கனடாவிற்குப் புதியவர்களுக்கு உள்ள வங்கிச்சேவைத் தெரிவுகளைக் கண்டறியுங்கள்.

புதிதாக வருபவர்களுக்கு, ஆரம்ப கட்டத்தில் உதவக்கூடிய தயாரிப்புகளில் TD வங்கி சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. கனடாவில் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறிச் செல்ல உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்! உங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஒரு வங்கிச்சேவை வல்லுநரைச் சந்தியுங்கள்.

உத்தரவாதத்தின் பேரிலான கடன் அட்டையைப் பொறுத்தவரை, நீங்கள் வங்கியில் இடும் தொகையை உத்தரவாதமாக வைத்தே கடன் வரம்பு அளிக்கப்படுகிறது. வங்கியில் நீங்கள் இடும் தொகைக்கு சமமான அளவு கடன் வரம்பு வழக்கப்படும். உத்தரவாதத்தின் பேரிலான கடன் அட்டையானது நல்ல கனடிய நாணயநிலை வரலாற்றையும் கடன் மதிப்பீட்டையும் உருவாக்கிக்கொள்ள உதவும்.
உத்தரவாதமற்ற கடன் அட்டை என்பது, கார்டு உரிமையாளர் வங்கியில் பணத்தை இட வேண்டிய அவசியமில்லாத கடன் அட்டையாகும். வழக்கமாக, உங்களிடம் ஏற்கனவே நல்ல கனடிய நாணயநிலை வரலாறு இருந்தால், நீங்கள் உத்தரவாதமற்ற கடன் அட்டையைப் பெற முடியும்.

தகுதித் தேவைகள்

பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்தால், உங்களுக்கு கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச்சேவைத் தொகுப்பு கிடைக்கும்:

  • 5 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
  • நிரந்தரக் குடியுரிமை அட்டை அல்லது தற்காலிக அனுமதி அட்டை வழியாக, உங்கள் நிலை குறித்த சான்றை வழங்கவும்
  • இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
  • உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்

வங்கிக் கிளைக்கு வரும்போது என்னென்ன கொண்டு வர வேண்டும்

TD வங்கிக் கிளைக்கு வரும்போது, வசிபிடத்திற்கான பின்வரும் அடையாள ஆவணங்களில் 1 கொண்டுவரவும்:

  • நிரந்தரக் குடியிருப்பு அட்டை
  • நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (எ.கா., IMM படிவம் 5292)
  • தற்காலிக அனுமதி (எ.கா., IMM படிவம் 1442, 1208, 1102)

அத்துடன் பின்வரும் உங்கள் தனிப்பட்ட அடையாள ஆவணங்களில் 1 கொண்டுவரவும்:

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • கனடிய ஓட்டுனர் உரிமம்
  • கனடிய அரசாங்கத்தின் அடையாள அட்டை

குறிப்பு: பிற அடையாள ஆவணங்களும் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். விவரங்களுக்கு ஒரு TD கிளைக்குச் செல்லவும்.

மேலே