நிரந்தரக் குடியிருப்பாளர்கள்

கனடாவிற்குப் புதியவர்களாக, உங்கள் வாழ்க்கையை இங்கு அமைத்துக் கொள்வதே உங்களின் முதன்மையான பணி என்பதையும், அதன் ஒரு பகுதி உங்கள் நிதியை நிர்வகிப்பது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். வங்கிக் கணக்கு தொடங்குவது முதல், வீடு வாங்குவது வரை, உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு உதவிடும் வகையில் தயாரிப்புகளும் சேவைகளும் எங்களிடம் உள்ளன.


கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச் சேவைத் தொகுப்பு

வங்கிக் கணக்குகள் முதல் கடன் அட்டைகள் வரை, எங்களின் கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச் சேவைத் தொகுப்பு மூலம் TD உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு புதுவரவாளராக TD உடனான வங்கிச்சேவையின் பலன்கள்

நீங்கள் கனடாவிற்குப் புதியவர் என்பதால், ஒரு புதிய நாட்டில் உங்கள் நிதியை நிர்வகிக்கும் போது எங்கிருந்து தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் TD உடனான வங்கிச்சேவை மூலம், உங்கள் வங்கித் தேவைகளுக்கு ஏற்ற சரியான தயாரிப்புகளைக் கண்டறிய எங்களால் உங்களுக்கு உதவ முடியும், எனவே நீங்கள் நம்பிக்கையுடன் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பின்வரும் பலன்களைப் பெறுங்கள்:

 • உங்கள் TD வரம்பற்ற காசோலைக் கணக்கில் 12 மாதங்களுக்கு மாதாந்திரக் கட்டணங்கள் இல்லை.1
 • முதல் 3 மாதங்களில் தகுதியான TD தினசரி சேமிப்புக் கணக்குடன் உங்கள் சேமிப்பிற்கு 1% போனஸ் வட்டி விகிதம்.2
 • தகுதியான TD கடன் அட்டைகளுக்கு வருடாந்திரக் கட்டணம் எதுவும் இல்லை.

நீங்கள் கணக்கைத் தொடங்கிய முதல் 30 நாட்களுக்குள் குறைந்தபட்சம் $10,000-ஐ கணக்கில் செலுத்தும்போது $200 போனஸை3 ரொக்கமாகப் பெறுவீர்கள்.

கனடாவில் ஒரு புதுவரவாளராக எவ்வாறு நன்மதிப்பு உருவாக்குவது

 • கனடாவில் உங்கள் முதல் கடன் அட்டையைப் பெறுங்கள்

  நீங்கள் ஒரு TD கடன் அட்டையைப் பயன்படுத்தி நன்மதிப்பை உருவாக்கத் தொடங்கலாம். சில வேலைகள், அடமானம் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது சிறந்த நன்மதிப்பு உதவியாக இருக்கும்.

 • உங்கள் கடன் அட்டையில் மேற்கொள்ளும் செலவினங்களை நிர்வகியுங்கள்

  ஒவ்வொரு மாதமும் விவேகமாக செலவு செய்யுங்கள் இது உங்களை வரவுசெலவுத் திட்டத்திற்குள் செலவு செய்வதற்கு உதவலாம், மேலும் ஒரு சிறந்த நன்மதிப்பு வரலாற்றை உருவாக்கவும் உதவலாம்.

 • கடன் அட்டைக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்திடுங்கள்

  ஒவ்வொரு மாதமும் உங்கள் கடன் அட்டைக்குச் செலுத்த வேண்டிய தொகையை இறுதித் தேதிக்கு முன்பே செலுத்துங்கள். இது உங்கள் நன்மதிப்பு மதிப்பெண்ணை அதிகரிக்கவும், வட்டி செலுத்துவதைத் தவிர்க்கவும் உதவும்.


நீங்கள் தொடங்க உதவுவதற்கான தகவல்கள்

கனடாவில் உங்கள் முதல் காருக்கு நிதியுதவி பெறுதல்

உங்களின் முதல் வாகனத்தை வாங்க ஆவலுடன் இருக்கிறீர்களா? TD வாகன நிதி ஆனது தகுதிபெறும் அனைத்து கனடாவிற்குப் புதியவர்களுக்கும் நெகிழ்வான நிதியுதவி மூலம் உதவ முடியும்.

TD வாகன நிதிக் கடனுக்காக விண்ணப்பித்தல்:

 • நிலையான/மாறுநிலையான விகிதங்கள் மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கால நீளம் ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்யுங்கள்.
 • உங்களுக்கு ஏற்ற கட்டணக் கால அட்டவணையைத் தேர்ந்தெடுங்கள்.
 • நீங்கள் வாங்கத் தயாராக இருக்கும்போது, TD வாகன நிதிக் கடனை வழங்குமாறு கேளுங்கள்.

புதியவர்களுக்கான மேலும் சில தகவல்கள்தொடர்பில் இருங்கள்

 • சந்திப்பைத் திட்டமிடவும்

  உங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று ஒரு வங்கிச்சேவை நிபுணரிடம் நேரடியாகப் பேசுங்கள் அல்லது தொலைபேசியில் பேசுங்கள்.

 • ஒரு வங்கிக் கிளையின் இடமறிக

  கனடாவில் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு அருகில் உள்ள TD வங்கிக் கிளைகளைக் கண்டறியலாம்.

 • எங்களை அழையுங்கள்

  எப்போதும், எங்கிருந்தும் வங்கிச் சேவை நிபுணருடன் பேசலாம்.

  1-866-222-3456 1-866-222-3456

கேள்வி உள்ளதா? பதில்கள் இங்கே!