TD அனைத்துலக மாணவர் GIC திட்டம்
உங்கள் சொந்த நாட்டை விட்டு கனடாவுக்குக் குடிபெயர்வது ஆகப்பெரிய காரியமாகும். TD-இல், கனடாவுக்குக் குடிபெயர்வதற்கான உங்கள் பயணத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.
நீங்கள் TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போதும், அதில் பங்கேற்கும் போதும், அது உங்கள் மாணவர் அனுமதி விண்ணப்பத்தை விரைவுபடுத்த உதவும்.
TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்தின் பலன்கள்
முழுவதுமாக டிஜிட்டல்
விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை
வசதியானது
நீங்கள் என்ன பெறுவீர்கள்?

TD அனைத்துலக மாணவர் GIC: முழு காலத்திற்கும் கட்டணமில்லாத முதலீடு மற்றும் நிலையான வட்டி விகிதத்தின் பாதுகாப்பை அனுபவியுங்கள். TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்தில் பங்கேற்பதற்கான அனைத்து நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தவுடன், அசல் தொகையானது சமமான மாதாந்திரப் பணமளிப்புகளைக் கொண்ட கட்டண அட்டவணையின்படி மீட்டெடுக்கப்படும்.
இது எப்படி வேலை செய்கிறது
TD அனைத்துலக மாணவர் GIC திட்டத்தில் பங்கேற்க 4 செயற்படிகளை மட்டுமே முடிக்க வேண்டும்:
செயற்படி 1. உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்
TD மாணவர் காசோலைக் கணக்கைத் தொடங்குவதற்கு விண்ணப்பப் படிவத்தையும் தொடர்புடைய ஆவணங்களையும் பெறுவதற்கு கோரிக்கை விடுக்கவும். பின்னர், தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்து மின்னணு முறையில் கையொப்பமிட்டு, கனடாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய நியமிக்கப்பட்ட கற்றல் நிறுவனத்திடமிருந்து நீங்கள் பெற்ற ஏற்புக் கடிதத்தின் சான்றைப் பதிவேற்றவும்.
செயற்படி 2. ஒரு அனைத்துலக வயர் டிரான்ஸ்பர் மூலம் பணத்தை அனுப்பவும்
உங்களின் TD மாணவர் காசோலைக் கணக்கில் தொகை சேர்க்க, உங்கள் விருப்பப்படி குறைந்தது CAD $10,000 முதல் அதிகபட்சமாக CAD $25,000 வரையிலான தொகைக்கு, உள்வரும் வயர் டிரான்ஸ்ஃபர் கட்டணமாக 3 உடன் ஒரு அனைத்துலக வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் பணம்2 அனுப்புங்கள்.
செயற்படி 3. உங்களின் TD அனைத்துல மாணவர் GIC -இல் தொகை சேர்த்திடுங்கள்
உங்களின் வயர் டிரான்ஸ்ஃபர் பணத்தை TD பெற்றவுடன், ஒரு TD அனைத்துலக மாணவர் GIC-இல் CAD $10,000 முதலீடு செய்யப்படும்.
கனடா அரசாங்கத்தின் Student Direct Stream (SDS) மாணவர் அனுமதி விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யுங்கள்.
செயற்படி 4. சரிபார்த்தல் மற்றும் GIC-இன் முதல் வழங்குத்தொகைக்காக ஒரு கிளையில் நியமன சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள்
நீங்கள் கனடாவிற்கு வந்ததும், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும், தேவையான ஆவணங்களில் கையொப்பமிடவும், உங்கள் கணக்குகளைச் செயல்படுத்தவும் எங்கள் 1,085 கிளைகளில் ஒன்றில் நியமன சந்திப்புக்கு முன்பதிவு செய்யவும். நாங்கள் CAD $2,000 தொகையையும் உங்கள் GIC-இல் சேர்ந்திருக்கும் ஏதேனும் வட்டியையும் மீட்டு, அதை உங்கள் TD மாணவர் காசோலைக் கணக்கில் வரவு வைப்போம்.
கூடுதலாகக் கேள்விகள் உள்ளனவா? திட்ட வழிகாட்டி PDF-ஐப் பார்க்கவும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கூடுதல் கணக்கு விவரங்கள் மற்றும் விதிமுறைகளின் தகவல்கள்
பயனுள்ள ஆதாரங்கள் மற்றும் தகவல்களுடன் ஒரு TD கணக்கைத் திறப்பது பற்றி மேலும் கண்டறியுங்கள்.