நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
நிரந்தரக் குடியிருப்பாளர்கள்
கனடாவிற்குப் புதியவர்களாக, உங்கள் வாழ்க்கையை இங்கு அமைத்துக் கொள்வதே உங்களின் முதன்மையான பணி என்பதையும், அதன் ஒரு பகுதி உங்கள் நிதியை நிர்வகிப்பது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். வங்கிக் கணக்கு தொடங்குவது முதல், வீடு வாங்குவது வரை, உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு உதவிடும் வகையில் தயாரிப்புகளும் சேவைகளும் எங்களிடம் உள்ளன.
ஒரு புதியவராக RRSP மற்றும் TFSA திட்டமிடல்
கனடாவில் உங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டு விருப்பத்தேர்வுகளைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளீர்களா? இந்த இரண்டு திட்டங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்:
- பதிவுசெய்யப்பட்ட பணி ஓய்வு சேமிப்புத் திட்டம் (Registered Retirement Savings Plan, RRSP)
- வரியற்ற சேமிப்புக் கணக்கு (Tax-Free Savings Account, TFSA)
TD-இல் வழங்கப்படும் பல RRSP மற்றும் TFSA முதலீட்டு விருப்பத்தேர்வுகளில் இருந்து தேர்வு செய்யுங்கள். நாங்கள் உங்களின் சேமிப்பு இலக்குகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை உருவாக்கவும், முதலீட்டுச் செயல்முறையின் மூலம் உங்களை வழிநடத்தவும் உங்களுடன் இணைந்து செயல்படுவோம்.
புதியவர்களுக்கான RESP திட்டமிடல்
உங்கள் குழந்தையின் கல்வியில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்புத் திட்டத்திற்கு (RESP) பணம் செலுத்துங்கள். நிதிகள், திரும்ப எடுக்கப்படும் வரை வரி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வளரும்.
உங்களுக்கான அல்லது ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகளுக்கான கல்விக்காக நீங்கள் சேமிக்கிறீர்களா என்பதைப் பொறுத்து, நீங்கள் ஒரு தனிப்பட்ட RESP அல்லது குடும்ப RESP -ஐத் தேர்வு செய்யலாம். அங்கிருந்து, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற RESP திட்டத்தைக் கண்டறிய உதவும் TD நிதி ஆலோசகரிடம் பேசுங்கள்.
RESP திட்டமிடல் பரிசீலனைகள்
நீங்கள் TD உடன் ஒரு RESP-ஐத் தொடங்கியதும், உங்கள் பங்களிப்புகளைத் திட்டமிட உதவும் பின்வரும் காரணிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்:
-
தனிப்பயிற்சிக்கான செலவு, பாடப் பொருட்கள், வாழ்க்கைச் செலவுகள் போன்றவை.
-
கனடா கல்விச் சேமிப்பு மானியம் போன்ற அரசாங்க மானியங்கள்.
-
ஒரு குழந்தைக்கு $50,000 வரையிலான பங்களிப்பு வரம்புகள்.
-
சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற சாத்தியமான அபாயங்கள்.
உங்கள் அடமானக் கடன் பயணத்தைத் தொடங்குதல்
நீங்கள் நிதி ரீதியாக நிலைபெற்று, உங்கள் முதல் வீட்டை வாங்கத் தயாராக இருந்தால், நீங்கள் ஒரு அடமானக் கடனைப் பெற வேண்டியிருக்கும். மேலும் இந்தச் செயல்முறையில் உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்கள் அடமானக் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்த விரும்பும் கால அளவைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் செலுத்த விரும்பும் வட்டி வகையைத் தேர்வு செய்யுங்கள் - நிலையான அல்லது மாறுநிலையான விகிதம். பின்னர் உங்கள் பணமளிப்புகளின் நெகிழ்வுத்தன்மையைத் தேர்ந்தெடுங்கள் - திறந்த அல்லது வரையறுத்த அடமானம்.