இப்போது தான் கனடாவிற்கு வந்துள்ளேன்

கனடாவிற்கு வரவேற்கிறோம்! கனடாவில் வங்கிச் சேவையை எப்படித் தொடங்குவது என்பது பற்றி அறிந்துகொள்ள கீழே காண்க அல்லது புதிதாக வருபவர்களுக்கான எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்க,


எங்களுடன் வங்கிச் சேவையைப் பயன்படுத்தத் தொடங்குவது எப்படி?

புதிதாக வந்துள்ள உங்கள் மனதில் பல விஷயங்கள் இருக்கும் என்பது எங்களுக்குப் புரிகிறது. நீங்கள் கனடா வரும்போது புதிய வங்கிக் கணக்கைத் தொடங்குவது முதலும் முக்கியமானதுமான படியாகும். சௌகரியமான வேலை நேரம், எளிதில் சென்று வரத்தக்க இருப்பிடங்கள், ஒரே நாளில் சந்திப்பு அனுமதி ஆகியவை உங்களுக்கு அருகிலேயே உள்ள ஒரு TD வங்கிக் கிளைக்கு நேரில் வருவதை மிக எளிதாக்குகின்றன.


வக்கிச் சேவை குறித்த அடிப்படைகள்

நீங்கள் அடிப்படையாகச் செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்வதற்கு உதவுகின்ற சில கணக்குகள் மற்றும் சேவைகள் பற்றி இங்கே காணலாம்.


TD வங்கிக்கு வரும்போது என்னென்ன கொண்டு வர வேண்டும்?

கணக்கைத் தொடங்க அல்லது எங்கள் வங்கிச் சேவை நிபுணருடன் பேசத் தயாராகிவிட்டீர்களா?

இவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு வாருங்கள்:

  1. நிரந்தக் குடியிருப்பு அட்டை

  2. நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (எ.கா., IMM படிவம் 5292)

  3. தற்காலிக அனுமதி (எ.கா., IMM படிவம் 1442, 1208, 1102)

இவற்றில் ஏதேனும் 2 ஆவணங்களைக் கொண்டு வாருங்கள்:

  1. செல்லுபடியாகும் பாஸ்போர்ட்

  2. கனடிய ஓட்டுனர் உரிமம்

  3. கனடிய அரசாங்க அடையாள அட்டை

கவனிக்க: பிற அடையாள ஆவணங்கள் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். விவரங்களுக்கு ஒரு TD கிளைக்குச் செல்லவும்.

உங்கள் நிதி பற்றிப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் நிதி பற்றிப் புரிந்துகொள்ள TD உதவ விரும்புகிறது. எங்கள் வங்கிக் கிளை ஒன்றுக்கு நேரில் வாருங்கள், வங்கிச் சேவை பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்போம், என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றியும் கூறுவோம்.

TD MySpend, TD செயலி, TD மொபைல் டெபாசிட், டைரக்ட் டெபாசிட், Apple Pay, Google Pay & Samsung Pay போன்ற சௌகரியமான அம்சங்களை எங்களுடன் சேர்ந்து நீங்கள் ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம். பில்களுக்கு பணம் செலுத்துதல், பணம் அனுப்புதல் மற்றும் உங்கள் கணக்குகளை எங்கிருந்தும் எளிதில் நிர்வகிப்பது போன்றவற்றை நாங்கள் எளிதாக்க உதவுகிறோம். எப்படி என்று காண்க.

கனடாவில் நல்ல கடன் வரலாற்றைக் கட்டமைத்தல்

நீங்கள் வீடு அல்லது கார் வாங்கும்போது அல்லது பெரிய பர்ச்சேஸ் ஏதேனும் செய்ய நினைக்கும்போது கடனுதவி பெற விரும்பினால், அப்போது உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமாகும். தொலைபேசி, இணையச் சேவைகள் மற்றும் வாடகை அம்சங்களைப் பெறவும் கூட நீங்கள் தகுதி பெற இது உதவக்கூடும்.

உங்கள் பில்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்துங்கள், உங்கள் கடன் வரம்பை மீறாதிருங்கள். இவை எதிர்காலத்தில் உங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்க உதவக்கூடும்.

உங்கள் நிதியை நிர்வகித்தல்.

உங்கள் நிதி இலக்குகள் எதுவாக இருந்தாலும், உங்களுக்கேற்ற திட்டத்தை உருவாக்கவும் உங்களுக்கு அது குறித்து நம்பிக்கை தோன்றவும் நாங்கள் உதவுவோம்.

நம்பிக்கையுடன் உங்கள் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த நாங்கள் உதவ விரும்புகிறோம்.


புதியவர்களுக்கான மேலும் சில தகவல்கள்


தொடர்பில் இருங்கள்

கேள்வி உள்ளதா? பதில்கள் இங்கே!