கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்கள்

நீங்கள் கனடாவில் வசிக்கும் சர்வதேச மாணவரா?

உங்கள் கல்வியே உங்களின் முன்னுரிமை என்பதை நாங்கள் அறிவோம். மாணவர்களுக்கான வங்கிக் கணக்கைத் தொடங்குவது முதல் பட்ஜெட் போடுவது வரை அனைத்திற்கும் உதவி பெறுங்கள். எனவே, உங்கள் நிதியுதவிகள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம், மேலும் உங்களுக்கு முக்கியமானவற்றின் மீது நீங்கள் கவனம் செலுத்தலாம்.


TD சர்வதேச மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பு

கனடாவில் உங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக உங்கள் வங்கிச்சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சர்வதேச மாணவர்களுக்கான $850 மதிப்புள்ள2 சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! நிபந்தனைகள் பொருந்தும்.

மாணவர் வங்கிக் கணக்கு மற்றும் கடன் அட்டையின் நன்மைகள்

கனடாவில் ஒரு சர்வதேச மாணவராக, நீங்கள் TD-இன் வங்கிச்சேவையைப் பெறும்போது உங்கள் நிதி நிலைமைகள் குறித்து நம்பிக்கையாக உணர்வீர்கள். மாணவர் வங்கிக் கணக்கைத் தொடங்குவது முதல் கடன் அட்டைகள் மற்றும் GICகளைப் பெறுவது வரை, நீங்கள் அமைப்பதற்கு நாங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு TD மாணவர் காசோலைக் கணக்கைத் தொடங்கும்போது, நீங்கள் மாதாந்திரக் கட்டணம் எதுவும் செலுத்த மாட்டீர்கள், ஒவ்வொரு மாதமும் வரம்பற்ற பரிவர்த்தனைகள் சலுகையைப் பெறுவீர்கள், மேலும் மிகை எடுப்புப் பாதுகாப்பை (ஒப்புதலுக்கு உட்பட்டது) பெறுவீர்கள், இவை உங்களுக்கு அதிக மன அமைதியைத் தரும். நிபந்தனைகள் பொருந்தும். ஒரு கடன் அட்டையைப் பெற ஆவலாக இருக்கிறீர்களா? TD-இன் நன்மதிப்பு வழங்குவதற்கான அனைத்து தேர்வு அளவுகோல்களையும் மற்ற நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால் நீங்கள் தகுதி பெறலாம்.

கனடாவில் உங்கள் நன்மதிப்பு வரலாற்றை உருவாக்கத் தொடங்குங்கள்.

சிறந்த நன்மதிப்பைப் பெற்றிருப்பது முக்கியமாகும், மேலும் நீங்கள் பண நிதி பெற விரும்பினால், அது உங்களுக்கு உதவும்.

  • ஒரு TD கடன் அட்டையைப் பெறுங்கள்

    ஒரு சர்வதேச மாணவராக, நீங்கள் கட்டணமில்லா கடன் அட்டையைப் பெறத் தகுதி பெறலாம்.

  • உங்கள் செலவுகளை நிர்வகியுங்கள்

    நீங்கள் கடன் அட்டையை நம்பியிருக்கிறீர்கள் எனில், உங்கள் கடன் அட்டையை அதிகம் பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாகப் பாதிக்கும்.

  • உங்கள் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்துங்கள்

    எப்பொழுதும் உங்கள் கடன் அட்டை, கடன் மற்றும் கட்டணங்களை உரிய நேரத்தில் (பணம் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட தேதிக்குள்) செலுத்துங்கள்.


நீங்கள் தொடங்க உதவுவதற்கான தகவல்கள்

சர்வதேச மாணவர்களுக்கான நிதி உதவி

படிப்பதற்காக ஒரு புதிய நாட்டிற்குச் செல்வது செலவு மிகுந்ததாக இருக்கும். அந்த நிதிச்சுமையைக் குறைப்பதற்கு, நிதி உதவி பெறுவதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. கனடாவில், சர்வதேச மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் உதவிச் சம்பளம் போன்ற விருப்பத்தேர்வுகள் உள்ளன. உங்களுக்குள்ள தேர்வுகளை மேலும் விரிவாக அறிய, நீங்கள் படிக்க விரும்பும் பள்ளி மற்றும் கனடா அரசாங்கத்திடம் சரிபார்க்கவும். உங்கள் நிதி நிலைமையை நிர்வகிக்க உதவுவதற்கு, நீங்கள் மாணவர் ஒதுக்குத்தொகைக் கடன் கருத்தில்கொள்வதே மற்றொரு விருப்பத்தேர்வாகும்.

புதியவர்களுக்கான மேலும் சில தகவல்கள்



தொடர்பில் இருங்கள்

  • சந்திப்பைத் திட்டமிடவும்

    உங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று ஒரு வங்கிச்சேவை நிபுணரிடம் நேரடியாகப் பேசுங்கள் அல்லது தொலைபேசியில் பேசுங்கள்.

  • ஒரு வங்கிக் கிளையின் இடமறிக

    கனடாவில் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு அருகில் உள்ள TD வங்கிக் கிளைகளைக் கண்டறியலாம்.

  • எங்களை அழையுங்கள்

    எப்போதும், எங்கிருந்தும் வங்கிச் சேவை நிபுணருடன் பேசலாம்.

    1-866-222-3456 1-866-222-3456

கேள்வி உள்ளதா? பதில்கள் இங்கே!