கனடாவிற்கு வருவதற்குத் திட்டமிடுங்கள்

தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்து உங்களுக்கு வழிகாட்ட TD தயாராக உள்ளது. கனடாவிற்குப் புதியவராக வரும் உங்கள் தேவைகளுக்கு எங்கள் தீர்வுகளில் எவை மிகச் சரியாக இருக்கும் என்பது பற்றிய ஆலோசனைகளை நாங்கள் வழங்குவோம். எங்கள் புதிய கனடியர்களுக்கான வங்கிச் சேவைத் தயாரிப்புகளைக் காண்க.


கனடாவில் வங்கிச் சேவை

கனடாவிற்குப் புதிதாக வந்தவர்களைச் சந்தியுங்கள், கனடாவை தங்கள் சொந்த நாடாக எப்படி மாற்றிக்கொண்டனர் என்றும் அவர்கள் ஏன் TD வங்கியைத் தேர்வுசெய்தார்கள் என்றும் அறிந்துகொள்ளுங்கள்.

TD வங்கிச் சேவை நிபுணர்கள் உங்களுக்காகத் தயாராக உள்ளனர்

உங்களுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்து வழிகாட்டவும் ஆலோசனைகள் வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் கனடா வரும்போது ஏதேனும் ஒரு TD வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள், நாங்கள் வழங்கும் தீர்வுகளில் உங்கள் தேவைளுக்கு எவை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் பரிந்துரைத்து உதவ ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்கள் புதிய இல்லமாக கனடாவில் உங்கள் நிதிப் பயணத்தைத் தொடங்கும் தருணத்தில் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்.

கனடாவில் வங்கிச் சேவை தொடர்பான பொதுவான சொற்கள்

உங்கள் நிதி பற்றிய நம்பிக்கை தோன்ற, இந்த வகை வங்கிச் சேவைத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்:

  • Interac e-Transfer®
    நீங்கள் கனடிய வங்கிக் கணக்கைப் பெற்றதும், கனடிய வங்கிக் கணக்கை வைத்திருக்கும் கனடா மக்களுக்கு நீங்கள் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் Interac e-Transfer® சேவை அனுமதிக்கிறது.
  • டெபிட் கார்டு
    உங்கள் டெபாசிட் கணக்கிற்கு அணுகலை வழங்கக் கூடிய கார்டே டெபிட் கார்டு எனப்படும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க இதைப் பயன்படுத்தலாம். சில்லறை வர்த்தகர்களிடம் நீங்கள் செய்யும் பர்ச்சேஸ்களுக்குப் பணம் செலுத்தவும் இந்தக் கார்டை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • காசோலைக் கணக்கு
    உங்கள் தினசரி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நீங்கள் இந்தக் கணக்கைப் பயன்படுத்தலாம். பொதுவாக, காசோலைக் கணக்குகளில் வட்டி கிடைக்காது.
  • சேமிப்புக் கணக்கு
    பொதுவாக இந்தக் கணக்கு நீங்கள் சேமித்து வைக்கும் பணத்திற்கு வட்டி அளிக்கிறது.
  • மணி ஆர்டர்/வங்கி வரைவோலை
    மணி ஆர்டர் என்பதும் வரைவோலை என்பதும் உங்கள் வங்கி உத்தரவாதம் அளிக்கின்ற காசோலைகளின் வகைகளாகும். ஒரு நபரோ நிறுவனமோ உத்தரவாதத்துடன் கூடிய பேமெண்ட் வேண்டும் என்று விரும்பும்போது , அதே சமயம் தொகை பெரியதாக இருக்கும்போது இவை பயன்படுத்தப்படுகின்றன.
  • கடன் அட்டை
    கடன் அட்டை என்பது நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய ஒரு வகைக் கடனாகும். உங்களுக்கு ஒப்புதல் கிடைத்தால், உங்களுக்கென்று ஒரு கடன் வரம்பு ஒதுக்கப்படும். இந்தக் கடன் வரம்பு என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு மாதமும் ஒரு குறைந்தபட்சத் தொகையைச் செலுத்த வேண்டும்.
  • காசோலை
    நீங்கள் ஒரு நபருக்கோ நிறுவனத்துக்கோ பணம் செலுத்த வேண்டுமெனில் அதற்காக நீங்கள் பணத்தை எடுக்க காசோலை பயன்படுகிறது.

இடம்பெயர்வதற்குத் தயாராகுங்கள்

நீங்கள் இடம்பெயர்வதற்குத் தயாராக உதவும் சில குறிப்புகளாக கனடிய அரசாங்கம் பரிந்துரைப்பவை:

  • வேலை தேட, வசிப்பிடம் கண்டறிய, உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கண்டறிய மற்றும் ஆங்கில வகுப்புகளுக்குப் பதிவுசெய்ய, புதியவர்களுக்கான சேவைகளைப் பாருங்கள். கனடிய அரசாங்க இணையதளத்தில் இருந்து நீங்கள் தொடங்கலாம்.
  • நீங்கள் இங்கு வந்து சேரும்போது எங்கு தங்க வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக்கொள்ளுங்கள். நிரந்தரமாகத் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்கும் முன்பு, ஓட்டல் அல்லது உறவினர் வீடு போன்று நீங்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஏற்பாட்டை செய்துகொள்ளவும்.
  • செல்லுபடியான பாஸ்போட், இமிக்ரேஷன் விசா, பிறப்புச் சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களையும், கனடாவிற்கு நீங்கள் கொண்டுவரும் எல்லா உடைமைகளையும் அவற்றின் மதிப்பையும் குறிப்பிடும் பட்டியலையும் கொண்டு வரவும்.
  • நீங்கள் ஃபெடரல் ஸ்கில்டு ஒர்க்கர் திட்டம் அல்லது ஃபெடரல் ஸ்கில்டு டிரேட்ஸ் திட்டத்தின் வழியாக கனடாவிற்கு வருவதானால், உங்கள் நிதிகளுக்கான ஆதாரத்தைத் தயார்செய்துகொள்ளவும்.
  • உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ பள்ளிக்கூடம் ஒன்றைக் கண்டறியுங்கள். அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளியைத் தேர்வுசெய்யுங்கள்.
  • உங்கள் நிதிகளை ஒழுங்கமைத்து, நீங்கள் கனடாவிற்கு வந்து சேரும்போது எளிதாக அணுகும் வகையில் அவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். நீங்கள் $10,000-க்கும் அதிகமாக அல்லது அதற்கு சமமான ரொக்கத்தைக் கொண்டுவருகிறீர்கள் என்றால், நீங்கள் எல்லையில் அதை அறிவித்து உறுதிப்படுத்த வேண்டும்.
  • தனியார் உடல்நலக் காப்பீட்டைப் பெறுவது பற்றி கருத்தில்கொள்ளவும். கனடாவில் மூன்று மாதங்கள் தங்கிய பிறகு, நீங்கள் அரசாங்க உடல்நலக் காப்பீட்டைப் பெறத் தகுதி பெறுவீர்கள்.
  • நீங்கள் வேலை தேடுபவர் என்றால், வேலை தேடத் தொடங்குங்கள். உங்கள் தகுதிகள் கனடாவில் அங்கீகரிக்கப்படுகின்றதா என்று கண்டறிந்து, தற்போதைய வேலை வாய்ப்புகளைக் காண, கனடாவில் வேலை செய்தல் போன்ற வேலைவாய்ப்பு இணையதளங்களைப் பயன்படுத்துங்கள்.
  • கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • நான்கு விதமான பருவநிலைகளுக்கு உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். கனடாவில் அதிக வெப்பமும் அதிக குளிரும் இருக்கும். ஆகவே அதற்கேற்ப சரியான ஆடைகளைக் கொண்டு வாருங்கள்.

கனடாவிற்கு குடிபெயர்தல்

கனடிய அரசாங்கம் பின்வருபவை உள்ளிட்ட பல குடிபெயர்வு முறைகளைப் பட்டியலிடுகிறது:

  • விரைவு நுழைவு
  • குடும்ப ஸ்பான்சர்ஷிப்
  • புரோவின்ஸ் நாமினி
  • பராமரிப்பாளர்கள்
  • தொழில்துவக்க விசா
  • சுயதொழில்

கனடாவிற்கு எப்படிக் குடிபெயர்வது என்பது பற்றி மேலும் தகவல் பெற கனடிய அரசாங்க இணையதளத்தைப் பார்வையிடவும்.

கனடாவில் வாழ்வதற்கான செலவு

கனடாவில் வாழ்வதற்கான பொதுவான செலவுகள் பற்றி கனடிய அரசாங்கம் கூறுவது:

  • வீடு: கனடியர்கள் தங்களது வருமானத்தில் 30%-க்கும் குறைவான தொகையையே வசிப்பிடத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. வாடகை வீட்டில் வசித்தால், முதல் மற்றும் கடைசி மாத வாடகையை முன்பணமாக நீங்கள் செலுத்த வேண்டும்.
  • வரிகள்: உங்கள் புரோவின்ஸ் மற்றும் உங்கள் வருமானத்தைப் பொறுத்து நீங்கள் செலுத்த வேண்டிய வரி இருக்கும். பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு கனடியர்கள் புரோவின்ஸ் மற்றும் ஃபெடரல் அரசாங்கத்திற்கு வரி கட்டுவார்கள், மேலும் சொத்து வரிகளும் கட்டுவார்கள். வரிகள், உங்கள் சமூகத்தின் முக்கியப் பகுதிகளுக்கு செலவிடப்படும்.
  • உடல்நலக் காப்பீடு: கனடாவில் அரசு உடல்நலக் காப்பீடு உள்ளது, ஆனால் பார்வை, பல் மருத்துவம், மருந்துச்சீட்டு மருந்துகள், சக்கர நாற்காலிகள் ஆகியவை இந்த காப்பீடுகளுக்குள் அடங்காது. பல பிரச்சனைகளுக்கும் சேர்த்து காப்பீடு வேண்டுமானால் நீங்கள் தனியார் காப்பீடு பெறலாம்.
  • வீடு மற்றும் கார் காப்பீடு: கனடாவில் நீங்கள் கார் வைத்திருந்தால், கார் காப்பீடு கட்டாயமாகும். வீடு, காண்டோ மற்றும் குடியிருப்பாளர் காப்பீடு ஆகியவை கட்டாயமல்ல, ஆனால் உங்கள் சொத்தைக் காக்க இவை உதவும்.
  • நுகர்பொருள்: வாடகைக்கு குடியிருப்போர் எனும் வகையில், உங்கள் வாடகையில் நுகர்பொருள்களுக்கான கட்டணமும் அடங்கியிருக்கலாம் அப்படி இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, மின்சாரம், இயற்கை எரிவாயு, நீர், கேபிள் மற்றும்/அல்லது தொலைத்தொடர்பு ஆகியவை நுகர்பொருள்களில் அடங்கலாம்.
  • ஊதியத்தில் பிடித்தம்: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து வருமானவரி, பணியாளர் காப்பீடு, யூனியன் தவணைகள் (யூனியனில் இருந்தால்) அல்லது ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றுக்காக பிடித்தம் செய்துகொள்ளும்.
  • குழந்தைப் பராமரிப்பு: குழந்தைப் பராமரிப்பு மற்றும் மானியங்கள் உங்கள் புரோவின்சைப் பொறுத்து அமையும். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, டே-கேர் அல்லது பள்ளி நேரத்திற்குப் பிறகான வகுப்புகள் ஆகியவற்றுக்கு அவர்களை அனுப்புவது நல்ல யோசனையாக இருக்கலாம்.
  • டிப்ஸ்: கனடாவில், பல சேவைகளுக்கு டிப்ஸ் வழங்குவது பொதுவானதாகும். உதாரணமாக, நீங்கள் சிறப்பாக சேவை வழங்கிய சர்வர், ஹேர் ஸ்டைலிஸ்ட், டாக்சி டிரைவர் போன்றவர்களுக்கு கனடியர்கள் டிப்ஸ் அளிப்பார்கள்.
  • தகவல்தொடர்பு: நீங்கள் வசித்திருக்கக் கூடிய பிற நாடுகளைக் காட்டிலும், கனடாவில் செல்போன் திட்டங்கள் மற்றும் இணைய சேவைக்கான கட்டணங்கள் அதிகமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.

கனடாவிற்கு குடிபெயர்வதன் முதல் படி

உங்கள் குடிபெயர்வு குறித்துத் திட்டமிடுவதற்கு உதவக்கூடிய வகையில் கனடிய அரசாங்கம் அளிக்கும் சில தகவல்கள் இவை:

ஏன் TD-ஐத் தேர்வுசெய்ய வேண்டும்?

  • நம்பிக்கை

    TD வங்கியில் எங்கள் நிதியியல் நிபுணர்கள் உங்கள் தேவைகளைப் புரிந்துகொள்வார்கள், ஆகவே உங்களுக்கு அவர்கள் சிறப்பாக உதவுவார்கள்.

  • வசதி

    கனடாவில் நீண்ட வேலை நேரம் கொண்ட 1,100-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் உங்களுக்கு சேவை வழங்கத் தயாராக உள்ளோம். மேலும் உங்களுக்கு சிறப்பான சேவை புரிவதற்காக, 300 கிளைகள் ஞாயிறுகளிலும் திறந்திருக்கும்.

  • பாதுகாப்பு

    உங்கள் நிதியின் பாதுகாப்பைப் பராமரிப்பதற்காகவே எப்போதும் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். உங்கள் மொபைல் எண்ணை எங்களிடம் வழங்கிய உடனே, உங்கள் TD டெபாசிட் கணக்குகள் மற்றும் TD கிரெடிட் கார்டுகளில் TD மோசடி எச்சரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுவிடும்.

தனிப்பட்ட கிளைகளின் வேலை நேரங்கள் வேறுபடலாம்.


TD-இல் கார்ப்பரேட் குடியுரிமை

எங்கள் கார்ப்பரேட் குடியுரிமைத் தளமான ரெடி கமிட்மென்ட், நான்கு முக்கியத் தூண்களான ஆற்றல் மிக்க உலகம், இணைப்புள்ள சமூகங்கள், நிதியியல் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட உடல்நலம் ஆகியவற்றுக்கு துணைபுரியும் நோக்கில் 2018-இல் தொடங்கப்பட்டது. நீங்களும் நாங்களும் ஒன்று சேர்ந்து, இன்னும் அற்புதமான எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறந்து விட ஒருவருக்கொருவர் உதவுவோம்.


புதியவர்களுக்கான மேலும் சில தகவல்கள்


தொடர்பில் இருங்கள்

கேள்வி உள்ளதா? பதில்கள் இங்கே!