நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
நீங்கள் ஒரு TD வரம்பிலா காசோலைக் கணக்கைத் தொடங்குகிறீர்கள்
மாதாந்திரக் கட்டணம்: $16.95
விண்ணப்பிக்கும் முன், பின்வருனவற்றைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்:
நீங்கள் சேமிக்கத் தொடங்கினால் அல்லது உங்கள் நிதியை அடிக்கடி அணுக விரும்பினால் இது சிறந்தது.
உங்கள் காசோலைக் கணக்கில் நிகழக்கூடிய பரிவர்த்தனைகளினால் அவ்வப்போது ஏற்படும் நிதிப் பற்றாக்குறைகளை ஈடுசெய்கிறது.
பிரபலமான கேள்விகள்
உதவிகரமான தொடர்புடைய கேள்விகள்
நீங்கள் தேடிய தகவல் கிடைத்ததா?
இது உதவவில்லை என்பதற்காக வருந்துகிறோம். உங்கள் தேடலைப் பற்றி கருத்தை எங்களுக்குத் தெரிவிக்க முடியுமா?
சற்று நேரத்தில் உங்களைச் சந்திக்கிறோம்
இந்தப் பக்கத்திலிருந்து ஹைப்பர்லிங்க் செய்யப்பட்ட மூன்றாம் தரப்புத் தளங்களின் உள்ளடக்கத்திற்கு TD வங்கிக் குழுமம் பொறுப்பேற்காது, மேலும் மூன்றாம் தரப்புத் தளங்களில் வழங்கப்படும் தகவல்கள், பரிந்துரைகள், தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கு அது உத்தரவாதம் அளிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை.
மூன்றாம் தரப்புத் தளங்கள் TD வங்கிக் குழுமத்தை விட வேறுபட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். நீங்கள் தனிப்பட்ட அல்லது இரகசியக்காப்புத் தகவல்களை வழங்குவதற்கு முன்னர், ஏதேனும் மூன்றாம் தரப்பு வலைத்தளத்தின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை நீங்கள் மீளாய்வு செய்ய வேண்டும்.
தள அட்டவணை
TD தனிநபர் வங்கி சேவை
- தனிநபர் முகப்பு
- என் கணக்குகள்
- வழிமுறைகள்
- இன்றைய விலைகள்
- கணக்குகள் (தனிநபர்)
- காசோலைக் கணக்குகள்
- சேமிப்புக் கணக்குகள்
- இளைஞர் கணக்கு
- மாணவர் கணக்கு
- கடன் அட்டைகள்
- விமானப் புள்ளிகள்
- பயண வெகுமதிகள்
- கேஷ் பேக்
- ஆண்டுக் கட்டணம் இல்லை
- குறைந்த விகிதம்
- U.S. டாலர்
- அடமானக் கடன்கள்
- கடன் பெறுதல்
- தனிப்பட்ட முதலீடு
- GIC & தவணைமுறை வைப்புகள்
- பரஸ்பர நிதிகள்
- TFSA - வரியற்ற சேமிப்புக் கணக்கு
- RSP - பணி ஓய்வு சேமிப்புத் திட்டம்
- RIF - பணி ஒய்வு வருமானத்திற்கான வழிகள்
- RESP - கல்விச் சேமிப்புத் திட்டம்
- RDSP - உடல் ஊன சேமிப்புத் திட்டம்
- விலை மதிப்புள்ள உலோகங்கள்
- காப்பீடு
- பயண மருத்துவக் காப்பீடு
- எல்லா தயாரிப்புகளும்
- மாணவர்கள்
- கனடாவிற்குப் புதியவர்கள்
- மூத்தோர்களுக்கான (60+) வங்கிச் சேவை குறித்த ஆலோசனை
- சர்வதேச வங்கிச்சேவை
- அன்னிய செலாவணி சேவைகள்
- பணம் செலுத்தும் வழிகள்
- சேவை பெறும் வழிகள்
- பசுமை வங்கிச் சேவை
- TD ஆலோசனை
TD சிறு வணிக வங்கிச்சேவை
- சிறுவணிகம் முகப்பு
- கணக்குகள் (வணிகம்)
- காசோலைக் கணக்கு
- சேமிப்புக் கணக்கு
- U.S. டாலர் கணக்கு
- அக்ரிஇன்வெஸ்ட் கணக்கு
- காசோலை சேவைகள்
- கடன்
- மிகை எடுப்புப் பாதுகாப்பு
- ஒதுக்குத்தொகைக் கடன்
- வணிகக் கடன் அட்டைகள்
- கடன்
- வணிக அடமானம்
- கனடிய சிறு வணிக நிதிக் கடன்
- விவசாயக் கடன் தீர்வுகள்
- TD வாகன நிதி சிறு வணிக வாகனக் கடன்
- உங்கள் வணிகத்திற்காக முதலீடு செய்க
- உங்கள் தொழில் அல்லது தொழிற்துறைக்கான ஆலோசனை
- TD வர்த்தகத் தீர்வுகள்
- அன்னிய செலாவணிச் சேவைகள்
- நிறுவன சேவைகள்
TD கார்ப்பரேட்
பிற TD வணிகங்கள்
TD வங்கிச்சேவை காசோலைத் திட்டத்திற்குப் புதியவர்கள் (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்)
$600-ஐ ரொக்கத்தில் கணக்கிடுதல்
§ $600 வரையிலான தொகை பின்வருமாறு கணக்கிடப்படுகிறது: சலுகை 1) $350 ரொக்கம் + சலுகை 2) $200 ரொக்கம்+ சலுகை 3) $50 ரொக்கம்= $600 மொத்த ரொக்கத் தொகை.
சலுகை 1) அக்டோபர் 11, 2023 முதல் ஜனவரி 31, 2024-க்குள் புதிய TD வரம்பிலா காசோலைக் கணக்கு அல்லது TD அனைத்து அம்சங்களும் உள்ளடங்கிய வங்கிச் சேவையைத் தொடங்கிய பிறகு, கீழே உள்ள சலுகையில்1 குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி தகுதி பெறும் செயல்களை நிறைவு செய்வதன் மூலம் $350-ஐப் பெறுங்கள்.
சலுகை 2) ஒரு புதிய காசோலைக் கணக்கு வாடிக்கையாளர் (சலுகை 1-இல் TD வங்கி சேவை காசோலைக் கணக்குக்குப் புதிய வாடிக்கையாளராக வரையறுக்கப்படுகிறார்) ஒரு புதிய TD இ-பிரீமியம் சேமிப்புக் கணக்கை அல்லது TD தினசரி சேமிப்புக் கணக்கை ஜனவரி 31, 2024-க்குள் தொடங்கி, கீழே உள்ள சலுகை 2-இன்படி அமைக்கப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் $200 வரை ரொக்கமாகப் பெறுவார். குறிப்பிட்ட இருப்புத்தொகைகளுடன் புதிய சேமிப்புக் கணக்கிற்கு $200 -ஐ விட அதிகமாகப் பெறுங்கள்.
சலுகை 3) புதிய காசோலைக் கணக்கு வாடிக்கையாளர் மாதாந்திரத் திட்ட மிகை எடுப்புப் பாதுகாப்பு அல்லது பயணிக்கும் போது பணம் செலுத்துங்கள் திட்ட மிகை எடுப்புப் பாதுகாப்பு (கியூபெக் குடியிருப்பாளர்களுக்கு மிகை எடுப்புப் பாதுகாப்பு கிடைக்காது) அம்சத்திற்கு விண்ணப்பித்து, அங்கீகரிக்கப்பட்டு, ஜனவரி 31, 2024-க்குள் புதிய காசோலைக் கணக்கில் சேர்ப்பதுடன், கீழே உள்ள சலுகை 3-இன்படி தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் போது $50 ரொக்கமாகப் பெறுவார்.
சலுகை 1: காசோலைக் கணக்கு $350 ரொக்கம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
†$350ரொக்கச் சலுகையானது, தற்போது TD காசோலைக் கணக்கு ஒன்றை வைத்திருக்காத, பெரும்பான்மை வயதிலுள்ள கனடிய குடியிருப்பாளர்களுக்கு, அவர்கள் தங்களது மாகாணத்தில் அல்லது ஆட்சிப் பிரதேசத்தில் கணக்கைத் திறக்கும் நேரத்தில் பெற முடியும்:
(a) ஒரு TD வரம்பிலா காசோலைக் கணக்கை அல்லது TD அனைத்தும் உள்ளடங்கிய வங்கிச்சேவைத் திட்டத்தை அக்டோபர் 11, 2023 முதல் ஜனவரி 31, 2024-க்குள் தொடங்க வேண்டும்
(b) புதிய காசோலைக் கணக்கில் பின்வருனவற்றில் ஏதேனும் இரண்டை நிறைவு செய்யுங்கள்:
1. மார்ச் 31, 2024-க்குள் புதிய காசோலைக் கணக்கில் முதல் வைப்புத்தொகை செலுத்தலுடன் அவர்களின் நிறுவனம், ஓய்வூதிய வழங்குநர் அல்லது அரசாங்கத்திடமிருந்து ஒரு நேரடித் தொடர் வைப்புத்தொகையை அமைக்க வேண்டும். இந்த நேரடி வைப்பு வாராந்திரம், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, மாதாந்திரம் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படுவது கட்டாயமானதாகும்.
2. மார்ச் 31, 2024-க்கு முன் TD EasyWeb அல்லது TD செயலி மூலம் குறைந்தபட்சம் $2-க்கு ஆன்லைன் பில் பேமண்டைச் செலுத்த வேண்டும்.
3. மார்ச் 31, 2024-க்கு முன்னர் புதிய காசோலைக் கணக்கிற்கு முதலாவது முன்னங்கீகாரம் பெற்ற பற்று வைப்புச் செய்யப்படும் விதத்தில் குறைந்தபட்சம் $3 கொண்ட மீளெழும் முன்னங்கீகாரம் பெற்ற பற்று ஒன்றை அமைக்க வேண்டும். இந்த முன்னங்கீகாரம் பெற்ற டெபிட் வாராந்திரம், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, மாதாந்திரம் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படுவது கட்டாயமானதாகும். முன்னங்கீகாரம் பெற்ற பற்று குறித்து மேலும் அறிந்துக் கொள்ளுங்கள்
இந்தச் சலுகைக்குத் தொடர் நேரடி வைப்பு ஒன்று ஏற்கக்கூடியதா இல்லையா என்பது எங்கள் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும்.
$350 ரொக்கச் சலுகை இவர்களுக்குக் கிடைக்காது:
1. அக்டோபர் 11, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு மூடப்பட்ட TD காசோலைக் கணக்கை ஏற்கனவே வைத்திருந்த வாடிக்கையாளர்கள்; அல்லது
2. 2021, 2022, 2023-இல் TD வழங்குகின்ற ஏதேனும் காசோலைக் கணக்குச் சலுகைகளைப் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள்; அல்லது
3. TD ஊழியர்கள் அல்லது TD ஊழியருடன் கூட்டுக் கணக்கை வைத்திருக்கும் எந்த TD வாடிக்கையாளரும்.
புதிய காசோலைக் கணக்கு ஒரு கூட்டுக் கணக்காக இருந்தால், கணக்குதாரர்களில் ஒருவரேனும் தகுதிக்கான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஒரு புதிய காசோலைக் கணக்கிற்கு ஒரு முறை மட்டுமே $350 ரொக்கச் சலுகை கிடைக்கும் என்ற வரம்பு உள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே $350 ரொக்கச் சலுகை கிடைக்கும் என்ற வரம்பு உள்ளது.
தேவையான அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, 12 வாரங்களுக்குள் புதிய காசோலைக் கணக்கில் $350 டெபாசிட் செய்யப்படும், ஆனால் புதிய காசோலைக் கணக்கு செயலிலும் நல்ல நிலையிலும் இருக்க வேண்டும், இந்த அனைத்து நிபந்தனைகளும் தொடர்ந்து பூர்த்திசெய்யப்பட வேண்டும். புதிய காசோலைக் கணக்கிற்கான மாதாந்திரக் கட்டணத்தை எந்தக் காரணத்திற்காகவும் ரத்து செய்யவோ, தள்ளுபடி செய்யவோ முடியாது, விதிவிலக்கு: குறைந்தபட்ச மாதாந்திர இருப்பைப் பராமரித்தல், முதியோர் தள்ளுபடியைப் பெறுதல் அல்லது TD வரம்பற்ற காசோலைக் கணக்கு மீது கனடாவிற்குப் புதியவர்கள் 12 மாதக் கட்டணத் தள்ளுபடியைப் பெறுதல். மேலும் புதிய காசோலைக் கணக்கில் $350 வைப்பு வைக்கப்படும் முன்னர் கணக்கின் வகையை மாற்ற முடியாது.
எங்களால் எந்த நேரத்திலும் $350 ரொக்கச் சலுகையை மாற்றவோ, நீடிக்கவோ அல்லது திரும்பப்பெறவோ முடியும், மேலும் அதனை புதிதாகக் கனடாவுக்கு வந்தவர்களுக்கான வங்கிச் சேவைத் தொகுப்பு தவிர, ஒரே தயாரிப்புக்காக பிற சலுகைகள் அல்லது தள்ளுபடிகளுடன் சேர்த்துப் பயன்படுத்த முடியாது. வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டாலன்றி அனைத்து தொகைகளும் கனேடிய டாலர்களில் காணப்படும். வேறு நிபந்தனைகளும் பொருந்தக்கூடும்.
பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களுக்கும், கணக்குக் கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கும், எங்கள் கணக்குகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றி என்ற பிரிவைப் பார்க்கவும்.
சலுகை 2: வைப்பீடு சலுகை - ரொக்கத்தில் $200 வரை பெறுங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
புதிய சேமிப்புக் கணக்கில் குறிப்பிட்ட இருப்புத்தொகைகளுடன் $200-க்கு மேல் ரொக்கமாகப் பெறுங்கள்.
◊ $200 ரொக்கச் சலுகையானது கனடாவில் வசிக்கின்ற, தங்கள் மாகாணத்திலோ அல்லது பிரதேசத்திலோ பெரும்பான்மை வயதுடையவர்கள் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போது கிடைக்கும்.
1) சேமிப்புக் கணக்கிற்கான அதிகபட்சத் தொகையான $2,000 வரை ரொக்கமாகப் பெற, புதிய தகுதியான TD காசோலைக் கணக்கு வாடிக்கையாளர் கண்டிப்பாக செய்ய வேண்டியவை:
(a) அக்டோபர் 11, 2023 முதல் ஜனவரி 31, 2024-க்குள் ஓர் TD அனைத்து அம்சங்களும் உள்ளடங்கிய வங்கிச் சேவையை அல்லது TD வரம்பிலா காசோலைக் கணக்கைத் தொடங்க வேண்டும். மேலும்
(b) ஜனவரி 31, 2024-க்குள் புதிய TD இ-பிரீமியம் சேமிப்புக் கணக்கு அல்லது TD தினசரி சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும், மற்றும்
(c) கணக்கைத் தொடங்கிய 30 நாட்களுக்குள் குறைந்தபட்சம் $2,500 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வேறு நிதி நிறுவனம்(களில்) இருந்து நேரடியாக புதிய சேமிப்புக் கணக்கில் வைப்பு வைக்க வேண்டும் அல்லது பரிமாற்றம் செய்ய வேண்டும், மேலும் 90 நாட்களுக்கு (3 மாதங்கள்) இருப்புத்தொகையைப் பராமரிக்க வேண்டும், பின்வருனவற்றை நினைவில் கொள்ளுங்கள்:
1. ஏற்கனவே உள்ள TD கணக்குகளில் இருந்து வரும் பணப் பரிமாற்றங்கள் ரொக்கச் சலுகைக்கு தகுதி பெறாது;
2. ஒவ்வொரு தகுதியான வாடிக்கையாளருக்கும், புதிய கணக்கிற்கு மாற்றப்பட்ட ரொக்கத் தொகையின் அடிப்படையில் மொத்தத்தில் அதிகபட்சமாக $2,000 ரொக்கச் சலுகை வழங்கப்படும்:
ரொக்கப் பரிமாற்றம் |
ரொக்கச் சலுகை |
$2,500 -$4,999 |
$50 |
$5,000 – $9,999 |
$100 |
$10,000 - $24,999 |
$200 |
$25,000 - $49,999 |
$500 |
$50,000- $99,999 |
$1,000 |
$100,000+ |
$2,000 |
தேவையான அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, 12 வாரங்களுக்குள் புதிய காசோலைக் கணக்கில் $2,000 வரை ரொக்கச் சலுகை வைப்பு வைக்கப்படும். ஆனால் புதிய காசோலைக் கணக்கும் புதிய சேமிப்புக் கணக்கும் செயல் நிலையிலும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும். இந்த அனைத்து நிபந்தனைகளும் தொடர்ந்து பூர்த்திசெய்யப்பட வேண்டும்.
பின்வருபவர்கள் $2,000 வரையிலான ரொக்கச் சலுகையைப் பெறத் தகுதிப் பெறவில்லை:
1. அக்டோபர் 11, 2023 நிலவரப்படி ஏற்கனவே TD சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்,
2. அக்டோபர் 2, 11 அன்று அல்லது அதற்குப் பிறகு மூடப்பட்ட TD சேமிப்புக் கணக்கை வைத்திருந்த வாடிக்கையாளர்கள்,
3. 2021, 2022, 2023 -இல் TD-இடமிருந்து ஏதேனும் சேமிப்புக் கணக்குச் சலுகையைப் பெற்றவர்கள்; அல்லது
4. TD ஊழியர்கள் அல்லது TD ஊழியருடன் கூட்டுக் கணக்கை வைத்திருக்கும் எந்த TD வாடிக்கையாளரும்.
கூட்டுக் கணக்காக இருக்கும் எந்தவொரு புதிய சேமிப்புக் கணக்கிற்கும், புதிய சேமிப்புக் கணக்கில் உள்ள ஒரு கணக்குதாரராவது தகுதித் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஒவ்வொரு புதிய சேமிப்புக் கணக்கிற்கும் அதிகபட்சமாக $2,000 வரை சலுகை வழங்கப்படும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அதிகபட்சமாக $2,000 வரை சலுகை வழங்கப்படும். பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களுக்கும், கணக்குக் கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கும், எங்கள் கணக்குகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றி என்ற பிரிவைப் பார்க்கவும். நாங்கள் எந்த நேரத்திலும் $2,000 வரையிலான ரொக்கச் சலுகையை மாற்றவோ, நீட்டிக்கவோ அல்லது திரும்பபெறவோ செய்யலாம்.
சலுகை 3: மிகை எடுப்புப் பாதுகாப்புச் சேவை $50 ரொக்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
∞ புதிய மாதாந்திரத் திட்ட மிகை எடுப்புப் பாதுகாப்பு அல்லது பயணம் செய்யும் வேளையிலும் பணம் செலுத்தும் மிகை எடுப்புப் பாதுகாப்புக்கான (ODP) 50ரொக்கச் சலுகையானது, ODP-இன் ஒப்புதலின் போது தங்களின் மாகாணம் அல்லது பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மை வயதுடைய கனடியக் குடியிருப்பாளர்களுக்குக் கிடைக்கும். $50 ரொக்கச் சலுகையைப் பெற, புதிய காசோலைக் கணக்கு வாடிக்கையாளர் செய்ய வேண்டியவை:
(a) சலுகை 1-க்கு இணங்க, அக்டோபர் 11, 2023 முதல் ஜனவரி 31, 2024-க்குள் ஓர் TD அனைத்து அம்சங்களும் உள்ளடங்கிய வங்கிச் சேவையை அல்லது TD வரம்பிலா காசோலைக் கணக்கைத் தொடங்க வேண்டும். மேலும்
(b) அக்டோபர் 31, 2024-க்குள் புதிய காசோலைக் கணக்கில் ODP பாதுகாப்புக்கு (பயணம் செய்யும் வேளையிலும் பணம் செலுத்தும் மிகை எடுப்புப் பாதுகாப்பானது, க்யுபெக் குடியிருப்பாளர்களுக்குக் கிடைக்காது) விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்று சேர்க்க வேண்டும், மேலும்
(c) புதிய ODP-ஐ, ஒப்புதலுக்குப் பிறகு 30 நாட்களுக்குச் செயலில் மற்றும் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்
இந்தச் சலுகை இவர்களுக்குக் கிடைக்காது.
1. அக்டோபர் 1, 11 அன்று ODP பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டுள்ள TD காசோலைக் கணக்கை ஏற்கனவே வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அல்லது
2. TD ஊழியர்கள் அல்லது TD ஊழியருடன் கூட்டுக் கணக்கை வைத்திருக்கும் எந்த TD வாடிக்கையாளரும்.
எல்லா நிபந்தனைகளும் பூர்த்திசெய்யப்பட்ட பிறகு, அப்போதும் மிகை எடுப்பு பாதுகாப்பு செயலில் இருந்து, நல்ல நிலையில் இருந்து, எல்லா நிபந்தனைகளும் அப்போதும் செல்லுபடியாவதாக இருந்தால், புதிய காசோலைக் கணக்கில் 12 வாரங்களுக்குள் $50 செலுத்தப்படும். ODP-ஐக் கொண்டிருக்கும் ஒரு புதிய காசோலைக் கணக்கிற்கு, ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே $50 ரொக்கச் சலுகை கிடைக்கும் என்ற வரம்பு உள்ளது. ஒரு கூட்டுக் கணக்காக உள்ள ஏதேனும் புதிய காசோலைக் கணக்கிற்கு, புதிய காசோலைக் கணக்கில் உள்ள எல்லா கணக்குதாரர்களும் ODP தகுதித் தேவைகளைக் கட்டாயம் பூர்த்திசெய்ய வேண்டும். ஒவ்வொரு கணக்குதாரரும் ODP-க்கு விண்ணப்பிக்க, அவர்கள் குடியிருக்கும் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் கடன் அங்கீகரிப்புக்கு உட்பட்டவர்கள்.
TD வரம்பிலா காசோலைக் கணக்கு மற்றும் TD அனைத்து அம்சங்களும் உள்ளடங்கிய வங்கிச் சேவையில், மாதாந்திரத் திட்ட மிகை எடுப்புப் பாதுகாப்புச் சேவைக் கட்டணம் ஒரு மாதத்திற்கு $5.00 ஆகும். ஒவ்வொரு தகுதியான மிகை எடுப்புப் பரிவர்த்தனைக்கும் (மிகை எடுப்புப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒரு நாளைக்கு அதிகபட்சம் $5.00) பயணம் செய்யும் வேளையிலும் பணம் செலுத்தும் மிகை எடுப்புப் பாதுகாப்புக்கான கட்டணம் $5.00 ஆகும். மிகை எடுப்புத் தொகையானது, ஆண்டுக்கு 21% என்ற வட்டி விகிதத்திற்கு உட்பட்டது. ODP கட்டணங்களும் வட்டி விகிதமும், மற்றவகையில் குறிப்பிடப்படாத வரை, மே 24, 2022 நிலவரப்படி நடப்பிலுள்ளவாறு இருக்கும்,
மேலும் இவை மாற்றத்திற்கு உட்பட்டதாகும். கணக்குக் கட்டணங்கள் மற்றும் மிகை எடுப்புப் பாதுகாப்புச் சேவைக் கட்டணங்கள் ஆகியவை குறித்த மேலும் தகவல்களுக்கும், ஒரு முழுமையான பட்டியலுக்கும், எங்கள் கணக்குகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் என்ற பிரிவைப் பாருங்கள். எங்களால் எந்த நேரத்திலும் $50 ரொக்கச் சலுகையை மாற்றவோ, நீடிக்கவோ அல்லது மீளப்பெறவோ முடியும்.
1 டெபிட் பரிவர்த்தனைகளாகக் கருதப்படும் காசோலை மூலமாகவோ அல்லது Interac e-Transfer® மூலமாகவோ செய்யப்படும் பரிமாற்றங்களைத் தவிர, இந்தக் கணக்கிலிருந்து மற்றொரு TD காசோலை அல்லது சேமிப்புக் கணக்கிற்கு செய்யப்படும் பரிமாற்றங்கள் அல்லது முன்னங்கீகாரம் பெற்ற பரிமாற்றுச் சேவைகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் இல்லை.
2 பரிவர்த்தனைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கும் கணக்குக் கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கும், கணக்கு மற்றும் தொடர்புடைய சேவைக் கட்டணங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். எங்களின் பொதுவான சேவைகள் பற்றிய தகவலுக்கு, எங்கள் சேவைகளின் பொதுப் பட்டியலைப் பார்க்கவும்.
3 TD காசோலைக் கணக்குகளுக்கு $5 மாதாந்திர கட்டணம்: TD குறைந்தபட்ச காசோலை கணக்கு, TD தினசரி காசோலைக் கணக்கு, TD வரம்பிலா காசோலைக் கணக்கு மற்றும் TD அனைத்து அம்சங்களும் உள்ளடங்கிய வங்கிச் சேவை.
4 P60 & விருப்பமான காசோலைக் கணக்கில் மாதாந்திர திட்ட மிகை எடுப்புப் பாதுகாப்பு (MODP) சேவைக்கு $4 மாதாந்திர கட்டணம்
5 மாணவர், மூத்தோர் அல்லது பதிவுசெய்யப்பட்ட ஊனமுற்றோர் சேமிப்புத் திட்டக் காசோலைக் கணக்குக் கட்டணத் தள்ளுபடியைக் கொண்ட TD மாணவர் காசோலைக் கணக்கு, TD U.S. தினசரி வட்டிச் சரிபார்ப்புக் கணக்கு, TD எல்லையற்ற திட்டம் மற்றும் TD குறைந்தபட்ச காசோலைக் கணக்கு ஆகியவற்றுக்கு MODP கட்டணங்கள் இல்லை.
Interac e-Transfer என்பது Interac Corp நிறுவனத்தின் வர்த்தக அடையாளமாகும். உரிமத்தின் கீழ் பயன்படுத்தப்படுகிறது.
கணக்குத் தொடங்கிய 30 நாட்களுக்குள் புதிய சேமிப்புக் கணக்கில் $10,000 -$24,24-ஐ இருப்பு வைப்பதன் மூலமும், 90 நாட்களுக்கு இருப்பைப் பராமரிப்பதன் மூலமும் $200◊ வரை பெறுங்கள். பின்வரும் வைப்பீடு அடுக்குகளுடன் கூடுதல் ரொக்கச் சலுகைகளை ஆராயுங்கள். ஈட்டுங்கள்:
- $2,500-$4,999 வைப்பீட்டிற்கு $50
- $5,000-$9,999 வைப்பீட்டிற்கு $100
- $10,000 - $24,999 -க்கு $200
- $25,000-$49,999 வைப்பீட்டிற்கு $500
- $50,0000-$99,999 வைப்பீட்டிற்கு $1,000
- +$100,000 வைப்பீடிற்கு $2,000
TD தினசரி சேமிப்புக் கணக்கு விவரங்கள்
கணக்குக் கட்டணங்கள்
சேவை |
கட்டணம் |
---|---|
மாதாந்திரக் கட்டணம் |
$0 |
ஒரு மாதத்திற்கு பரிவர்த்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன1 |
1 |
கூடுதல் பரிவர்த்தனைகள்1 |
தலா $3.00 |
உங்கள் மற்ற TD கணக்குகளுக்கு2 இலவச பரிமாற்றங்கள் |
வரம்பில்லை |
TD அல்லாத ATM கட்டணம் (கனடாவில்)3 |
தலா $2.00 |
வெளிநாட்டு ATM கட்டணம் (யு.எஸ்., மெக்சிகோவில்)3 |
தலா $3.00 |
வெளிநாட்டு ATM கட்டணம் (வேறு ஏதேனும் வெளிநாட்டில்)3 |
தலா $5.00 |
தாள் அறிக்கை |
ஒவ்வொரு மாதமும் $2.00 |
1 டெபிட் பரிவர்த்தனைகளாகக் கருதப்படும் காசோலை மூலமாகவோ அல்லது Interac e-Transfer® மூலமாகவோ செய்யப்படும் பரிமாற்றங்களைத் தவிர, இந்தக் கணக்கிலிருந்து மற்றொரு TD காசோலை அல்லது சேமிப்புக் கணக்கிற்கு செய்யப்படும் பரிமாற்றங்கள் அல்லது முன்னங்கீகாரம் பெற்ற பரிமாற்றுச் சேவைகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் இல்லை.
2 பரிவர்த்தனைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கும் கணக்குக் கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கும், கணக்கு மற்றும் தொடர்புடைய சேவைக் கட்டணங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். எங்களின் பொதுவான சேவைகள் பற்றிய தகவலுக்கு, எங்கள் சேவைகளின் பொதுப் பட்டியலைப் பார்க்கவும்.
3 TD காசோலைக் கணக்குகளுக்கு $5 மாதாந்திர கட்டணம்: TD குறைந்தபட்ச காசோலை கணக்கு, TD தினசரி காசோலைக் கணக்கு, TD வரம்பிலா காசோலைக் கணக்கு மற்றும் TD அனைத்து அம்சங்களும் உள்ளடங்கிய வங்கிச் சேவை.
4 P60 & விருப்பமான காசோலைக் கணக்கில் மாதாந்திர திட்ட மிகை எடுப்புப் பாதுகாப்பு (MODP) சேவைக்கு $4 மாதாந்திரக் கட்டணம்
5 மாணவர், மூத்தோர் அல்லது பதிவுசெய்யப்பட்ட ஊனமுற்றோர் சேமிப்புத் திட்டக் காசோலைக் கணக்குக் கட்டணத் தள்ளுபடியைக் கொண்ட TD மாணவர் காசோலைக் கணக்கு, TD U.S. தினசரி வட்டிச் சரிபார்ப்புக் கணக்கு, TD எல்லையற்ற திட்டம் மற்றும் TD குறைந்தபட்ச காசோலைக் கணக்கு ஆகியவற்றுக்கு MODP கட்டணங்கள் இல்லை.
Interac e-Transfer என்பது Interac Corp. நிறுவனத்தின் வர்த்தக முத்திரையாகும். இது உரிமத்தின் கீழ் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் புதிய காசோலைக் கணக்கில் மிகை எடுப்புப் பாதுகாப்பைச் சேர்க்கும்போது கூடுதலாக $50 பெறுங்கள்.
மிகை எடுப்புப் பாதுகாப்பு
மிகை எடுப்புப் பாதுகாப்பு என்பது ஒரு விருப்பத்தேர்வான நிதித் தயாரிப்பு ஆகும், இதை நீங்கள் விண்ணப்பித்து அங்கீகாரம் பெறலாம்1. அங்கீகரிக்கப்பட்ட வரம்பு வரை அந்தக் கணக்கில் நிகழக்கூடிய பரிவர்த்தனைகளிலிருந்து அவ்வப்போது ஏற்படும் நிதிப் பற்றாக்குறைகளை ஈடுசெய்ய இது ஒரு வழியாகும்.
உங்கள் கணக்கில் உள்ளதை விட அதிகமாக, உங்கள் மிகை எடுப்பு வரம்பிற்குள் நீங்கள் பணம் எடுத்தால், கணக்கில் எதிர்மறையான இருப்பு இருக்கும். மிகை எடுப்புப் பாதுகாப்பு சேவையின் மூலம் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்வதன் மூலம் உங்கள் நிலுவையில் உள்ள மிகை எடுப்பு நிலுவைத் தொகையைச் செலுத்தலாம்.
மிகை எடுப்புப் பாதுகாப்புக்கான வட்டி விகிதங்கள்
மிகை எடுப்புப் பாதுகாப்பு என்பது ஒப்புதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகள், வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
- முதலில், நீங்கள் மிகை எடுப்புப் பாதுகாப்பிற்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்1. இப்போதே விண்ணப்பிக்கவும் - இதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்
- மிகை எடுப்புத் தொகையானது, ஆண்டுக்கு 21% என்ற வட்டி விகிதத்திற்கு உட்பட்டது.
- டெபாசிட்கள் உடனடியாகவும், மிகையாக எடுக்கப்பட்ட தொகைக்கு எதிராகவும் தானாகவே பயன்படுத்தப்படும்
- மிகையாக எடுக்கப்பட்ட தொகையை 89 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்
- எவ்வித அறிவிப்பும் இன்றி மிகையாக எடுக்கப்பட்ட தொகைக்கான வட்டி விகிதங்கள் மாறக்கூடும்.
1 TD காசோலைக் கணக்குத் திட்டத்தில் உள்ள அனைத்துக் கணக்கு வைத்திருப்பவர்களும் மிகை எடுப்புப் பாதுகாப்பு சேவைக்கு அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கணக்குதாரரும் மிகை எடுப்புப் பாதுகாப்புச் சேவைக்கு விண்ணப்பிக்க, அவர்கள் குடியிருக்கும் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள முதிர்ச்சி வயதை அடைந்திருக்க வேண்டும்.