^ கேஷ்பேக் டாலர்களைப் பெறுவதற்கும் ரிடீம் செய்வதற்கும் கணக்கு செயல்படும் நிலையிலும், நன்றாகப் பராமரிக்கப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும். கோரிக்கையின் பேரில் எந்த நேரத்திலும் கேஷ் பேக் டாலர்களை ரிடீம் செய்வது $25 என்ற குறைந்தபட்ச தொகைக்காகவே இருக்க வேண்டும். வருடாந்திர அடிப்படையில் கேஷ் பேக் டாலர்கள் ரிடீம் செய்யப்படும் போது, வருடாந்திர வருமானக் காலமானது எதையேனும் வாங்குவதற்கு கார்டைப் பயன்படுத்திய காலத்திலிருந்து தொடங்கி அதையடுத்த ஆண்டுக் கணக்கின் ஜனவரி பில்லிங் சுழற்சி வரை இருக்கும் - அதற்குப் பிறகு ஆண்டு வருமானக் காலம் ஒவ்வொரு ஆண்டும் கணக்கின் ஜனவரி பில்லிங் சுழற்சியில் இருந்து அதையடுத்த ஆண்டின் ஜனவரி பில்லிங் சுழற்சி வரை தொடரும். ரிடீம் செய்வது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் வரை கேஷ் பேக் டாலர்கள் சேர்ந்துகொண்டே இருக்கும். பெறக்கூடிய அதிகபட்ச வருடாந்திர கேஷ் பேக் டாலர்கள் என்று எதுவும் வரம்பு இல்லை. கேஷ் பேக் டாலர்களை எப்படி ரிடீம் செய்வது என்பது பற்றிய முழுமையான விவரங்களுக்கு, பின்வரும் வலைப்பக்கத்தில் TD கேஷ் பேக் விசா கார்டுதாரர் ஒப்பந்தத்தின் "TD கேஷ் பேக் திட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்" என்ற பிரிவைப் பார்க்கவும்: www.tdcanadatrust.com/products-services/banking/credit-cards/agreements.jsp.
6 Aeroplan™ புள்ளிகளுக்கு எந்தப் பண மதிப்பும் இல்லை, ஆனால் அவற்றை விமான மற்றும் பிற ரிவார்டுகளுக்காக Aeroplan திட்டத்தின் கீழ் ரிடீம் செய்துகொள்ளலாம். Aeroplan புள்ளிகளைப் பயன்படுத்திப் பெறப்பட்ட ரிவார்டுகளின் பண மதிப்பானது, வழங்கப்பட்ட ரிவார்டின் வகை உட்பட பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும், அவற்றின் விவரங்களை இங்கு காணலாம்: https://www.aircanada.com/ca/en/aco/home/aeroplan.html. Aeroplan புள்ளிகளை, Aeroplan திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க மட்டுமே ரிடீம் செய்துகொள்ள முடியும். Aeroplan திட்டத்தின் முழுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வரும் இணைய முகவரியில் கிடைக்கின்றன: https://www.aircanada.com/ca/en/aco/home/aeroplan/legal/terms-and-conditions.html. எல்லா சலுகைகளும், சலுகைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் அவ்வப்போது கிடைக்கக் கூடியவையாகும்.
7 TD Global Transfer சலுகைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்பு TD Global Transfer சலுகையானது, கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்புக்குத் தகுதிபெற்று, TD வரம்பிலா காசோலைக் கணக்கை ("புதிய காசோலைக் கணக்கு") தொடங்குகின்ற தனிநபர்களுக்கு கிடைக்கிறது. புதிய காசோலைக் கணக்கு தொடங்கப்பட்ட மாதத்திலிருந்து, புதிய காசோலைக் கணக்கிற்கு வசூலிக்கப்படும் TD Global TransferTM கட்டணங்கள், தகுதியான ஒவ்வொரு TD Global Transfer பரிவர்த்தனைக்கும் பரிவர்த்தனையின் நடைமுறைத் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள், அதிகபட்சம் 12 மாத காலம் வரை, புதிய காசோலைக் கணக்கில் வரவு வைக்கப்படும். பின்வரும் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய காசோலைக் கணக்கிலிருந்து நிறைவு செய்யப்பட்ட பரிமாற்றங்கள் மட்டுமே சலுகைக்குத் தகுதியானவை:
(i) Western Union® Money TransferSM
(ii) Visa Direct
TD உலகளாவிய வங்கிப் பரிமாற்றம்
TD Global TransferTM கட்டணம், $25 வரையாகும். TD Global TransferTM கட்டணத் தொகை மாறக்கூடியது, மேலும் இது அனுப்பப்படும் தொகை, பெறுநரின் நாடு மற்றும் பரிவர்த்தனைக்கு நிதியளிக்கும் கணக்கின் நாணயம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
இந்தச் சலுகைக்குத் தகுதி பெற, புதிய காசோலைக் கணக்கு தொடங்கப்பட்டு, நன்றாகப் பராமரிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.
எனினும் அந்நிய செலாவணி மற்றும் பிற வங்கிக் கட்டணங்கள் பொருந்தும். நீங்கள் உங்கள் கணக்கின் நாணயத்திலிருந்து வேறு நாணயத்தில் நிதி அனுப்புகிறீர்கள் என்றால், நாங்கள் நிர்ணயித்த நாணயப் பரிவர்த்தனை விகிதத்தில் இந்த மற்ற நாணயத்தை எங்களிடமிருந்து வாங்குவீர்கள். பணம் அனுப்பப்பட்ட கணக்கின் நாணயத்தில் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள பிற வங்கிகள், நிதியைப் பெறுபவரிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம். கட்டணங்கள் பற்றிய விவரங்களை இங்கு காணலாம்:https://www.td.com/ca/en/personal-banking/products/bank-accounts/accounts-fees.
TD Global Transfer பற்றிய விவரங்களை இங்கு காணலாம்: https://www.td.com/ca/en/personal-banking/how-to/international-money-transfer/td-global-transfer/. எப்போது வேண்டுமானாலும் சலுகை மாற்றப்படலாம், திரும்பப்பெறப்படலாம் அல்லது நீட்டிக்கப்படலாம். மேலும் வேறு வகையில் குறிப்பிட்டால் அன்றி, இந்தச் சலுகையை பிற சலுகைகள் எதனுடனும் சேர்த்துப் பெற முடியாது.
8 தொகுப்புச் சலுகைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: ஒரு வாடிக்கையாளர் $150 ரொக்கத்தைப் பெறுவதற்கும் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:
a. ஒரு புதிய TD வரம்பிலா காசோலைக் கணக்கை (புதிய காசோலைக் கணக்கு) பிப்ரவரி 26, 2025 முதல் மே 28, 2025-க்கு இடையே தொடங்க வேண்டும்.
b. புதிய TD இ-பிரீமியம் சேமிப்புக் கணக்கு அல்லது TD தினசரி சேமிப்புக் கணக்கை (TD சேமிப்புக் கணக்கு) ஜூலை 28, 2025-க்குள் தொடங்கி, TD சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தி பின்வருபவற்றில் ஒன்றை நிறைவுசெய்ய வேண்டும்:
i. முன்னங்கீகாரம் பெற்ற பரிமாற்றுச் சேவையை அமைக்க வேண்டும், அதில் முதல் பரிமாற்றம் அக்டோபர் 24, 2025-க்குள் நடைபெற வேண்டும். முன்னங்கீகாரம் வழங்கப்பட்ட பரிமாற்றுச் சேவையானது வாரம் ஒரு முறை, வாரம் இரு முறை, மாதம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை நடைபெறும் பரிமாற்றமாக இருக்க வேண்டும்;
ii. எளிதாகச் சேமியுங்கள் திட்டத்தை அமைக்க வேண்டும், அதில் அக்டோபர் 24, 2025-க்குள் முதல் பரிமாற்றம் நடைபெற வேண்டும்; மற்றும்
c. ஜூலை 28, 2025-க்குள் TD Cash Back Visa* அட்டை, TD Cash Back Visa Infinite* அட்டை, TD Rewards Visa* அட்டை, TD Platinum Travel Visa* அட்டை, TD First Class Travel® Visa Infinite* அட்டை, TD® Aeroplan® Visa Platinum* கடன் அட்டை, TD® Aeroplan® Visa Infinite* அட்டை, TD® Aeroplan® Visa Infinite Privilege* கடன் அட்டை, TD Low Rate Visa* அட்டைக்கு (ஒரு புதிய TD கடன் அட்டை) விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். கணக்கைத் தொடங்கிய பிறகு புதிய TD கடன் அட்டையை 60 நாட்களுக்குத் திறந்த நிலையில், செயல்நிலையில் மற்றும் நன்றாகப் பராமரிக்கப்பட்ட நிலையில் வைத்திருக்க வேண்டும்.
$150 ரொக்கச் சலுகையானது கனடாவில் வசிக்கின்ற, தங்கள் மாகாணத்திலோ அல்லது பிரதேசத்திலோ அமலில் இருக்கும் முதிர்ச்சி வயதுடையவர்கள் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போது கிடைக்கும்.
எந்த ஒரு நபரும் எத்தனைக் கணக்குகளைத் தொடங்கலாம் என்பதற்கான வரம்பை அமைக்க எங்களுக்கு உரிமை உள்ளது. இந்தச் சலுகை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம், திரும்பப் பெறப்படலாம் அல்லது நீட்டிக்கப்படலாம், மேலும், மற்றவகையில் குறிப்பிடப்பட்டாலொழிய இதை வேறு எந்த சலுகையுடனும் இணைக்க முடியாது.
பின்வருபவர்கள் தொகுப்புச் சலுகையைப் பெறத் தகுதி பெறமாட்டார்கள்:
1. பிப்ரவரி 26, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மூடப்பட்ட TD காசோலைக் கணக்கை ஏற்கனவே வைத்திருந்த வாடிக்கையாளர்கள்,
- பிப்ரவரி 26, 2025 நிலவரப்படி ஏற்கனவே ஒரு TD சேமிப்புக் கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்.
- பிப்ரவரி 26, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மூடப்பட்ட TD சேமிப்புக் கணக்கை வைத்திருந்த வாடிக்கையாளர்கள்,
4. 2023, 2024, 2025 -இல் TD-இடமிருந்து ஏதேனும் சேமிப்புக் கணக்குச் சலுகையைப் பெற்றவர்கள்; அல்லது
- TD ஊழியர்கள் அல்லது TD ஊழியருடன் கூட்டுக் கணக்கை வைத்திருக்கும் எந்த TD வாடிக்கையாளரும்.
6. பிப்ரவரி 26, 2025 நிலவரப்படி தனிப்பட்ட TD கடன் அட்டையின் முதன்மை அட்டைதாரராக உள்ள வாடிக்கையாளர்கள்
7. கடந்த 6 மாதங்களில் தனிப்பட்ட TD கடன் அட்டையைச் செயல்படுத்திய மற்றும்/அல்லது மூடிய வாடிக்கையாளர்கள்.
புதிய காசோலைக் கணக்கு, TD சேமிப்புக் கணக்கு மற்றும் TD கடன் அட்டை இன்னமும் திறந்த நிலையில், நன்றாகப் பராமரிக்கப்பட்ட நிலையில் மற்றும் அதே காசோலைக் கணக்கு வகையுடன் இருந்தால், தேவையான அனைத்துத் தொகுப்புச் சலுகை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பிறகு, 12 வாரங்களுக்குள் புதிய காசோலைக் கணக்கில் $150 டெபாசிட் செய்யப்படும். தொகுப்புச் சலுகையின் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படும் வரை தேவையான அனைத்து நிபந்தனைகளும் தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட வேண்டும். சலுகைக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு TD சேமிப்புக் கணக்கிற்கு மற்றும் கடன் அட்டைக்கு அதிகபட்சம் $150 சலுகை. ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சமாக $150 வரை சலுகை வழங்கப்படும்.
பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களுக்கும், கணக்குக் கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கும், எங்கள் கணக்குகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றி என்பதைப் பார்க்கவும்.
நாங்கள் எந்த நேரத்திலும் தொகுப்புச் சலுகையை மாற்றலாம், நீட்டிக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம், மேலும் அதை அதே தயாரிப்புக்கான பிற சலுகைகள் அல்லது தள்ளுபடியுடன் பயன்படுத்த முடியாது. வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டாலன்றி அனைத்து தொகைகளும் கனேடிய டாலர்களில் காணப்படும். வேறு நிபந்தனைகளும் பொருந்தக்கூடும். பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களுக்கும், கணக்குக் கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கும், எங்கள் கணக்குகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றி என்ற பிரிவைப் பார்க்கவும்.
9 குறுகிய கால TD வரம்பிலா காசோலைக் கணக்குச் சலுகை: தங்கள் மாகாணத்தில் அல்லது பிரதேசத்தில் கணக்கு தொடங்கும் நேரத்தில் முதிர்ச்சிக்கான வயதுடைய, கனடாவிற்குப் புதியவர்களாகத் தகுதிபெறுகின்ற தனிநபர்களுக்குப் பின்வரும் சமயங்களில் $9 ரொக்கச் சலுகை கிடைக்கிறது:
a) TD வரம்பிலா காசோலைக் கணக்கை (புதிய காசோலைக் கணக்கு) மே 26, 2025-இல் இருந்து பிப்ரவரி 28, 2025-க்குள் தொடங்க வேண்டும், மேலும்
(b) புதிய காசோலைக் கணக்கில் பின்வருனவற்றில் ஏதேனும் இரண்டை நிறைவு செய்ய வேண்டும்:
i. அவர்களின் நிறுவனம், ஓய்வூதிய வழங்குநர் அல்லது அரசாங்கத்திடமிருந்து ஒரு நேரடித் தொடர் வைப்புத்தொகையை அமைக்க வேண்டும். ஜூலை 29, 2025-க்குள் புதிய காசோலைக் கணக்கில் முதல் வைப்புத்தொகை செலுத்தப்பட வேண்டும். இந்த நேரடி வைப்பு வாராந்திரம், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, மாதாந்திரம் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படுவது கட்டாயமானதாகும்.
ii. EasyWeb அல்லது TD செயலி மூலம் குறைந்தபட்சம் $50-க்கு ஜூலை 29, 2025-க்கு முன்னர் ஒரு ஆன்லைன் பில் பேமெண்ட் செய்ய வேண்டும்;
iii. குறைந்தபட்சம் $50-க்கு தொடர் முன்னங்கீகாரம் பெற்ற டெபிட்டை அமைத்து, ஜூலை 29, 2025-க்கு முன்னர் புதிய காசோலைக் கணக்கில் முதல் முன்னங்கீகாரம் பெற்ற டெபிட் செலுத்தப்படும் வகையில் அமைக்க வேண்டும். இந்த முன்னங்கீகாரம் பெற்ற டெபிட் வாராந்திரம், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, மாதாந்திரம் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படுவது கட்டாயமானதாகும். முன்னங்கீகாரம் பெற்ற பற்று குறித்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்
இந்தச் சலுகைக்குத் தொடர் நேரடி வைப்பு ஒன்று ஏற்கக்கூடியதா இல்லையா என்பது எங்கள் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும்.
$450 ரொக்கச் சலுகை இவர்களுக்குக் கிடைக்காது:
I. பிப்ரவரி 26, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மூடப்பட்ட TD காசோலைக் கணக்கை ஏற்கனவே வைத்திருந்த வாடிக்கையாளர்கள்; அல்லது
II. பிப்ரவரி 26, 2025 நிலவரப்படி TD காசோலைக் கணக்கை ஏற்கனவே வைத்திருக்கின்ற வாடிக்கையாளர்கள்; அல்லது
III. 2023, 2024, 2025-இல் TD வழங்குகின்ற ஏதேனும் காசோலைக் கணக்குச் சலுகைகளைப் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள்; அல்லது
IV. TD ஊழியர்கள் அல்லது TD ஊழியருடன் கூட்டுக் கணக்கை வைத்திருக்கும் எந்த TD வாடிக்கையாளரும்.
புதிய காசோலைக் கணக்கு ஒரு கூட்டுக் கணக்காக இருந்தால், கணக்குதாரர்களில் ஒருவரேனும் தகுதிக்கான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஒரு புதிய காசோலைக் கணக்கிற்கு ஒரு முறை மட்டுமே $450 ரொக்கச் சலுகை கிடைக்கும் என்ற வரம்பு உள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே $450 ரொக்கச் சலுகை கிடைக்கும் என்ற வரம்பு உள்ளது.
இன்னமும் புதிய காசோலைக் கணக்கு திறந்திருந்து, நன்றாகப் பராமரிக்கப்பட்ட நிலையில் இருந்து, எல்லா நிபந்தனைகளும் தொடர்ந்து பூர்த்திசெய்யப்படுவதாக இருந்தால், அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்ட {12 வாரங்களுக்குள் புதிய காசோலைக் கணக்கில் $450 டெபாசிட் செய்யப்படும். புதிய காசோலைக் கணக்கிற்கான மாதாந்திரக் கட்டணத்தை எந்தக் காரணத்திற்காகவும் ரத்து செய்யவோ, தள்ளுபடி செய்யவோ முடியாது, விதிவிலக்கு: குறைந்தபட்ச மாதாந்திர இருப்பைப் பராமரித்தல், முதியோர் தள்ளுபடியைப் பெறுதல் அல்லது TD வரம்பற்ற காசோலைக் கணக்கு மீது கனடாவிற்குப் புதியவர்கள் 12 மாதக் கட்டணத் தள்ளுபடியைப் பெறுதல். மேலும் புதிய காசோலைக் கணக்கில் $450 வைப்பு வைக்கப்படும் முன்னர் கணக்கின் வகையை மாற்ற முடியாது.
நாங்கள் எந்த நேரத்திலும் $450 ரொக்கச் சலுகையை மாற்றவோ, நீட்டிக்கவோ அல்லது திரும்பபெறவோ செய்யலாம், மேலும் அதனை ஒரே தயாரிப்புக்காக பிற சலுகைகள் அல்லது தள்ளுபடிகளுடன் சேர்த்துப் பயன்படுத்த முடியாது. வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டாலன்றி அனைத்து தொகைகளும் கனேடிய டாலர்களில் காணப்படும். வேறு நிபந்தனைகளும் பொருந்தக்கூடும்.
காசோலைக் கணக்குப் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல் மற்றும் கணக்குக் கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கு, எங்கள் கணக்குகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றி எனும் பக்கத்தைப் பார்க்கவும்.
10 TD® Aeroplan® Visa Platinum* கடன் அட்டை வரவேற்புச் சலுகை: இச்சலுகை பிப்ரவரி 26, 2025 அன்று தொடங்கி மே 28, 2025 ("சலுகைக் காலம்") அன்றுடன் முடிவடைகிறது. இந்தச் சலுகைக்குத் தகுதிபெற, நீங்கள்: (i) TD® Aeroplan® Visa Platinum* அட்டைக் கணக்கிற்கு மே 28, 2025-க்குள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் (ii) கடந்த 12 மாதங்களில் கணக்கு ஒன்றைத் தொடங்கியிருக்கக் கூடாது. ஒரு கணக்கிற்கான உங்கள் விண்ணப்பத்தை TD அங்கீகரித்தாலும் கூட, இந்தச் சலுகையின்படி ஏதேனும் Aeroplan புள்ளிகளை வழங்குவது Aeroplan திட்டத்தின் பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு (aircanada.com/Aeroplan-termsandconditions -இல் உள்ளது) உட்பட்டது. இது Aeroplan கடன் அட்டைதாரராக மாறுவதற்கு மற்றும்/அல்லது புதிய Aeroplan கடன் அட்டையைச் செயல்படுத்துவதற்கும், பயன்படுத்துவதற்கும் அல்லது வைத்திருப்பதற்கும் வழங்கப்படும் ஊக்குவிப்பு அல்லது போனஸ் Aeroplan புள்ளிகளை (எடுத்துக்காட்டாக, இந்தச் சலுகையில் விவரிக்கப்பட்டுள்ள வரவேற்பு போனஸ், கூடுதல் போனஸ் மற்றும் ஆண்டுவிழா போனஸ் உட்பட) வழங்காமல் போகலாம், மேலும் TD அல்லது கணக்கின் அதே அட்டை வகையைக் கொண்ட மற்றொரு வழங்குநருடன் புதிய Aeroplan கடன் அட்டைக் கணக்கைத் தொடங்குவது, செயல்படுத்துவது, பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது தொடர்பான வரவேற்பு அல்லது பிற ஊக்குவிப்பு Aeroplan புள்ளிகளை நீங்கள் முன்பு பெற்றிருந்தால், ஆனால் அவை மட்டுமே வரம்பாக இல்லாமல், சில சூழ்நிலைகளில் அவை ரத்து செய்யப்படலாம்.
(a) (I) கணக்கில் முதல் தகுதியான பர்ச்சேஸ் செய்யப்பட்ட பிறகு 10,000 போனஸ் Aeroplan புள்ளிகள் ("வரவேற்பு போனஸ்"); (II) கணக்கு தொடங்கப்பட்ட 90 நாட்களுக்குள் கணக்கில் $1,000 நிகர பர்ச்சேஸ்கள் (முதல் பர்ச்சேஸ் உட்பட, அதில் ஏதேனும் ரிட்டர்ன்கள் மற்றும் கிரெடிட்டுகளைக் கழித்து) செய்யப்பட்டால் கூடுதலாக 10,000 போனஸ் Aeroplan புள்ளிகள் ("கூடுதல் போனஸ்") மற்றும் (b) முதன்மை அட்டைதாரருக்கு கணக்கின் முதல் ஆண்டுக்கும், கூடுதல் அட்டைதாரர்களுக்கு 3 வரையும் வருடாந்திரக் கட்டணத் தள்ளுபடி (ஒவ்வொன்றும், ஒரு "முதல் ஆண்டு தள்ளுபடி"), இதைப் பெற முடிவதற்கு: தள்ளுபடி பயன்படுத்தப்படும் நேரத்தில் கணக்கு நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும் மற்றும்: (I) கணக்கின் முதன்மை அட்டைதாரர் மே 28, 2025-க்குள் தங்கள் கடன் அட்டையை செயல்படுத்தியிருக்க வேண்டும், மேலும் கணக்கு தொடங்கப்பட்ட முதல் 3 மாதங்களுக்குள் கணக்கில் முதல் தகுதியான பர்ச்சேஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்; மற்றும் (II) (b)(I) -இல் உள்ள முதன்மை அட்டைதாரருக்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு, கூடுதல் அட்டைதாரர்(கள்) மே 28, 2025-க்குள் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். பொருந்தக்கூடிய முதல் வருடாந்திரத் தள்ளுபடியை, பொருந்தக்கூடிய வருடாந்திரக் கட்டணம் தோன்றுகின்ற முதல் அறிக்கையின் தேதியிலிருந்து 2 மாதாந்திர அறிக்கைகளுக்குள் கணக்கிற்கு TD கணக்கில் பயன்படுத்தும்.
TD-க்கு பின்வரும் உரிமைகள் உள்ளன: (i) ஒரு நபரால் தொடங்கப்படும் கடன் அட்டைக் கணக்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், (ii) வரவேற்பு போனஸ், கூடுதல் போனஸ் மற்றும் ஆண்டுவிழா போனஸுக்கு இந்தச் சலுகையின் கீழ் கிடைக்கும் புள்ளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், மற்றும் (iii) முதன்மை அட்டைதாரரின் கடன் அட்டை மே 28, 2025-க்குள் செயல்படுத்தப்படாவிட்டால், அட்டை செயல்படுத்தப்படும் நேரத்தில் கிடைக்கின்ற தற்போதைய சலுகையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சலுகையைத் திருத்துதல். Aeroplan மூலம் வரவேற்பு போனஸ், கூடுதல் போனஸ் மற்றும் ஆண்டுவிழா போனஸ் வழங்கப்படும் நேரத்தில் கணக்கு நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். வரவேற்பு போனஸ், கூடுதல் போனஸ் மற்றும் ஆண்டுவிழா போனஸ் ஆகியவை Aeroplan-ஆல் வழங்கப்பட்டு, கணக்குடன் இணைக்கப்பட்ட Aeroplan உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு இந்தச் சலுகையின் ஒவ்வொரு கூறுக்கும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதிலிருந்து 8 வாரங்கள் வரை காத்திருக்கவும். அந்தக் கணக்கு முதன்மை அட்டைதாரருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். கணக்கை மூடுவது அல்லது வேறு TD கடன் அட்டைக் கணக்கிற்கு மாற்றுவது ஆகியவற்றால், இந்தச் சலுகையின் கீழ் இதுவரை வழங்கப்படாத போனஸ் புள்ளிகளை இழக்க நேரிடலாம்.