரை1 பெறுங்கள்.

 • வசதி

  கனடா முழுவதும் உள்ள 1,000கிளைகளில் 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் நாங்கள் 13.5 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறோம்.

 • TD பயன்பாடு

  உங்களின் அன்றாட வங்கிச்சேவை, வர்த்தகம் அல்லது கண்காணிப்பு ஆகியவற்றை விரல் நுனியில் செய்யும் திறனைப் பெற்றிடுங்கள்.

உங்கள் முதல் கனடிய வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கான செயல்படிகள்

தொடங்கத் தயாராக இருக்கிறீர்களா? நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம்! நீங்கள் ஒரு TD கிளைக்குச் செல்ல வேண்டியிருக்கும்; எனினும், இதற்கிடையில், நீங்கள் தயாராக உதவுவதற்கான சில எளிய செயல்படிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்படி 1
TD-இல் நாங்கள் வழங்கும் அனைத்துக் கணக்குகளையும் சரிபார்த்து, உங்கள் தேவைகளுக்கு எது பொருந்துகிறது என்பதைக் கண்டறியுங்கள்.

செயல்படி 2
உங்கள் கணக்கை அமைப்பதற்குத் தேவையான சரியான ஆவணங்களை சேகரியுங்கள்.

செயல்படி 3
கிளையில் உள்ள TD ஆலோசகரைச் சந்தியுங்கள்.

 

உங்கள் TD வங்கிக் கணக்கைத் தொடங்கத் தேவையான ஆவணங்கள்

TD-இல் ஒரு கணக்கைத் தொடங்க விரும்புகிறீர்களா? TD கிளைக்கு உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

 • தற்காலிக பணி அனுமதி (IMM படிவம் #1442/1102), மற்றும்
 • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, அல்லது
 • கனடிய ஓட்டுநர் உரிமம், அல்லது
 • கனடிய அரசாங்க அடையாள அட்டை

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான கூடுதல் தகவல்கள்

தொடர்பில் இருங்கள்

 • சந்திப்பைத் திட்டமிடவும்

  உங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று ஒரு வங்கிச்சேவை நிபுணரிடம் நேரடியாகப் பேசுங்கள் அல்லது தொலைபேசியில் பேசுங்கள்.

 • ஒரு வங்கிக் கிளையின் இடமறிக

  கனடாவில் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு அருகில் உள்ள TD வங்கிக் கிளைகளைக் கண்டறியலாம்.

 • எங்களை அழையுங்கள்

  எப்போதும், எங்கிருந்தும் வங்கிச் சேவை நிபுணருடன் பேசலாம்.

  1-866-222-3456 1-866-222-3456

கேள்வி உள்ளதா? பதில்கள் இங்கே!