கனடாவிற்குப் புதியவர்களுக்கு TD வாகனக் கடன் திட்டம் எவ்வாறு உதவுகிறது

உங்கள் இலக்கை நோக்கி விரைவில் ஓட்டத் தொடங்குங்கள். எங்களின் நெகிழ்வான வாகன நிதித் தீர்வுகள் கனடாவிற்குப் புதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

TD வாகனக் கடன் திட்டம் மூலம் கார் கடன் பெறுவதன் நன்மைகள்

  • டீலர்ஷிப் நெட்வொர்க்

    கனடா முழுவதும் உள்ள 3,500-க்கும் அதிகமான டீலர்ஷிப்களில் TD வாகனக் கடனுதவி வழங்கப்படுகிறது.

  • குறைவான கனடிய கடன் வலாறு இருந்தாலும், அல்லது கடன் வரலாறே இல்லையென்றாலும் கடனுதவி கிடைக்கலாம்

    நீங்கள் கனடாவிற்குப் புதியவராக இருந்தால், கனடாவில் நீங்கள் வாகனம் வாங்குவதற்கு நாங்கள் உதவலாம் -- உங்களுக்குக் குறைவான கனடிய கடன் வலாறு இருந்தாலும், அல்லது கடன் வரலாறே இல்லையென்றாலும்.

  • டீலர்ஷிப்பில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குக் கடனுதவி அளித்தல்

    உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற புதிய அல்லது பயன்படுத்திய காரை வாங்குவதற்கு உங்களுக்குத் தேவைப்படும் பணத்திற்கு விண்ணப்பிக்கவும்.

  • விருது பெற்ற டீலர் திருப்திநிலை

    எங்கள் டீலர்கள் காரணமாக, TD வாகனக் கடன் திட்டமானது, பிரைம் அல்லாத மற்றும் பிரைம் கிரெடிட் நான்-கேப்டிவ் ஆட்டோமோட்டிவ் ஃபைனான்சிங் லெண்டர்களுடன் அதிகபட்ச டீலர் திருப்திக்கான J.D. பவர் விருதைப் பெற்றுள்ளது. இது நான்-கேப்டிவ் நான்-பிரைம் பிரிவுக்கான தொடர்ச்சியான 7வது ஆண்டைக் குறிக்கிறது1.

கனடாவில் புதிய அல்லது பயன்படுத்திய காரை வாங்குதல்

புதிய அல்லது பயன்படுத்திய காரை வாங்குவதற்கான முடிவானது உங்கள் பட்ஜெட், விருப்பத்தேர்வுகள், விரும்பிய அம்சங்கள் மற்றும் நீண்ட கால இலக்குகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.

புதிய கார்

பயன்படுத்திய கார்

விலை

பொதுவாக, பயன்படுத்திய காரை விட அதிக விலை.

புதிய கார்களை விட அதிகக் கட்டுப்படியாகும் விலையைக் கொண்டது, அதனால் இது பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பத்தேர்வாக மாறுகிறது.

உத்தரவாதம்

உற்பத்தியாளர் உத்தரவாதங்களுடன் வருகிறது, இது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பழுது மற்றும் பராமரிப்புக்கான காப்புறுதிப் பாதுகாப்பை வழங்கலாம்.

வழக்கமாக, உத்தரவாதப் பாதுகாப்பைக் கொண்டிருப்பதில்லை.

பராமரிப்பு

வாங்குபவர்கள் உரிமைத்துவத்தின் தொடக்க ஆண்டுகளில் குறிப்பாக அவர்களுக்கு உத்தரவாதம் இருப்பதால் குறைந்த பராமரிப்புச் செலவுகளை அனுபவிக்கலாம்.

பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது ஆரம்பத்தில் மலிவானதாக இருக்கலாம், குறிப்பாக அவற்றின் வயது மற்றும் மைலேஜ் அதிகரிக்கும் போது, ​​பராமரிப்பும் பழுதுபார்ப்பும் அடிக்கடி தேவைப்படலாம்.

தேய்மானம்

புதிய கார்கள் உரிமைத்துவத்தின் முதல் ஆண்டில் அவற்றின் மதிப்பில் 20% வரை இழக்கலாம்.

அவற்றின் தேய்மானத்தின் மிக முக்கியமான பகுதியை ஏற்கனவே அனுபவித்திருக்கிறார்கள், இது புதிய கார்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் மதிப்பை காலப்போக்கில் சிறப்பாக வைத்திருக்க அனுமதிக்கலாம்.

சமீபத்திய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம்

பெரும்பாலும் சமீபத்திய அம்சங்கள், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன; அதிக நவீனமான வாகனம் ஓட்டும் அனுபவத்தை வழங்குகின்றன.

பயன்படுத்தப்பட்ட காரானது, அது தயாரிக்கப்பட்ட ஆண்டைப் பொறுத்து, சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் புதுப்பித்த நிலையில் இல்லாமல் போகலாம்.

காரை வாங்கும் செயல்முறை

கனடாவிற்குப் புதியவர்கள் செய்யும் முதல் பெரிய பர்ச்சேஸ்களில் பெரும்பாலும் கார் வாங்குவதும் ஒன்றாகும். கார் வாங்குவதற்கான சில முக்கிய படிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கனடாவில் கார் வாங்கும் போது தகவல்களைச் சேகரிக்கவும், தகவலறிந்த முடிவை எடுக்கவும் பல்வேறு வழிகள் உள்ளன. இணையவழி ஆராய்ச்சி, உற்பத்தியாளர் இணையதளங்கள், வாகன மதிப்புரைகள் மற்றும் உள்ளூர் டீலர்ஷிப்களைப் பார்வையிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.


TD வாகனக் கடனுதவிக்கு ஒரு புதியவராக - நிரந்தரக் குடியிருப்பாளராகவோ அல்லது வெளிநாட்டுப் பணியாளராகவோ தகுதி பெற, நீங்கள் கனடாவில் வசிக்கின்ற உங்களின் முதல் 5 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் மற்றும் வேலைவாய்ப்பு அல்லது வருமானத்திற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.


எங்களின் வாகனக் கடன் கால்குலேட்டர் உங்களின் மாதாந்திரப் பேமெண்ட்டுகள் எவ்வளவு இருக்கும் என்பதை அறிய உங்களுக்கு உதவலாம். கால்குலேட்டரைப் பயன்படுத்திப் பாருங்கள்.


டீலர்ஷிப்கள் மூலம் விற்கப்படும் புதிய அல்லது பயன்படுத்திய வாகனங்களுக்கு எங்களிடம் கடனுதவி விருப்பத்தேர்வுகள் உள்ளன.

எங்களின் புதிய கனடியர்களுக்கான கடனுதவித் தீர்வுகளுக்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதைக் கண்டறியுங்கள்.

அல்லது தனியார் விற்பனைக் கார் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


நீங்கள் ஒரு காரை வாங்கத் தயாராக இருக்கும் போது, ​​நீங்கள் வாங்குவதற்குத் தயாராக வேண்டும். நீங்கள் வாங்குவதற்குத் தயாராக இருக்கும்போது எதைக் கொண்டு வர வேண்டும், எதை எதிர்பார்க்கலாம் என்பதற்கான பயனுள்ள பட்டியல்களை நாங்கள் தயார் செய்துள்ளோம். நீங்கள் பயனுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

தனியார் விற்பனை வாகனக் கடன்

நீங்கள் விரும்பும் வாகனத்தை வாங்க உதவும் நெகிழ்வான கடன் வாங்கும் விருப்பத்தேர்வான தனியார் விற்பனை வாகனக் கடனும் உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

  • இதற்குக் கிடைக்கிறது: புதிய அல்லது பயன்படுத்திய வாகனத்தை தனிப்பட்ட முறையில் வாங்குதல்
  • நீங்கள் பெற முடியும் கடனுதவி2: $50,000 வரை
  • திருப்பிச் செலுத்துதல்: எங்கள் கொள்கைகளின்படி திருப்பிச் செலுத்துவதற்கான கால அட்டவணையை உருவாக்க, நாங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்றுவோம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களின் கனடாவிற்குப் புதியவர்களுக்கான திட்டங்கள் குறைந்த கடன் வரலாற்றைக் கொண்ட அல்லது கடன் வரலாறே இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.


உங்களால் பேமெண்ட்டுகளைச் செய்ய முடியும் வரை, நீங்கள் விரும்பும் எந்த தயாரிப்பையும் மாடலையும் தேர்வு செய்யலாம். உங்கள் கடன் தொகை, அதன் வட்டி விகிதம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் உங்கள் பேமெண்ட் தீர்மானிக்கப்படும்.


காரின் மாடல் ஆண்டைப் பொறுத்து, திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகள் மாறுபடலாம். நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு, இது 96 மாதங்கள் வரை இருக்கலாம். தற்காலிகப் பணியாளர்களுக்கு, இது 60 மாதங்கள் வரையாகும்.


நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள்:

  • வாங்கும் வசதி
  • செயல்பாடு - கார் உங்கள் தேவைகளுக்கு ஏற்றதா?
  • விரும்பிய பேமெண்ட் தொகைகள், பரிமாற்ற/மறுவிற்பனை மதிப்பு
  • காப்பீடு
  • எரிபொருள் உபயோகம் மற்றும் பராமரிப்புச் செலவு
  • நீங்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வாங்க வேண்டும் என்றால்
  • காரின் பாதுகாப்புக் காரணிகள், காரின் மைலேஜ், நிதிக் கடமைகளைப் புரிந்துகொள்வது, வாகன வரலாறு

உங்கள் கிரெடிட் வரலாறு என்பது உங்கள் கடந்தகாலக் கடன்களின் பதிவேடாகும், மேலும் இது கடனளிப்பவர்களுக்கு சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் இயலுந்திறனைக் குறிக்கும் மதிப்பெண்ணை வழங்குகிறது.

TD வாகனக் கடனுதவித் திட்டமானது கனடாவிற்குப் புதியவர்களுக்கு கனடிய கடன் வரலாறு இல்லாமல் கடன்களை வழங்குகிறது!

மொத்தத்தில், உங்கள் கடன் வரலாற்றை உருவாக்கத் தொடங்குவதற்கான - அல்லது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று - கடனுக்கு விண்ணப்பித்து, பொறுப்புடன் அதைச் செலுத்துவதாகும்.


கார் காப்பீடு: விபத்துகளுக்கும், உங்கள் காரில் ஏதேனும் மேம்பாடுகள், தனிப்பயனாக்கங்கள் அல்லது மாற்றங்களுக்கும் ஈடுசெய்ய சரியான காப்பீட்டைத் தேர்வுசெய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பராமரிப்புச் செலவுகள்: பிரச்சினைகள் தொடங்கும் முன் அவற்றைத் தடுப்பதற்கு, நீங்கள் டீலரிடம் பேசி ஒரு பராமரிப்புத் திட்டத்தை அமைக்கலாம்.


கடனானது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாகக் கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. பெரிய பர்ச்சேஸ், திடீர் செலவுகளைக் கையாளுதல் அல்லது பழைய கடன்களை அடைத்தல் போன்ற ஒற்றைப் பரிவர்த்தனைகளுக்கு இது சிறந்தது. உங்கள் கடனும் வட்டியும் ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தப்படும்.

ஒதுக்குத் தொகைக் கடனானது நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்றும் தேவைக்கேற்ப மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிதிகளுக்கான தொடர்ந்த அணுகலை வழங்குகிறது.3நீங்கள் பயன்படுத்தும் தொகைக்கு மட்டும் வட்டி விதிக்கப்படும். உங்கள் கடன் தேவைகள் திடீரென்று அதிகரிக்கும் போது ஒதுக்குத் தொகைக் கடன் சிறந்ததாகும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

  • ஒரு டீலர்ஷிப்பைப் பார்வையிடுங்கள்

    ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாகன டீலரைப் பார்வையிட்டு, TD வாகனக் கடனுதவித் திட்டம் மூலம் கடனுதவிக்காகக் கேட்கவும்.

  • TD WheelsTM-க்கு உங்களை வரவேற்கிறோம்

    புதிய TD Wheels செயலியைப் பதிவிறக்கி, உங்களின் விருப்பமான காரைக் கண்டறிந்து, TD வாகனக் கடனுதவித் திட்டம் மூலம் காரை வாங்கி ஓட்டுங்கள்

  • எங்களை அழையுங்கள்

    எங்கள் வங்கிச்சேவை நிபுணர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருக்கின்றனர்

    1-866-694-4392 1-866-694-4392

தனியார் விற்பனை வாகனக் கடன்

டீலர்ஷிப்பிடம் இருந்து வாங்கவில்லையா?  நிலையான மற்றும் மாறுநிலையான வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விதிமுறைகளுடன் TD கனடா ட்ரஸ்ட்டில் இருந்து ஒரு கடனைக் கண்டறியவும்.